SBI வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.. தினமும் UPI பயன்படுத்தும் முன்பு இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் யுபிஐ (UPI) சேவையை அதிக மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதுவும் யுபிஐ செயலிகள் (UPI APP) மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, மளிகை கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.
அதேசமயம் சில வங்கிகள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வரம்பை விதித்துள்ளன. சரி இப்போது இந்த பதிவில் எஸ்பிஐ (SBI) பேங்கில் யுபிஐ பரிவர்த்தனைக்கான வரம்பு எவ்வளவு? மற்றும் அந்த வரம்பை மாற்றுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

SBI வங்கியின் UPI பரிவர்த்தனை வரம்பு: எஸ்பிஐ வங்கி தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக இது வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிகளை மிகவும் கவனமாக நிர்வகிக்கவும், அதிகப்படியான செலவுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி அனைத்து யுபிஐ ஆப்ஸ்களிலும் வாடிக்கையாளர்களை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிக்கிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வரையறுக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகை ரூ.1,00,000 ஆகும். குறிப்பாக இந்த வரம்பை மீறி யுபிஐ வழியாகப் பணம் செலுத்த முடியாது. குறிப்பாக இந்த வரம்புகள் மாற்றத்திற்குட்பட்டவை. எனவே, வாடிக்கையாளர்கள் அவ்வப்போது வங்கியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் வங்கி இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது எஸ்பிஐ வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச UPI பரிவர்த்தனை வரம்பு ரூ. 1,00,000 ஆகும். ஆனால் இந்த வரம்பை ரூ.1,00,000-க்கு மேல் உங்களால் அதிகரிக்க முடியாது என்றாலும், SBI Yono அப்ளிகேஷன் மூலம் உங்கள் நிதித் திட்டமிடல் தேவைகளுக்கு ஏற்றவாறு அதை குறைத்துக் கொள்ளலாம். இப்போது SBI-இல் UPI பரிவர்த்தனை வரம்பை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.
வழிமுறை-1: SBI நெட் பேங்கிங் அல்லது YONO செயலியில் லாக் இன் செய்யவும். அடுத்து மெனுவிலிருந்து UPI Transfer ஆப்ஷனில் கிளிக் செய்யவும்.
வழிமுறை-2: அதன்பின்பு வரும் புதிய பக்கத்தில் 'Set UPI Transaction Limit' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து உங்களுடைய இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டை (internet banking password) என்டர் செய்யவும்.
வழிமுறை-3: உங்களின் தற்போதைய UPI பரிவர்த்தனை வரம்பு மற்றும் புதிய வரம்பை அமைப்பதற்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கும். தற்போது இருக்கும் வரம்பு ரூ.1,00,000 என்றால், அதை மேலும் அதிகரிக்க முடியாது. இருப்பினும், சிறந்த நிதி நிர்வாகத்திற்காக இந்த வரம்பை நீங்கள் குறைக்கலாம்.

வழிமுறை-4: அடுத்து நீங்கள் ரூ.1,00,000 வரையிலான புதிய யுபிஐ பரிவர்த்தனை வரம்பை என்டர் (enter the new limit) செய்யவும். அதன்பின்பு Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
வழிமுறை-5: குறிப்பாக புதிய யுபிஐ பரிவர்த்தனை வரம்பை வெற்றிகரமாக அமைக்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஒடிபிஐ-ஐ என்டர் செய்ய வேண்டும். OTP சரிபார்ப்புக்குப் பிறகு புதிய வரம்பு அமைக்கப்படும். இந்த UPI பரிவர்த்தனை வரம்பை
அமைப்பதன் மூலம், SBI தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல நிதி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எஸ்பி வங்கி பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








