EB கணக்குடன் ஆதார் விபரங்களை இணைப்பது எப்படி? இல்லையென்றால் மின்சாரம் துண்டிக்கப்படுமா?
How to link aadhaar details with EB account: தமிழ்நாடு மிசார வாரியம் சமீபத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மின்சார முறைகேட்டைத் தடுக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். இந்த சமீபத்திய அறிவிப்பினால் மக்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

EB கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டுமா? பீதியில் மக்கள்.!
குறிப்பாக சில மக்கள் இதனால் பீதியில் உறைந்துள்ளனர். சமீபத்திய மின்சார துறை அறிவிப்புப் படி, மானியம் வாங்கும் நுகர்வோர்கள், அவர்களுடைய மின் கணக்கு, அதாவது அவர்களுடைய EB கணக்குடன் உரிய ஆதார் எண் விபரங்களை இணைக்க வேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக எங்கிருந்து இந்த செயல்முறையை செய்து முடிப்பது?
இந்த அறிவிப்பு வெளியாகிய சில தினங்களில், நுகர்வோர் தங்கள் ஆதார் எண் விபரங்களை உள்ளிட்ட வேண்டிய அதிகாரப்பூர்வ லிங்க் நவம்பர் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், இதில் எப்படி ஆதார் எண் விபரங்களைப் பதிவிட வேண்டும் என்று மக்களுக்குத் தெரியவில்லை.

இது கட்டாயம் தானா? செய்ய தவறினால் மின்சாரம் துண்டிக்கப்படுமா?
மறுபுறம், யாரெல்லாம் இந்த ஆதார் எண் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதும் குழப்பமாக இருக்கிறது. இது கட்டாயம் தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உங்கள் EB கணக்குடன் ஆதார் விபரங்கள் இணைக்கப்படவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுமா? இது உண்மை தானா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த ஆதார் இணைப்பை யாரெல்லாம் இணைக்க வேண்டும்?
உங்கள் கேள்விகள் அனைத்திற்குமான தெளிவான பதில் இந்த பதிவில் இருக்கிறது. விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். சரி, முதலில் இருக்கும் குழப்பம், இந்த ஆதார் எண் இணைப்பை யாரெல்லாம் இணைக்க வேண்டும் என்பது பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

இலவச மின்சார மானியம் பெரும் நபரா நீங்கள்? அப்போ கவனியுங்க.!
குடிசை வீட்டில் வசிப்பவர்கள், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறும் நுகர்வோர்கள், விவசாயிகள், 750 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறும் விசைத்தறி நுகர்வோர், 200 யூனில் மின்சாரத்தை இலவசமாகப் பெறும் கைத்தறி நுகர்வோர் என்று இலவசமாக மின்சாரம் மற்றும் மின்சார மானியம் பெறுபவர்கள் இந்த ஆதார் எண் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் விபரங்களை எப்படி EB கணக்குடன் இணைப்பது?
- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tangedco.gov.in/ என்கிற அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் செல்லவும்.
- வலது புறத்தில் 'Link Your Service connection number with Aadhar' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- இங்கு உங்கள் மின் இணைப்பு எண்ணை உள்ளிடவும்.
- மின் இணைப்பு எண்ணைப் பதிவு செய்த பின்னர் ஆதார் நகலை அப்லோட் செய்யவும்.
- நீங்கள் அப்லோட் செய்யும் பைல் ".jpg அல்லது .jpeg ஃபார்மெட்டில் இருக்க வேண்டும்.
- ஆதார் நகலை அப்லோட் செய்துவிட்டு, அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்ப வேண்டும்.
- உங்கள் மின்சார கணக்குடன் இணைப்பில் இருக்கும் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
- OTP உள்ளிட்டு உங்கள் கணக்கை உறுதி செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் மின் இணைப்பு கணக்குடன் ஆதார் எண் விபரங்கள் சேர்க்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.
- ஆன்லைன் மூலம் இணைக்க முடியாதவர்கள், நேரில் சென்று ஆதார் விபரங்களை இணைக்கலாம்.

OTP விபரங்களை உள்ளிட்டு உறுதி செய்யுங்கள்

உங்கள் மின்சார கணக்குடன் ஆதார் விபரங்களை இணைக்க இறுதி காலக்கெடு எப்போது?
மின்சார கணக்குடன் ஆதார் விபரங்களை இணைப்பதற்கு எந்தவொரு காலக்கெடுவும் இப்போது வரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை நீங்கள் விரும்பிய நேரத்தில் ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக செய்துகொள்ளலாம். முடிந்த வரை வேகமாக செய்து முடிப்பது சிறந்தது.

ஒரு ஆதார் பயனர் எத்தனை மின் இணைப்பைக் கொண்டிருக்கலாம்?
மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஒரு ஆதார் எண் விபரங்களைக் கொண்டு மூன்று முதல் ஐந்து வீடுகளில் மின் இணைப்பு வாங்கி இருந்தாலும் கூட பிரச்சினை இல்லை என்பதை மின்சார வாரியம் இப்போது தெளிவுபடுத்தியுள்ளது.

ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுமா?
மின்சார முறைகேட்டைக் கண்காணிப்பதற்காக மட்டுமே இந்த செயல்முறை நடத்தப்படுகிறது என்றும், இவ்வாறு இணைக்கத் தவறினால் மின் இணைப்பு "துண்டிக்கப்படாது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வீண் அச்சம் வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மானியம் பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களும் ஆதாரை இணைக்க வேண்டுமா?
மானியம் பெறாத நிறுவனங்கள், மின்சார நுகர்வோர்கள் ஆகியோர் ஆதார் அட்டையை இணைக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

எதற்காக இந்த ஆதார் எண் இணைப்பை மின்சார வாரியம் மேற்கொள்கிறது?
தற்போது வரை, தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், சில கண்காணிப்புகள் அவசியமாகியுள்ளது. ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிக்கட்ட இம்மாதிரியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications