Home
News

இது தெரியாம போச்சே.. Airtel பிராட்பேண்ட் பிளான்களை கம்மி விலைக்கு ரீசார்ஜ் செய்ய இப்படி ஒரு வழி இருக்கோ!

"என்னது 15% நேரடி தள்ளுபடி கொடுப்பங்களா.. அடடா இது தெரியாமா ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிளான்களை (Airtel Xstream Fiber Plans) அதிக விலை கொடுத்து ரீசார்ஜ் செஞ்சிட்டு இருக்கோமே!" என்று வருத்தப்படவும், இனிமேல் ஏர்டெல்லின் இந்த தள்ளுபடியை சரியாக பயன்படுத்தவும் நீங்கள் தயாரா?

எந்தெந்த திட்டங்களில் தள்ளுபடி கிடைக்கும்? நீங்களொரு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் வாடிக்கையாளராக இருந்தால், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரின் கீழ் கிடைக்கும் அனைத்து திட்டங்களிலுமே தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும் இந்த தள்ளுபடிகளைப் பெற நீங்கள் நீண்ட கால திட்டங்களை தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.

Airtel Fiber: கம்மி விலைக்கு ரீசார்ஜ் செய்ய இப்படி ஒரு வழி இருக்கோ!

லாங் டேர்ம் பிளான்களை (Long term plans) தேர்வு செய்வதன் மூலம் 15% வரையிலான தள்ளுபடிகள் மட்டுமின்றி, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு, சிபிஇ (CPE) எனப்படும் கஸ்டமர் ப்ரீமீஸ் எக்யுப்மென்ட் (Customer Premise Equipment) கட்டணங்களையும் தளர்த்துகிறது.

நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல் நிறுவனம் தனது எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் வாடிக்கையாளர்களிடம் ரூ.1500 என்கிற நிறுவல் கட்டணத்தை (installation fee) வசூலிக்கிறது. லாங் டேர்ம் பிளான்களை தேர்வு செய்வதால் கஸ்டமர் ப்ரீமீஸ் எக்யுப்மென்ட் கட்டணம் இருக்காது என்பதால், உங்களால் நேரடியாக ரூ.1500-ஐ சேமிக்க முடியும்.

லாங் டேர்ம் பிளான்கள் என்றால் என்ன? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரின் கீழ் கிடைக்கும் ஏதோவொரு திட்டத்தை 3, 6 அல்லது 12 மாதங்களுக்கு தேர்வு செய்தால் அது லாங் டேர்ம் பிளானாகி விடும். இப்படி லாங் டேர்ம் பிளான்களை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் செலுத்தும் மொத்த கட்டணத்தில் இருந்து 15% வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.

குறிப்பாக ரூ.499 க்கு மேலான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களை 6 அல்லது 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்கள வாடிக்கையாளர்களுக்கு முறையே 7.5% மற்றும் 15% தள்ளுபடி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமே சலுகைக்கு தகுதியுடையவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடிகளை தவிர்த்து வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் அதன் பிராட்பேண்ட் திட்டங்களின் கீழ். எஃப்யூபி வரம்பின் (FUP Limit) கீழ்.. மாதந்தோறும் 3333ஜிபி அளவிலான டேட்டா (3333GB Data) கிடைக்கும். இந்த எஃப்யூபி வரம்பை நீங்கள் தாண்டினால், அதாவது 3.3டிபி டேட்டாவை (3.3TB) பயன்படுத்தி விட்டால் இண்டர்நெட் ஸ்பீடின் வேகம் 1 எம்பிபிஎஸ் ஆக (1Mbps) குறைக்கப்படும்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரிலிருந்து புதிய கனெக்ஷனை (New Connection) முன்பதிவு செய்ய விரும்பினால், ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Airtel Official Website) அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை (Airtel Thanks App) அணுகவும். மாறாக உங்கள் அருகில் உள்ள ஏர்டெல் ஸ்டோரை (Airtel Store) நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது உதவிக்கு நிறுவனத்தின் கஸ்டமர் கேர் (Customer Care) குழுவையும் தொடர்பு கொள்ளலாம்.

நாம் லாங் டேர்ம் பிளான்களை தேர்வு செய்வதால் ஏர்டெல்லுக்கு என்ன லாபம்? வாடிக்கையாளர்கள் நீண்ட கால திட்டங்களை தேர்வு செய்வதன் மூலம் அவர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபரின் கீழ் தக்கவைக்கப்பட்டு உள்ளார்கள் என்கிற உத்திரவாதம் ஏர்டெல் நிறுவனத்திற்கு கிடைக்கும். இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் வணிகம் / சந்தை பங்கு நிலையானதாக இருக்கும்!

நினைவூட்டும் வண்ணம், ரிலையன்ஸ் ஜியோவிற்கு (Reliance Jio) அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் தற்போது நாட்டின் இரண்டாவது பெரிய இணைய சேவை வழங்குநராக (Internet service provider) உள்ளது. மேலும் இந்நிறுவனம் மிகவும் வெற்றிகரமான ஃபைபர் பிராட்பேண்ட்டையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தனது ஃபைபர் பிராட்பேண்ட் வணிகத்தை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் என்கிற பிராண்டின் கீழ் நடத்துகிறது.

Best Mobiles in India

English summary
How to get Up to 15 Percentage Discount While Recharging Airtel Xstream Fiber Broadband Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X