Home
News

உங்கள் WiFi ஸ்பீட் போதியதாக இல்லையா? உடனே இந்த செட்டிங்கை மாற்றுங்கள்.. ஸ்பீட் பிச்சுக்கும்..

உங்கள் வைஃபை (WiFi) மெதுவாக வேலை செய்கிறதா? அல்லது உங்கள் வைஃபை வேகம் (WiFi speed) உங்களுக்கு போதியதாக இல்லையா? அப்படியானால், உடனே இந்த சிம்பிள் செட்டிங்கை உங்கள் வைஃபை சாதனத்தில் மாற்றி அமைத்து பாருங்கள். ஸ்பீட் பிச்சுக்கும்.

உங்கள் வைஃபை சாதனத்தில் சிறிய மாற்றங்களை மேற்கொள்ளவதன் மூலம், பெரியளவில் உங்கள் வைப்பை வேகத்தையும், அதன் பெர்ஃபார்மென்ஸ் திறனையும் உங்களால் மேம்படுத்த முடியும். இதை செய்வதற்கு உங்கள் வீட்டில் உள்ள ரவுட்டர் (router) சாதனத்தின் செட்டிங்ஸ் இல் சில எளிமையான மாற்றங்களை நாம் செய்ய வேண்டும்.

உங்கள் WiFi ஸ்பீட் போதியதாக இல்லையா? உடனே இந்த செட்டிங்கை மாற்றுங்கள்

உங்கள் வைப்பை வேகத்தை அதிகரிப்பதற்கு முன்பு, ஏன் உங்கள் வைப்பைமெதுவாக இயங்குகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் வைஃபை வேகம் (WiFi speed) குறைவதற்கு முக்கிய காரணமே, ஒரு வைபஃபை ரௌட்டர் சாதனத்தில் (WiFi router device) பல டிவைஸ்கள் இணைந்திருப்பது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் வைஃபை வேகத்தை எப்படி அதிகரிப்பது? (How to increase your Wi-Fi speed):

நல்ல இன்டர்நெட் வேகம் (internet speed) இருந்த போதிலும், உங்கள் வைஃபை கனெக்ஷன் (Wi-Fi connection) மந்தமாக இருப்பதற்கு அதிக எண்ணிக்கையிலான டிவைஸ்கள் ஒரே ரௌட்டர் அல்லது மோடம் (modem) உடன் இணைக்கப்பட்டிருப்பதே காரணமாகிறது. இணைக்கப்பட்டிருக்கும் டிவைஸ்களை நம்மால் குறைக்க முடியாது. ஆனால், வைஃபை வேகமும் குறைய கூடாது என்றால், நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கு என்ன தான் தீர்வு?

இதை 'குவாலிட்டி ஆஃப் சர்வீஸ்' (quality of service) என்ற செட்டிங் மூலம் மாற்ற முடியும். இது QoS என்று அழைக்கப்படுகிறது. இந்த செட்டிங், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சாதனங்களுக்கு இணைய அலைவரியை (internet bandwidth) தேர்வு செய்து, முன்னுரிமை அளிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த QoS அம்சத்தை பயன்படுத்த உங்களிடம் சிறந்த வைஃபை ரௌட்டர்கள் (best wifi routers) இருப்பது அவசியமாகும்.

QoS செட்டிங்கை ஆதரிக்கும் அதிக விருப்பங்கள் இருக்கும் ரௌட்டர் இருந்தாலும், இந்த அம்சம் எல்லோருக்கு முழுமையாக கைகொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில், தரமான வைஃபை இணைப்பு இருப்பது (good wifi connection) அவசியமாகிறது. தரமான இணைப்பு இருக்கும் பட்சத்தில் இந்த QoS செட்டிங்ஸ் மூலம் உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

சரி, எப்படி உங்கள் ரௌட்டர் சாதனத்தில் QoS செட்டிங்கை மாற்றி அமைப்பது என்று பார்க்கலாம்.

உங்கள் WiFi ஸ்பீட் போதியதாக இல்லையா? உடனே இந்த செட்டிங்கை மாற்றுங்கள்

1. TP-Link ரௌட்டர் கருவியில் எப்படி QoS செட்டிங்கை மாற்றுவது?
- உங்கள் ரௌட்டர் சாதனத்தை உங்கள் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும்.
- உங்கள் கம்ப்யூட்டர் (Computer) அல்லது லேப்டாப் (Laptop) இல் பிரௌசர் ஓபன் செய்யவும்.
- பின், tplinkwifi.net என்ற பக்கத்தை ஓபன் செய்யவும்.
- அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் (Advanced settings) சென்று QoS விருப்பத்தை ஓபன் செய்யவும்.

- டிவைஸ் (device priority) சென்று உங்கள் இணையத்திற்கான மொத்த அலைவரிசையை அமைக்கவும்.
- அமைத்த செட்டிங்கை Save செய்யவும்.
- மீண்டும் அட்வான்ஸ் செட்டிங்ஸ் சென்று QoS கீழ் அப்பிளிக்கேஷன்பிரேயாரிட்டி (application priority) கிளிக் செய்யவும்.
- இப்போது சரியான பேண்ட்வித் (bandwidth) தேர்வு செய்து சேவ் செய்யவும்.

2. Netgear ரௌட்டர் கருவியில் எப்படி QoS செட்டிங்கை மாற்றுவது?
- நெட்கியர் (Netgear) ரௌட்டர் சாதனத்தை உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும்.
- பிறகு பிரௌசர் சென்று routerlogin.com இல் லாகின் செய்யவும்.
- Advanced >> QoS Setup >> QoS rule விற்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது, Add Priority Rule என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
- Degree of priority அம்சத்தின் கீழ் கேமிங் அல்லது ஆப்ஸ் போன்ற வகையைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்யவும்.
- இறுதியாக Apply கிளிக் செய்யவும்.

இந்த எளிமையான செட்டிங்க்ஸை மாற்றி, உங்கள் வைஃபை வேகத்தையும், அதன் பெர்ஃபார்மென்ஸ் திறனையும் மேம்படுத்த முயற்சி செய்து பாருங்கள். இந்த முறையை பின்பற்றி நீங்கள் செய்த மாற்றத்தினால் எதுவும் மேம்படுத்தல் நிகழ்ந்ததாக என்று கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to improve WiFi router performance and speed with simple QoS settings change Tp-Link and Netgear
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X