Mobile மூலம் உங்கள் அந்தரங்களை திருடும் ஹேக்கர்கள்.. தெரியாமல் கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. உஷார் மக்களே.!
ஸ்மார்ட்போன்களின் (smartphone) புலக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் சைபர் க்ரைம் (cyber crime) குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போது, ஹேக்கர்களின் (hackers) முக்கிய டார்கெட்டே (target) மொபைல் போன் (mobile phone) பயனர்கள் தான் என்று மாறிவிட்டது.
முதலில் லேப்டாப் (laptop) மற்றும் கம்ப்யூட்டர்களை (computer) தாக்கி வந்த ஹேக்கர்கள், இப்போது மொபைல் (mobile) போன் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைக்கிறார்கள். இதற்கான காரணம், ஒருவரது வங்கி கணக்கு விபரங்கள் (banking account details), சோஷியல் மீடியா பாஸ்வேர்ட்கள் (social media and passwords), அந்தரங்க விஷயங்கள் (sensitive and private data matters) என்று அனைத்துமே அவர்றவர் ஸ்மார்ட்போனிகளில் தான் இப்போது ஸ்டோர் செய்து வைக்கப்படுகின்றன.

இதனால், ஹேக்கர்கள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் பயனர்களையே குறிவைக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதால், உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட்போன்கள்முக்கிய டார்கெட்டாக மாறியுள்ளன. இதனால், இவை ஹேக் (smartphone hacked) செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன. பல்வேறு சமயங்களில் நம்மால் அதனை கண்டறிய முடிவதில்லை.
உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? (Has your smartphone been hacked):
பெரிய சிக்கல்கள் வரும்வரை வாழ்க்கை பரபரப்பில் அதனை நாம் கண்டுகொள்ளாமல் கடந்து விடுகிறோம். எளிமையாக சொன்னால், இன்னேரம் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்திருக்கலாம். அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான சில அறிகுறிகளை உங்களுக்கு காண்பித்திருக்கலாம். அதை நீங்கள் சரியாக கண்டுகொள்ளாமல் கடந்து சென்றிருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யபத்துள்ளதா இல்லையா என்பதை எப்படி கண்டறிவது?
பொதுவாக மால்வேர் (malware), ட்ரோஜன் (Trojan virus) போன்ற கீலாகர்களை (Keyloggers) ஒருவரது ஸ்மார்ட்போனில் செலுத்துவதன் மூலம் சுலபமாக அந்த ஸ்மார்ட்போனின் செயல்பாடுகளை கண்காணித்து தகவல்களை திருட முடியும். அப்படி உங்கள் ஸ்மார்ட்போன் பதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சில குறிப்புகள் இதோ. உங்களால் செய்யப்படாத செயல்பாடுகள் ஏதாவது உங்கள் போனில் உள்ளதா என்று கவனியுங்கள்.
அதாவது நீங்கள் டவுன்லோட் செய்யாத ஆப்கள் (mobile apps), அனுப்பாத மெசேஜ் (messages), கால்கள் (voice calls) என்று ஏதாவது இருந்தால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம். அடுத்தபடியாக, உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் தகல்களை பரிமாற்றம் செய்ய அந்த மால்வேர் எப்போதும் செயல்பாட்டிலேயே இருக்கும்.

உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த அறிகுறி தெரிந்தால் உஷார் மக்களே.! (Be alert people if you see this symptom on your smartphone):
இதனால் பேட்டரி (battery) சீக்கிரம் குறைவது, போன் செயல்பாடு (performance) குறைவது, சீக்கிரம் சூடாவது (over heating), மொபைல் டேட்டா (mobile data) காலியாவது போன்றவை நடக்கலாம். இவையெல்லம் போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள். அடிக்கடி காரணம் இல்லாமல் ஆப்ஸ்களோ அல்லது உங்கள் போனோ தானாக ஆஃப் ஆகி ஆன் ஆகலாம். அடிக்கடி பாப்-அப் (pop-up) மெசேஜ்கள் திரையில் தோன்றலாம்.
போன் அவ்வபோது க்ராஷ் (mobile crash issue) ஆகலாம். உங்கள் போன் கேமராக்களையும் (camera) ஹேக் செய்ய முடியும். இதன் மூலம் நீங்கள் கவனிக்காத நேரங்களில் உங்களையோ, உங்கள் சுற்றுபுறத்தில் உள்ளவற்றையோ புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கலாம். அது மட்டுமின்றி உங்கள் போன் கேமராக்கள் மூலமே உங்கள் செயல்பாடுகளை ஹேக்கர்கள் கண்காணிக்க வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் எடுக்காத புகைப்படங்கள் உங்கள் கேலரியில் இருந்தாலோ, நீங்கள் பயன்படுத்தாதபோது உங்கள் கேமரா தானாக ஆன் ஆனாலோ நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. அது சரி, சும்மா இருக்கும்போது எப்படி ஒரு போன் ஹேக் செய்யப்பட முடியும் என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா? இந்த ஹாக்கிங்கானது இணையதளம் (internet) மட்டுமில்லாமல் சிம்கார்ட் மூலமும் (SIM card) நடக்க வாய்ப்புள்ளது.
ஒருவரது போன் நம்பரை (phone number) தனது சிம் கார்டில் மாற்றி ஹேக்கர் தகவல்களை திருடலாம். சில ஸ்பை ஆப்ஸ்களை போனில் இன்ஸ்டால் செய்து வைப்பதன் மூலமும் தகவல்களை திருடலாம். பொதுவான இடங்களில் இருக்கும் சார்ஜர் கேபிள்களை (public charging ports) பயன்படுத்தி சார்ஜ் போடுவது, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபைகளை (public free WiFi spots) பயன்படுத்து ஹேக் செய்யப்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.
சில இணையதளங்களில் ஃபைல்களை டவுன்லோட் (file download) செய்யும்போது தானாக ஓப்பனாகும் சில லிங்களும் (suspicious links) ஹேக்கரின் லீலைகள் தான். இதுமாதிரி விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பொது இடங்களில் போனை சார்ஜ் செய்யும்போது வெறும் கேபிளை பயன்படுத்தாமல் சார்ஜர் ஹெட்டுடன் (mobile charger head) பயன்படுத்தவும். பவர் பேங்க் (power bank) வைத்திருப்பது மிகவும் நல்லது.
மொபைல் ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க இதை உடனே செய்யுங்கள் (Do this immediately to avoid mobile hacking):
உங்கள் போன் ஹாக் செய்யப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால் உடனடியாக ஆன்டி மாவேர்களை (anti-malware apps) ரன் செய்துவிட்டு உங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றவும். சந்தேக்கிக்கும் படியான ஆப்களை அன்இன்ஸ்டால் (uninstall) செய்யவும். பயன்படுத்தப்படாத நேரத்தில் வைஃபை (WiFi), மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்கலாம். நிலைமை மிகவும் மோசமானால் கடைசி ஆயுதமாக போனை ஃபாக்டரி ரீசெட் (mobile factory reset) செய்யலாம்.


Click it and Unblock the Notifications








