Home
News

Apple-ன் புதிய iOS 26 அப்டேட் எந்தெந்த iPhone-களில் கிடைக்கும்? Install செய்வது எப்படி?

ஆப்பிள் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2025) மிகவும் எதிர்பார்க்கப்படியே.. ஐபோன்களுக்கான அடுத்த சாஃப்ட்வேர் அப்டேட் ஆன ஐஓஎஸ் 26 (iOS 26) அறிமுகம் செய்யப்பட்டது. விஷன்ஓஎஸ் (visionOS) ஆல் ஈர்க்கப்பட்ட, இந்த லேட்டஸ்ட் அப்டேட் அந்த ஒரு புதிய புதிய வடிவமைப்பையும் சில ஆச்சரியமான அம்சங்களையும் பெற்றுள்ளது

ஒருவேளை நீங்கள் ஐஓஎஸ் 18 க்கு அடுத்ததாக ஐஓஎஸ் 19 தானே அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று குழம்பினால்.. இனிமேல் ஆப்பிள் அப்படி செய்யப்போவது இல்லை. ஒரு பெரிய மாற்றமாக, ஆப்பிள் இனிமேல் அதன் ஐஓஎஸ் அப்டேட்களை, அவைகள் அறிமுகப்படுத்திய ஆண்டிற்கு ஏற்றபடி பெயரிட உள்ளது.

iOS 26: எந்தெந்த iPhone-களில் கிடைக்கும்? Install செய்வது எப்படி?

இந்த பெயரிடும் முறை.. 2025 ஆம் ஆண்டு இறுதியிலேயே அறிமுகமாகும் 2026 கார் மாடல்களை போல செயல்படும் அப்படியாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ் 19 க்கு பதிலாக, 2025 இல் ஐஓஎஸ் 26-ஐ அறிமுகம் செய்துள்ளது. சரி பெயர் குழப்பம் தீர்ந்து விட்டது. இப்போது இந்த அப்டேட் என்னென்ன ஐபோன் மாடல்களுக்கு கிடைக்கும்? ஐஓஎஸ் 26-ஐ இன்ஸ்டால் செய்வது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்:

ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 26 க்கு தகுதியான ஐபோன் மாடல்கள்: ஆப்பிள் நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் எல்லா ஐபோன்களும் ஐஓஎஸ் 26 அப்டேட்டை பெறாது என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை என்று நம்புகிறோம். எந்தெந்த ஐபோன் மாடல்கள் ஐஓஎஸ் 26-ஐ ஆதரிக்கும் என்கிற பட்டியல் (Eligible iPhones for iOS 26) இதோ:

1. ஐபோன் 16 (iPhone 16)
2. ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus)
3. ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro)
4. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max)
5. ஐபோன் 16இ (iPhone 16e)

6. ஐபோன் 15 (iPhone 15)
7. ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus)
8. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro)
9. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max)
10. ஐபோன் 14 (iPhone 14)

11. ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus)
12. ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro)
13. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max)
14. ஐபோன் 13 (iPhone 13)
15. ஐபோன் 13 மினி (iPhone 13 Mini)

16. ஐபோன் 13 ப்ரோ (iPhone 13 Pro)
17. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (iPhone 13 Pro Max)
18. ஐபோன் 12 (iPhone 12)
19. ஐபோன் 12 மினி (iPhone 12 Mini)
20.ஐபோன் 12 ப்ரோ (iPhone 12 Pro)

21. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் (iPhone 12 Pro Max)
22. ஐபோன் 11 (iPhone 11)
23. ஐபோன் 11 ப்ரோ (iPhone 11 Pro)
24. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் (iPhone 11 Pro Max)
25. ஐபோன் எஸ்இ 2020 (iPhone SE 2020)
26. ஐபோன் எஸ்இ 2022 (iPhone SE 2022)
27. வரவிருக்கும் ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மாடல்கள் ஆனதும் ஐஓஎஸ் 26 ப்ரீ இன்ஸ்டால்டு செய்யப்பட்டு வரும்.

ஐஓஎஸ் 26 பீட்டாவை இன்ஸ்டால் (How to install iOS 26 beta) செய்வது எப்படி? நீங்கள் ஐஓஎஸ் 26 அப்டேட்டையும் அதன்கீழ் கிடைக்கும் புதிய டிசைன் மற்றும் அம்சங்களை முன்கூட்டியே முயற்சிக்க விரும்பினால், டெவலப்பர் பீட்டாவை இன்ஸ்டால் செய்யலாம். ஐஓஎஸ் பீட்டாவை நிறுவ, ஆப்பிள் டெவலப்பர் ப்ரோகிராமில் சேர, உங்கள் ஆப்பிள் ஐடி-ஐ கொண்டு லாக்இன் செய்யவும்; இதில் இலவசமாக சேரலாம்.

ரிஜிஸ்டர் செய்தவுடன் செட்டிங்ஸ் > ஜெனெரல் > சாஃப்ட்வேர் அப்டேட் > பீட்டா அப்டேட்ஸ் > ஐஒஸ் 26 26 டெவலப்பர் பீட்டா (Settings > General > Software Update > Beta Updates > iOS 26 Developer Beta) என்பதற்கு செல்லவும். பொதுவாகவே பீட்டா பதிப்புகள் தரமற்றதாக இருக்கும் என்பதால், ஐஓஎஸ் 16 பீட்டாவை இன்ஸ்டால் செய்யும் முன் உங்கள் ஐபோனை பேக்அப் எடுக்க மறக்காதீர்கள்!

More from GizBot

Best Mobiles in India

English summary
How to install new iOS 26 on Your iPhone Check Eligible Apple iPhones Which Support iOS 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X