குஷியான செய்தி: கால அவகாசம் நீட்டிப்பு- ஆதார் பான் இணைக்கவில்லையா., இதோ அறிய வாய்ப்பு!

|

கடந்த இரண்டு மூன்று நாட்களாக எந்த பக்கம் சென்றாலும்., என்னப்பா ஆதார் பான் கார்டு இணைச்சாச்சா., டக்குனு அதை பண்ணுப்பா இல்லனா ஃபைன் போட்ருவாங்க.. என பலரும் அறிவுரை கூறி வந்தார்கள். இந்த நிலையில் இதன் இணைப்புக்கான காலஅவகாசம் ஜூன் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குஷியான செய்தி: கால அவகாசம் நீட்டிப்பு- ஆதார் பான் இணைக்கவில்லையா!

கடந்தாண்டு ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் ஆதார் பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் பலர் ஆதார் பான் கார்டை இணைக்கப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.

இறுதி நாளான நேற்று பலர் ஆதார் பான் கார்டை இணைக்க முயற்சி செய்ததால் சர்வர் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த முறை கொரோனா பாதிப்பால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது, இந்த முறையும் அதேபோல் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கால அவகாசம் நீட்டக்கப்பட்டது.

குஷியான செய்தி: கால அவகாசம் நீட்டிப்பு- ஆதார் பான் இணைக்கவில்லையா!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பால், ஆதார் பான் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் பான் கார்டு இணைக்கப்படாத நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின் Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம். இரண்டாவது வழி 567678 (அ) 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாங்க...

வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்

குஷியான செய்தி: கால அவகாசம் நீட்டிப்பு- ஆதார் பான் இணைக்கவில்லையா!

வழிமுறை-1: முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள் ஆதார் பான் இணைப்பு இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

வழிமுறை-2 அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3 அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

வழிமுறை-4 பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-5 அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை எஸ்எம்எஸ் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்க வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1 முதலில் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட நீங்கள் உங்களின் பான்-ஆதார் இணைப்பை நிகழ்த்தலாம்.

வழிமுறை-2 அவ்வாறு செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதி இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல்வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.

அதே போல் இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்கள் ஆதார் பான் அட்டை இணைத்து விட்டதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Link Aadhaar and Pan Card: Deadline Extend to June 30

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X