இன்னும் 1 நாள் தான் இருக்கு.. SMS மூலம் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? இதோ வழிமுறைகள்..
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதாவது வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். இதைச் செய்ய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. குறிப்பாக பான் கார்டு உடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் 2026 ஜனவரி 1 முதல் செயலிழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு எண் கட்டாயம் தேவை. மேலும் வங்கி கணக்கு, குறிப்பாக சம்பள கணக்கு தொடங்க வேண்டும் என்றால் பான் கார்டை நிச்சயம் கேட்பார்கள். அதேபோல் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய்கு மேல் பணம் எடுக்கிறீர்கள் அல்லது டெபாசிட் செய்கிறார்கள் எனும் போது பான் எண் கட்டாயம் தேவைப்படும்.

பான் எண் மட்டும் முடக்கப்பட்டால் நீங்கள் பங்குச் சந்தையிலோ அல்லது ஈடிஎப்ஃகளிலோ வர்த்தகம் செய்ய முடியாது. அதேபோல் அரசு முக்கிய திட்டங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கும் பான் கணக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதுவும் பான் கார்டு இல்லாமல் எந்த நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் பான் எண் இல்லாமல் வங்கிகளிடமிருந்தோ அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடன் கூட பெற முடியாது.
அதேபோல் வாகனம் வாங்கவோ அல்லது வீடு வாங்கலோ பான் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் இது செயலிழக்கப்பட்டால், சிக்கல் அதிகரிக்கும். மேலும் ரூ.50,000-க்கு மேல் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளைச் செய்ய விரும்பினால், செயல்பாட்டில் உள்ள பான் எண் இருப்பது அவசியம்.
அதுவும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட அசையா சொத்துகளை நீங்கள் வாங்குகிறீர்கள் அல்லது விற்பனை செய்கிறீர்கள் எனும் போது பான் எண் தேவைப்படும். இப்படி அனைத்து முக்கிய விஷயங்களுக்கும் தேவைப்படும் பான் செயலிழக்கப்பட்டால் சிக்கல் அதிகரிக்கும். எனவே இப்போதே ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பது மிகவும் நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் எஸ்எம்எஸ் மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
உங்கள் ஸ்மார்ட்போனில் கீழ்கண்ட வடிவில் குறுஞ்செய்தியை டைப் செய்யவும்
UIDPAN 12 இலக்க ஆதார் எண், 10 இலக்க PAN எண்
அடுத்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
இணைப்பு வெற்றிகரமாக முடிந்ததும் உங்களுக்கு ஒரு உறுதிப்படுத்தல் செய்தி வரும்.

குறிப்பாக ஆதார் எண்ணை பான் கார்டு உடன் இணைப்பதற்கு இரண்டு ஆவணங்களிலும் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் உடனடியாக உங்களுடைய போனுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் வரும் இதனை அடுத்து நீங்கள் வரக்கூடிய லிங்கின் மூலம் ஆயிரம் ரூபாய் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பது எப்படி?
வருமான வரி இ-ஃபைலிங் (e-Filing) இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதன் முகப்புப் பக்கத்தில் 'Link Aadhaar' என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் 10 இலக்க பான் எண் மற்றும் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி பணம் செலுத்த வேண்டும். கோரிக்கையை சமர்ப்பித்த பிறகு அதைச் செயல்படுத்தி உறுதிப்படுத்தப்படும்.
Source:1


Click it and Unblock the Notifications








