Home
News

உங்க வீடு சீலிங் ஃபேனில் காற்று பத்தலையா? இதை செஞ்சா ஸ்பீட் பிச்சுக்கும்.. உடனே செய்ய வேண்டிய சீலிங் ஃபேன் டிப

குடுசையாக இருந்தாலும் சரி, மாளிகையாக இருந்தாலும் சரி, எல்லாருடைய வீட்டிலும் குறைந்தது ஒரு சீலிங் ஃபேன் ஆவது கட்டாயம் இருக்கும். சீலிங் ஃபேன்கள் இல்லை என்றால், நம்முடைய தினசரி வாழ்க்கை எவ்வளவு மோசமாகும் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டியதில்லை.

சீலிங் ஃபேன் (ceiling fan) இல்லை என்றால், நார்மல் நாட்களில் நிம்மதியாக உறங்குவதே சிரமமான காரியமாகும். அதுவும் கோடை காலத்தில் (summer) சொல்லவே வேண்டாம். ஃபேனில் (fan) மொத்தமாகவே 5 ஸ்பீட் லிமிட் (5 speed limit) தான் இருக்கிறது என்றாலும், ஃபேனை 12 ஸ்பீடில் வைங்கப்பா என்று நாம் சொல்லும் அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் நம்மை பாடாய் படுத்திவிடும்.

உங்க வீடு சீலிங் ஃபேனில் காற்று பத்தலையா? இதை செஞ்சா ஸ்பீட் பிச்சுக்கு

ஃபேன் நமது வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. தினசரி நன்றாக உறங்கி அடுத்த நாளை துவங்க நமக்கு அருமையான காற்றோட்டம் தேவைப்படுகிறது. இதை இரவு பகல் என்று ஓய்வு இல்லாமல் சீலிங் ஃபேன்கள் நமக்கு செய்து வருகிறது. இதை சரியாகி செய்து முடிக்க ஃபேனின் வேகம் மிகவும் முக்கியமான (why ceiling fan speed is important) காரணியாக இருக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள ஃபேனின் வேகம் நாளடைவில் மெதுவாக மாறியது போல் உங்களுக்கு ஒரு உணர்வை தரலாம். உண்மையில், நீண்ட நாட்களாக நிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் சீலிங் ஃபேனின் வேகம் (ceiling fan speed) சற்று குறைவது இயல்பான ஒன்றே. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சிலர், சீலிங் ஃபேனின் வேகம் குறைந்த உடன் அதை மாற்றம் செய்து புதிதாக ஒரு சீலிங் ஃபேனை (New ceiling fan) வாங்கிவிடுவார்கள்.

இது உங்கள் செலவை தான் அதிகரிக்கும். இப்படி மாற்றும் பழக்கம் இருந்தால், வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் ஃபேனை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதற்கு பதிலாக சீலிங் ஃபேன்களை நீங்கள் கொஞ்சம் கவனத்துடன் பராமரித்து வந்தால், அதிக செலவு இல்லாமல், உங்கள் ஃபேனின் வேகத்தை புது போல ஹை-ஸ்பீடுடன் (high-speed ceiling fan) பயன்படுத்த முடியும். இதை செய்வதற்கு நாம் சில செயல்முறைகளை செய்ய வேண்டும்.

முதலில் உங்கள் சீலிங் ஃபேனின் வேகம் குறைய ஒரு முக்கியமான காரணம் உங்கள் ஃபேனின் இறக்கைகளில் (ceiling fan wings) படிந்திருக்கும் தூசி (dust) தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஃபேனின் இறக்கை சுத்தமாக இருந்தால், ஃபேனின் வேகம் வேகமாக இருக்கும் என்பதே உண்மை. உங்கள் ஃபேனின் இறக்கைகளை சுத்தமாக வைப்பது அவசியமான ஒன்று.

அடுத்தபடியாக, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் சீலிங் ஃபேனை நீங்கள் பொருத்தும் இடமும் முக்கியமானது. உங்கள் சீலிங் ஃபேன் அந்த அறையின் மைய பகுதியில் இருக்க வேண்டும். அதேபோல், தரையில் இருந்து, உங்களுடைய சீலிங் ஃபேன் 7 அடி உயரத்தில் (7 feet height) இருக்க வேண்டும் என்பது குறிபிடித்தக்கது.

சீலிங் ஃபேன் 29 இன்ச் முதல் 54 இன்ச் மாடல் வரை வருகிறது. இவற்றில் 52 இன்ச் மாடல் ஃபேன் தான் மிகவும் அதிகப்படியான காற்றை வழங்கக்கூடியது. இதை தேர்வு செய்தால், உங்கள் அறைக்கு தேவையான அதிகப்படியான காற்றை நீங்கள் பெறலாம். இதற்கு அடுத்தபடியாக, உங்கள் சீலிங் ஃபேனில் உள்ள கெப்பாசிட்டர் மிகவும் முக்கியமானது.

உங்கள் ஃபேனில் இருக்கும் இந்த கெப்பாசிட்டர் (capacitor) தான், உங்கள் ஃபேனை வேகமாக இயக்குகிறது மற்றும் சீராக இயக்க அனுமதிக்கிறது. அதனால், உங்கள் ஃபேனின் கெப்பாசிட்டரை (ceiling fan capacitor) தரமானதாக வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. அதேபோல், உங்கள் ஃபேனின் வேகம் குறைந்தால், புதிய கெப்பாசிட்டரை மட்டும் மாற்றம் செய்தால் போதுமானது. அடுத்தபடியாக, உங்கள் ஃபேனில் உள்ள இறக்கைகளில் ஏதேனும் வளைவுகள் இருந்தால் அவற்றை உடனே மாற்றம் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to increase your ceiling fan speed easily at home without help of an electrician
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X