Home
News

ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? இப்படி செஞ்ச மற்றவர்கள் யாருமே உங்கள் ஆதிரை யூஸ் செய்ய முடியாது..

ஆதார் அட்டை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஒரு முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. இத்தகைய முக்கியமான ஆவணத்தை மற்றவர்கள் மற்றும் மோசடிக்காரர்கள் பயன்படுத்திவிடாத வகையில், பாதுகாப்பாக வைப்பதும் அவசியம் தானே.! அதை எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம்.

பல்வேறு முக்கிய வேலைகள் மற்றும் நோக்கங்களுக்காக அடையாள ஆவணமாகவும் மற்றும் முகவரி ஆதாரத்தின் நம்பகமான வடிவமாகவும் ஆதார் அட்டை செயல்பட்டு வருகிறது. இருப்பினும், உங்கள் ஆதார் அட்டை திருடப்படலாம் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படலாம் அல்லது அது தவறான கைகளில் விழுந்து மோசடி நடவடிக்கைகளுக்கு கூட தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? யாருமே யூஸ் செய்ய முடியாது..

இதுபோன்ற தவறான செய்லகளில் உங்கள் ஆதார் அட்டை சிக்காமல் இருக்க வேண்டும் என்றாலோ, அல்லது உங்கள் ஆதார் விபரங்களை மற்றவர்கள் தெரியாமல் பயன்படுத்திவிட கூடாது என்றாலோ, உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்து வைத்து பயன்படுத்த பழகிக்கொள்வது மிகவும் முக்கியமானது. இத்தகைய பயன்பாட்டைத் தடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) லாக்கிங் அம்சத்தை வழங்குகிறது.

ஆம், ஆதார் நிர்வாகக் குழு உங்கள் ஆதார் அட்டையைப் லாக் செய்து கொள்வதற்கான வசதியை வழங்கியுள்ளது. உங்கள் ஆதார் அட்டை பூட்டப்பட்டவுடன், அதை எந்த அங்கீகார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியாது. சரி, இந்த அம்சம் எப்படி செயல்படும் என்பதை முதலில் புரிந்துகொள்ளலாம், பிறகு இதை எப்படி லாக் செய்வது என்று கற்றுக்கொள்ளலாம்.

ஆதார் (UID) லாக் மற்றும் அன்லாக் அம்சம் என்றால் என்ன?
ஆதார் அட்டையைப் லாக் செய்வதன் மூலம், பயனர்கள் அவர்களுடைய பயோமெட்ரிக்ஸ், OTP முறை, UID, UID டோக்கன் மற்றும் VID உள்ளிட்ட ஆதார் உடன் தொடர்புடைய எந்த வகையான அங்கீகார தகவலாக இருந்தாலும், அவற்றை மற்றவர்கள் அணுக முடியாதபடியும், மோசடி செய்பவர்கள் திருட முடியாதபடியும் ஆதாரை இந்த அம்சம் பாதுகாப்பாக வைக்கிறது.

ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? யாருமே யூஸ் செய்ய முடியாது..

ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது புதிய ஆதார் அட்டையைப் பெற்றாலோ, UIDAI இணையதளம் அல்லது mAadhaar செயலி மூலம், சமீபத்திய VID ஐப் பயன்படுத்தி UID ஐத் ஆதார் பயனர்கள் திறக்கலாம். தங்கள் ஆதாரை (UID) அன்லாக் செய்த பிறகு, குடியிருப்பாளர்கள் UID, UID டோக்கன் மற்றும் VID ஆகியவற்றைப் பயன்படுத்தி அங்கீகாரத்தை மீண்டும் தொடங்கலாம்.

உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் லாக் செய்வது எப்படி?
https://uidai.gov.in/ என்ற UIDAI இணையதளத்திற்குச் செல்லவும்.
'My Aadhaar' டேப் பக்கத்தை கிளிக் செய்யவும்.
'Aadhaar Services' பிரிவின் கீழ், 'Aadhaar Lock/Unlock' என்பதைக் கிளிக் செய்யவும்.
'Lock UID' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் ஆதார் எண், முழுப்பெயர் மற்றும் பின் கோடு குறியீட்டை உள்ளிடவும்.
'Send OTP' பட்டனைக் கிளிக் செய்யவும்.
OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? யாருமே யூஸ் செய்ய முடியாது..

SMS மூலம் உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி?
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1947 என்ற எண்ணிற்கு OTP கோரிக்கை SMS அனுப்பவும்.
பின்வரும் மெசேஜ்ஜை உள்ளிடவும்: GETOTP.
உதாரணமாக, உங்கள் ஆதார் எண் 123456789012 எனில், நீங்கள் GETOTP 9012 என்ற மெசேஜ்ஜை அனுப்பவும்.
இப்போது, ​​உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1947 என்ற எண்ணுக்கு லாக் கோரிக்கை SMS அனுப்பவும்.

பின்வரும் மெசேஜ்ஜை உள்ளிடவும்: LOCKUIDOTP.
உதாரணமாக, உங்கள் ஆதார் எண் 123456789012 மற்றும் OTP 123456 எனில், நீங்கள் LOCKUID 9012 123456 என்ற செய்தியை அனுப்புவீர்கள்.
உங்கள் ஆதார் அட்டை பூட்டப்பட்டவுடன் UIDAI இலிருந்து SMS உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.
அவ்வளவு தான் இனி யாரும் உங்கள் ஆதார் விபரங்களை உங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How To Lock and Unlock Your Aadhaar Card To Prevent From Others and Fraudsters To Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X