உங்க ஆதார் கார்டு.. பான் கார்டு எடுங்க.. உடனே இதை பண்ணிடுங்க.. அப்படியே விட்ராதீங்க.. இல்லனா கஷ்டம்!
இந்த பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விஷயத்தில் பலருக்கு குழப்பங்கள் நீடிக்கிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டும்தான் பான்-ஆதார் லிங்க் செய்ய வேண்டியிருக்கும் மற்றவர்களுக்கு கிடையாதென்று பலர் அதை செய்யாமல் இருக்கின்றனர். ஆனால், அவர்களும் காலகெடுவுக்குள் இணைக்காமல் போயிருந்தால், சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமல்லாமல், பான்-ஆதார் லிங்க் செய்துவிட்ட பிறகு எல்லாம் முடிந்துவிட்டது என்றும் பலர் நினைக்கின்றனர். ஆனால், அவர்களும் இதை கட்டாயம் செய்திருக்க வேண்டும். அப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
இந்தியாவில் பான் கார்டு (PAN Card) மற்றும் ஆதார் கார்டு (Aadhaar Card) ஆகியவை முக்கிய ஆவணங்களாக இருக்கின்றன. அத்தியாவசியமாக தேவைப்படும் வங்கி கணக்கு மட்டுமல்லாமல், பங்கு சந்தை முதலீடு வரையில் இந்த இரண்டு ஆவணங்களும் முக்கியமாக கேட்கப்படுகின்றன. ஆகவே, இவற்றை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, பல முறை நீட்டிப்பும் செய்யப்பட்டது. ஆனால், கடந்த மே 31ஆம் தேதிக்கு பிறகு காலெக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இந்த தேதிக்கு பிறகு பான்-ஆதார் லிங்க் (PAN Aadhaar Link) செய்யாதவர்கள் டிடிஎஸ் தொகை அதிகரிப்பு, முதலீட்டு திட்டங்களில் பான் கார்டு செயலற்ற நிலைக்கு செல்லுதல் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம்.
இது வரி செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், காலக்கெடுவுக்குள் இணைக்காத அனைவருக்கும் அபாரதம் பொருந்தும் என்பதை மறுக்க யாராலும் முடியாது. ஆகவே, மே 31ஆம் தேதி பிறகு பான் ஆதார் இணைப்பை செய்வோர் யாராக இருந்தாலும் அபாரதம் வசூலிக்கப்படும். இருப்பினும், அபராதம் செலுத்தி பான் ஆதார் லிங்க் செய்வோர் அவை இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை சரிபார்க்க தவறவிடுகிறார்கள்.
பான் ஆதார் லிங்க் அபராதம் எவ்வளவு? வருமான வரித்துறையின் உத்தரவின்படி, மே 31ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் மூலம் பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்கும் நபர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இது பான் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தும். இப்போது, பான் ஆதார் லிங்க் ஸ்டேட்டஸ் (PAN Aadhaar Link Status) சரிபார்ப்பு எப்படி என்பதை பார்ப்போம்.
முதலில் வருமான வரித்துறையின் (Income Tax Department) அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும். இப்போது, குயிக் லிங்ஸ் (Quick Links) மெனு இடம்பெற்றிருக்கும். அதற்கு கீழ் லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் (Link Aadhaar Status), லிங்க் ஆதார் (Link Aadhaar), வெரிஃபை பான் ஸ்டேட்டஸ் (Verify PAN Status) போன்ற பல்வேறு டேப்கள் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும்.
இவற்றில் லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் டேப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதை செய்த பிறகு பான் நம்பர் மற்றும் ஆதார் நம்பரை கொடுக்க வேண்டி இருக்கும். அதன்பிறகு வியூ லிங்க் ஸ்டேட்டஸ் (View Link Aadhaar Status) பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, பான் ஆதார் லிங்க் ஸ்டேட்டஸ் காண்பிக்கப்படும்.
அதாவது, உங்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டது அல்லது ஆதார் பான் லிங்கிங் ப்ராக்ரஸ் செய்யப்பட்டுவருகிறது அல்லது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்பது காண்பிக்கப்படும். பெரும்பாலும், பான் ஆதார் லிங்க் செய்யப்பட்டுவிடும். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் இருந்தால், அதை சரி செய்துகொண்டு இந்த லிங்கை தொடருங்கள்.


Click it and Unblock the Notifications