ஒரு வருட இலவச நார்ட்டன் மொபைல் செக்யூரிட்டி சேவையை பெறுவது எப்படி?
ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது தனது பயனர்கள் அனைவர்க்கும் நார்ட்டன் மொபைல் செக்யூரிட்டி சேவையை இலவசமாக வழங்கியுள்ளது.
ஜியோ நிறுவனத்துடன் நடந்து வரும் கடும் போட்டியைத் தவிர்க்க, ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்குப் பல புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது தனது பயனர்கள் அனைவர்க்கும் நார்ட்டன் மொபைல் செக்யூரிட்டி சேவையை இலவசமாக வழங்கியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கான நார்ட்டன் மொபைல் செக்யூரிட்டி சேவையை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த ஒரு வருட இலவச நார்ட்டன் மொபைல் செக்யூரிட்டி சேவையை இலவசமாகப் பெறப் பயனர்கள் மை ஏர்டெல் ஆப் அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இலவச சலுகையைப் பெற முதலில் நார்ட்டன் மொபைல் செக்யூரிட்டி செயலியை உங்கள் மொபைல் இல் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். பிறகு மை ஏர்டெல் ஆப் சென்று ரூ.199 திட்டத்தை ஆக்டிவேட் செய்துகொள்ளவும். உங்களுக்கான கூப்பன் கோடு அல்லது நேரடி இலவச சேவைக்கான விபரங்கள் மெசேஜ்ஜாக உங்கள் போனிற்கு வந்துசேரும்.


Click it and Unblock the Notifications