Home
News

ஃப்ரீ., ஃப்ரீ., ஃப்ரீ: செட்-டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கும் ஜியோ: வழிமுறைகள் இதோ?

ஜியோ பைபர் இணைப்பில் டேட்டா இலவசமாக வழங்கப்படுகின்றது. அதோடு, புதிய மற்றும் பழைய ஜியோ பைபர் பயனர்களிடம் இதுவரை இணையம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

ரூ.2500 மட்டும் வைப்பு தொகை

ரூ.2500 மட்டும் வைப்பு தொகை

ஜியோ பைபருக்கு பாதுகாப்பு தொகையாக ரூ.2500 தவிர வேறு எந்த தொகையும் வசூலிக்கப்படவில்லை. புதிய மற்றும் பழைய ஜியோ பைபர் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் டேட்டாவிற்கும் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.

சமீபத்தில் பரவிய தகவல்கள்

சமீபத்தில் பரவிய தகவல்கள்

ஜியோ திட்டங்கள் அறிக்கப்பட்ட போது தெளிவு இல்லாத விஷயங்களில் ஒன்று, பயனர்கள் டிடிஎச் அல்லது கேபிள் டிவி இணைப்புக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டா செலவில் வழக்கமான தரவுத் திட்டங்களுடன் தொலைக்காட்சி சேவைகளையும் அனுபவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாதாந்திர பில்லிங் துவங்கியதும், நேரடி சேனல்களை பார்ப்பதற்காக செட்-டாப் பாக்ஸ்களை வழங்கப்படும் என தகவல் பரவியது.

கட்டண சேவையை தொடங்கிய ஜியோ

கட்டண சேவையை தொடங்கிய ஜியோ

ஜியோ பைபர் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே தற்போது முன்னோட்ட சலுகைகளை கட்டண திட்டங்களாக மாற்றத் தொடங்கியுள்ளது. ஜியோ பைபர் சேவையில் முன்னதாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்ஆப் பாக்ஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த சேவையில் இணையும் புதிய சந்தாதாரர்களுக்கும் சலுகைகள் செட் ஆப் சில வட்டங்களில் வழங்கப்படுவாத தகவல்கள் வெளியாகிறது.

ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ்

ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ்

ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் பிளேயர். இதனுடன் HDMI இணைப்பைப் பயன்படுத்தி டிவிகளுடன் இணைக்க முடியும். இது ப்ளூடூத் அடிப்படையிலான ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. செயல்பாடோடு இருக்கும் இன்டெர்நெட் இணைப்புடன் சேனல்களை ஸ்டிரீமிங் செய்யவேண்டும். அதோடு இது ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயக்கப்படுகிறது.

Myjio ஆப் மூலமாக திட்டம் தேர்ந்தெடுக்கலாம்

Myjio ஆப் மூலமாக திட்டம் தேர்ந்தெடுக்கலாம்

Myjio ஆப் வழியாக ஜியோ பைபர் திட்டத்தை தேர்வு செய்யவும், காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி சேவையை பயன்படுத்தலாம். அல்லது ஜியோ பைபர் பெறுவதற்கு அருகில் உள்ள செட்ஆப் பாக்ஸ் டீலர்களை அணுகலாம். வழிமுறைகள் பின்பற்றி அல்லது ஜியோ தொழில்நுட்ப வல்லுநர் உதவியோடு பைபர் இன்ஸ்டால் செய்யலாம்.

தேர்ந்தெடுத்து காணலாம்

தேர்ந்தெடுத்து காணலாம்

இதில் ஹாட்ஸ்டார், யூட்யூப், வூட், ஜியோசாவன், ஜியோ டிவி பிளஸ், சோனி லைவ் மற்றும் ஜியோ சினிமா போன்ற ஆப்ஸ்கள் உள்ளது. இதன் வழியாக செட்-டாப் பாக்ஸில் புதிய ஆப்ஸ்களை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல் கேம்களை கூட டவுன்லோட் செய்வதோடு, பொழுதுபோக்கு, இசை மற்றும் செய்தி சேனல்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட லைவ் டிவி சேனல்களையும் காணலாம்.

Best Mobiles in India

English summary
How to get reliance jio fiber set top box for free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X