EPFO பயனர்களே கெடுவுக்கு முன் இதை செய்யாவிட்டால் உங்க PF பணம் லாக்! பணம் எடுக்க முடியாதா?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்குடன் ஆதாரை விபரங்களை உடனே இணைக்க வேண்டுமென்று மத்திய அரசு அவசியமாக்கியுள்ளது. இதற்கான இறுதி காலக்கெடு விபரங்களும் இப்போது வெளியாகியுள்ளது. இதை உடனே ஆன்லைன் மூலம் செய்வதெப்படி என்று பார்க்கலாம் வாங்க.
அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியைத் தடுக்கவும், கணக்கு வைத்திருப்பவர்களைப் பாதுகாக்கவும், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்குடன் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மார்ச் 31, 2023 அன்று நிதி அமைச்சகம் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அனைத்து வகையான சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் தபால் அலுவலக திட்ட முதலீட்டாளர்கள் ஆதாரை இணைப்பதை நிதி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஏப்ரல் 1, 2023 முதல் ஆறு மாத காலத்திற்குள் ஆதாரை இந்த கணக்குகளுடன் இணைக்க வேண்டும். ஆறு மாத காலம் செப்டம்பர் 30, 2023 அன்று முடிவடையும். முதலீட்டாளர்கள் ஆதாருடன் பான் எண்ணையும் சமர்ப்பிக்கலாம். ஒருவேளை இதை செய்யாவிட்டால், என்ன நடக்கும்? பிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட தபால் நிலையத்தில் ஆதார் எண்ணை சமர்ப்பிக்கவில்லை என்றாலோ அல்லது ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை என்றாலோ, அந்தக் கணக்கு முடக்கப்படும்.
அத்தகைய சூழ்நிலையில், முதலீட்டாளர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். செலுத்த வேண்டிய வட்டித் தொகை PPF கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் வரவு வைக்கப்படாது. முதலீட்டாளர் தனது பிபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவும் முடியாது. முதிர்வுத் தொகை முதலீட்டாளரால் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படாது என்று இந்த புதிய விதி தெரிவிக்கிறது. சரி, எப்படி ஆன்லைன் மூலம் உங்கள் PF கணக்கை ஆதாருடன் இணைப்பது என்று பார்க்கலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இணையப் பக்கத்தின் மூலம் உங்கள் ஆதாரை உங்கள் PF உடன் இணைக்கும் ஆன்லைன் வசதி இப்போது செயலில் உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் ஒருங்கிணைந்த unifiedportal.epfindia.gov.in பக்கத்தை பார்வையிடவும்.

UAN Member e-Sewa இன் கீழ் இருக்கும் For Employees இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் UAN ஐடி மற்றும் பாஸ்வோர்டை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
'Manage' டேப் கீழ், 'KYC' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் EPF கணக்குடன் இணைக்க பல ஆவணங்களைப் பதிவேற்ற கூறும் பக்கத்திற்கு இது உங்களை அழைத்துச் செல்லும்.
'ஆதார் (Aadhaar)' என்று குறிப்பிடும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
ஆன்லைன் மூலம் இணைக்க முடியாதவர்கள், உங்களுக்கு தகுதியான EPFO கிளைக்குச் சென்று 'ஆதார் விதைப்பு விண்ணப்பப் படிவத்தை (Aadhaar Seeding Application Form)' நிரப்பவும். கோரப்பட்ட ஆதார் அட்டை எண் மற்றும் UAN விவரங்களை கவனமாக நிரப்பவும். உங்கள் PAN, UAN மற்றும் ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும். சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் ஆதார் அட்டை உங்கள் PF கணக்குடன் இணைக்கப்படும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அதற்கான அறிவிப்பைப் பெறுவீர்கள்
உங்கள் பெயர் மற்றும் ஆதார் அட்டை எண்ணை சரியாக நிரப்பி, 'Save' என்பதைக் கிளிக் செய்யவும்.
UIDAI இன் தரவுத்தளத்தில் உங்கள் ஆதார் எண் சரிபார்க்கப்படும்.
UIDAI மூலம் KYC ஆவணம் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு, EPF கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.
உங்கள் கார்டு எண்ணுக்கு அடுத்ததாக 'Verified' என எழுதப்படும்.
இந்த முறையில் உங்கள் PPF கணக்குடன் ஆதார் விபரங்களை ஆன்லைனில் இணைக்கலாம்.


Click it and Unblock the Notifications








