ஆன்லைனில் பொருள் வாங்குவோர் கவனத்திற்கு: இதை ஒரு நிமிடம் பாருங்க!

|

இப்போதெல்லாம் ஆன்லைனில் தான் அதிகமாக பொருட்களை நாம் வாங்குகின்றோம். குறிப்பாக உணவு முதல் ஆடை வரை அனைத்தும் ஆன்லைன் தளங்களில் எளிமையாக கிடைக்கின்றன. ஆனால் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் சிலர் Star Rating மற்றும் Review போன்றவற்றை நம்பி தான் பொருட்களை வாங்குகின்றனர்.

லைத்தளங்களில் இருக்கும்

ஆனால்ஆன்லைன் வலைத்தளங்களில் இருக்கும் Star Rating மற்றும் Review போன்றவை முற்றிலும் உண்மை கிடையாது. அதாவது முன்னணி ஆன்லைன் வலைத்தளங்கள் பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. மேலும் குறிப்பிட்ட ஒரு சில ஆன்லைன் வலைத்தளங்களில் தான் மக்கள் அதிகமாக பொருட்களை வாங்குகின்றனர். அந்த குறிப்பிட்ட ஆன்லைன் தளங்களில் கிடைக்கும்அனைத்து சாதனங்களும் சிறந்தது என்று கூற முடியாது.

என்றால், ஒரு

ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், ஒரு பிரபலமான ஆன்லைன் தளத்தில் ஒரு ஹெட்போன் மாடல் அதிகமாக விற்பனை செய்யவேண்டும் என்றால் Star Rating மற்றும் positive comments கண்டிப்பாக இருக்க வேண்டும். இதை வைத்து தான் நாம் அந்த ஹெட்போன் மாடலை நம்பி வாங்குவோம்.

மிக எளிதாக பணம் சம்பாதிக்கலாம்: பணம் சம்பாதிக்க உதவும் சிறந்த செயலிகள் இதோ!மிக எளிதாக பணம் சம்பாதிக்கலாம்: பணம் சம்பாதிக்க உதவும் சிறந்த செயலிகள் இதோ!

இருப்பதால் மக்கள்

அதாவது ஒரு சில நிறுவனங்கள் தங்களது பொருட்களை அதிகமாக விற்பனை செய்ய வேண்டும் என்று நினைத்து அதிக Star Rating மற்றும் positive comments-களை கொடுத்து வைக்கும். எனவே Top Rating இருப்பதால் மக்கள் நம்பி பொருட்களை வாங்கி விடுகின்றனர். இந்த Star Rating மற்றும் positive comments ஆனது உண்மையில்லை. குறிப்பாக அந்த ஹெட்போன் மாடல் தரம் இல்லாமல் இருக்கலாம் அல்லது டிசைன் போன்ற பல்வேறு பிரச்சனைகள்இருக்கும், ஆனாலும் அதிக Star Rating போன்றவற்றை அந்த நிறுவனம் கொடுத்து விற்பனை செய்யும்.

நல்ல வருமானம் கிடைக்கும்

எதுக்காக இந்த Star Rating மற்றும் Positive comments கொடுக்க வேண்டும் என்று கேட்டால், அந்த ஆன்லைன்வலைத்தளத்தில் Ranking-முதலாவதாக வரவேண்டும். இப்படிச் செய்தால் அந்த பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படும், பின்பு அந்த பொருட்களின் மீது நம்பிக்கை வரும் மற்றும் வருமானமும் அதிகமாக கிடைக்கும். இதுபோன்ற Fake review கொடுப்பதற்கு நிறைய ஏஜென்சி உள்ளது, இதைப் பயன்படுத்தி தான் பல நிறுவனங்கள் தகிடுதத்தம் வேலையை செய்கின்றன. அதேபோல் ஏஜென்சிக்கும் இதன்மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

fake reviews கொடுத்து

குறிப்பாக இதன் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனம், வலைத்தளம், ஏஜென்சி போன்றவை தான் அதிக லாபம் பெறும். ஆனால் மக்கள் செலவு செய்து வாங்கும் பொருட்களுக்கு ஒரு மதிப்பு இருக்காது. ஆனாலும் இதுபோன்ற சில வலைத்தளங்கள் fake reviews போன்றவற்றை தவிர்ப்பதற்கு சில tools-களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதையும் மீறி ஒரு சில நிறுவனங்கள் fake reviews கொடுத்து தங்களது பொருட்களை சத்தமில்லாமல் விற்பனை செய்து வருகின்றன.

 நம்பி வாங்குவது என்ற

சரி எப்படி ஒரு பொருளை நம்பி வாங்குவது என்ற கேள்வி வரும், அதற்கு நாம் வாங்கும் பொருட்களில் இருக்கும் Review-களில் awesome, super போன்ற simple review-களை நம்பக்கூடாது, மாறாக அந்த Review-களில் இருக்கும் எதிர்மறை கருத்துகள், அதாவது சாதனத்தின் குறை என்ன? எத்தனைப் பேர் அதில் உள்ள நன்மைகளை விரிவாக கூறுகிறார்கள் மற்றும் எத்தனை பேர் அதில் உள்ள குறைகளை கூறுகிறார்கள் போன்றவற்றை வைத்து தான் அந்த பொருளை நாம் தேர்வு செய்ய வேண்டும்.

கவனமாக இருக்க வேண்டும்

அதேபோல் அந்த பொருளுக்கு வலைத்தளத்தில் கொடுக்கப்படும் Review ஆனது ஒரே நேரத்தில் கொடுக்கப்பட்டால் அதையும் நம்பக்கூடாது. மேலும் மிகவும் முக்கியமானது நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை யூடியூப் மற்றும் நிறைய வெப்சைட் reviews-களை சரிபார்த்து வாங்குவது நல்லது. அதுவும் நிறைய யூடியூப் சேனல்கள் கொடுக்கும் விமர்சனங்களை வைத்து பொருட்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக negative comments-களை அதிகமாக பார்க்க வேண்டும், அதற்கு பிறகு பொருட்களை நீங்கள் தேர்வு செய்வது மிகவும் நல்லது.ஒருவேளை தரமற்ற பொருளை வாங்கினால் கண்டிப்பாக அது நமக்கு நஷ்டம் தான். எனவேஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Know About the Fake Reviews From Big Companies?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X