Home
News

இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!

உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர் அல்லது சக பணியாளர் என்று மற்றவர்களுடன் அடிக்கடி உங்கள் போனை (Phone) பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால், கட்டாயம் உங்களின் ஸ்மார்ட்போனில் (Smartphone) உள்ள முக்கியமான தகவல் மற்றும் உள்ளடக்கம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது நல்லது.

உங்கள் போனில் பிரைவேட் விஷயங்கள் இருக்கிறதா?

கட்டாயமாக, உங்கள் போனில் சில பிரைவேட் (Private) விஷயங்களை நீங்கள் வைத்திருப்பீர்கள். இவற்றை நீங்கள் மறைத்து வைப்பது மிகவும் பாதுகாப்பானது. உதாரணமாக, நீங்கள் இன்ஸ்டாகிராமில் (Instagram) அதிகமாக சாட்டிங் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், இதை வேறு யாரும் பார்க்க கூடாது என்று நினைத்தால், நீங்கள் இன்ஸ்டாகிராம் ஆப்ஸையே (Instagram Apps) உங்கள் போனில் இருந்து ஹைடு (Hide) செய்துகொள்ளலாம்.

இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட்!

இதேபோல், நீங்கள் மறைக்க விரும்பும் மற்ற மொபைல் ஆப்ஸ்களையும் (Mobile Apps), மற்றவர் கண்களில் இருந்து நீங்கள் மறைத்துக் கொள்ள முடியும். நீங்கள் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை ஹைடு (Android Apps Hide) செய்து, யாருக்கும் தெரியாமல் பயன்படுத்திக்கொள்ள இப்போது ஆண்ட்ராய்டு போன்கள் (Android phones) அனுமதிக்கின்றன. இதை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

மொபைல் ஆப்ஸை மறைத்து வைக்க என்ன காரணம்?

மற்றவர்களிடம் இருந்து ஒரு மொபைல் ஆப்ஸை மறைத்து வைக்க உங்களுக்கு என்ன காரணம் இருந்தாலும் சரி, அதை நீங்கள் ஹைடு (Hide mobile apps) செய்துகொள்ளலாம் என்பதே சிறப்பான விஷயமாகும். உங்கள் Android சாதனத்தில் ஆப்ஸ்களை மறைக்க சில வழிகள் உள்ளன. உங்கள் மொபைல் ஆப்ஸ்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் ஹோம் டிஸ்பிளே (Home screen display) அல்லது ஆப் டிராயர் (App drawer) அல்லது மூன்றாம் தரப்பு ஆப்ஸ் லாஞ்சர் (Apps launcher) போன்றவற்றை நாம் பயன்படுத்தலாம்.

உங்கள் ஆப்ஸை மறைத்து, மற்றவர்களுக்குக் கண்ணுக்குத் தெரியாமல் செய்ய ஆப்ஸ் ஹைடரை (Apps hider) கூடப் பயன்படுத்தலாம். சரி, வாருங்கள் நேரடியாக விஷயத்திற்குச் செல்லலாம்.

ஆண்ட்ராய்டில் ஆப்ஸை மறைக்க முடியுமா?
ஆண்ட்ராய்டில் ஆப்ஸை மறைக்க முடியுமா? என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். இதற்கு 'ஆம்' என்பது தான் பதில். உங்களுடை ஆண்ட்ராய்டு போனின் வெர்ஷனை பொறுத்து அப்ஸ்களை மறைப்பதற்கு வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், "hide apps" அம்சத்தைப் பயன்படுத்தலாம். இந்த அம்சம், உங்கள் ஆப்ஸை மறைக்க அனுமதிக்கிறது.

இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட்!

ஆண்ட்ராய்டில் ஆப்ஸை மறைப்பது எப்படி?
நீங்கள் சாம்சங், ஒன்பிளஸ், பிக்சல் என்று எந்த ஆண்ட்ராய்டு பிராண்ட் பயன்படுத்தினாலும், ஆப்ஸ்களை மறைக்க முடியும். இது இல்லை என்றால், ஆப்ஸ்களை மறைப்பதற்கான மாற்று முறை, போன் லாஞ்சர் ஆப்ஸ் பயன்படுத்துவதாகும். உங்கள் ஹோம் ஸ்கிரீன் தோற்றத்தையும், உணர்வையும் தனிப்பயனாக்க லாஞ்சர் ஆப்ஸ்கள் உங்களை அனுமதிக்கின்றன. சீக்ரெட் போல்டர் உருவாக்குவதன் மூலம் ஆப்ஸ்களை மறைக்க இவை உங்களை அனுமதிக்கின்றன.

ஹோம் ஸ்கிரீன் செட்டிங்ஸ் மூலம் ஆப்ஸ்களை மறைப்பது எப்படி?
பெரும்பாலான Android சாதனங்கள் ஹோம் ஸ்கிரீன் செட்டிங்ஸ் இலிருந்து ஆப்ஸ்களை மறைக்க அனுமதிக்கின்றன. இந்த செட்டிங்ஸ்கள் நேரடியாக மொபைலில் கிடைக்கும். மேலும், இதற்காக மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் தேவையில்லை. எளிமையாக நீங்கள் செட்டிங்ஸ் மெனு ஓபன் செய்து 'hide' என்று டைப் செய்தால் போதும், பல ஹைடு விருப்பங்கள் காண்பிக்கப்படும். இதில் hide apps என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

மற்றொரு வழி
Android சாதன செட்டிங்ஸ் திறக்கவும்.
கீழே ஸ்க்ரோல் செய்து, Home screen கிளிக் செய்யவும்.
பிறகு Hide apps என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் பல பயன்பாடுகளைக் கிளிக் செய்யவும்.
மறைக்கப்பட்ட ஆப்ஸ்கள் ஹோம் ஸ்கிரீன் மெனுவில் தோன்றாது.

இப்படி உங்கள் போனில் உள்ள ஆப்ஸ்களை ஈஸியாக மறைத்து வைத்து பயன்படுத்தலாம். சில போன்களில் hide apps விருப்பம் security அல்லது utilities ஆப்ஷனில் கீழ் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், App Lock என்ற விருப்பமும் உங்கள் போனில் உள்ளது. இதன் மூலம் உங்கள் ஆப்ஸை மறைக்காமல், அதற்கு PIN நம்பர் வைத்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to hide mobile apps on android smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X