Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?

|

எப்போது ஜூலை 12 ஆம் தேதி வரும் என்று சிலர் பல்லை கடித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். ஏனெனில் அன்றுதான் நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

புது ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்று காத்திருக்கும் பலரின் கவனமும் நத்திங் போன் 1 (Nothing Phone 1) மீதே உள்ளது.

இதற்கிடையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனர் ஆன கார்ல் பெய் தலைமையிலான நத்திங் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 1 மாடலின் ப்ரீ-ஆர்டர் - உலகளவில் - தொடங்கப்பட்டு உள்ளது.

'பாஸ்' கிடைத்தால் 'ஸ்லாட்' கிடைக்கும்!

'பாஸ்' கிடைத்தால் 'ஸ்லாட்' கிடைக்கும்!

நத்திங் நிறுவனம் அதன் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனிற்கான இன்வைட்-ஒன்லி ப்ரீ-ஆர்டருக்கான பப்ளிக் வெயிட்லிஸ்ட்-ஐ திறந்துள்ளது.

இதன் கீழ், நத்திங் நிறுவனத்தின் பிரத்யேக ப்ரீ-ஆர்டர் பாஸை பெறும் வாடிக்கையாளர்கள், அடுத்த மாதம் நத்திங் போன் 1 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அதை வாங்குவதற்கான 'ஸ்லாட்டை' பெற முடியும்.

ப்ரீ-ஆர்டர் பாஸின் விலை என்ன? எப்படி வாங்குவது?

ப்ரீ-ஆர்டர் பாஸின் விலை என்ன? எப்படி வாங்குவது?

நத்திங் போன் 1-க்கான ப்ரீ- ஆர்டர் பாஸ் ரூ.2000 என்கிற "திரும்பப்பெறத்தக்க வைப்புத்தொகை"யின் (refundable deposit) கீழ் வாங்க கிடைக்கிறது.

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள், நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான ஒரு ஸ்லாட்-ஐ பெற விரும்பினால், அதற்காக ப்ரீ-ஆர்டர் பாஸ்-ஐ பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக வாங்கலாம்.

Samsung Samsung "தயவால்" அறிமுகமாகும் iPhone 14 சீரீஸ்; Apple-க்கு வந்த சத்திய சோதனை!

நத்திங் வெப்சைட் வழியாகவும் ப்ரீ-ஆர்டர் பாஸ்-ஐ பெறலாம்!

நத்திங் வெப்சைட் வழியாகவும் ப்ரீ-ஆர்டர் பாஸ்-ஐ பெறலாம்!

நத்திங்கின் ப்ரைவேட் கம்யூனிட்டி மெம்பர்கள் ப்ரீ-ஆர்டர் பாஸிற்கான இன்விடேஷன் கோட்-ஐ இன்று முதல் பெறுவார்கள் என்பது ஒருபக்கம் இருக்க, நத்திங் போன் 1-ஐ வாங்க ஆர்வமுள்ள மற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை கொண்டு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் (Waitlst) சேரலாம்.

அதை தொடர்ந்து நத்திங் பிராண்ட், மின்னஞ்சல் வழியாக ப்ரீ-ஆர்டர் பாஸிற்கான இன்விடேஷன் கோட்-ஐ அனுப்பும். இதுதவிர்த்து ரூ.2000 என்கிற தொகையை செலுத்தி Flipkart வழியாகவும் ஒரு ப்ரீ-ஆர்டர் பாஸை நீங்கள் பெறலாம், இதெல்லாம் ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்பே செய்ய வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ப்ரீ-ஆர்டர் செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்குமா?

ப்ரீ-ஆர்டர் செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்குமா?

கண்டிப்பாக! ரூ.2000 என்கிற திரும்பப்பெறத்தக்க வைப்புத்தொகையை செலுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் நத்திங் ஃபோன் 1 மாடலின் 'ஆக்சஸெரீ' மீதான சலுகையை பெறுவார்கள். மேலும் சில ப்ரீ-ஆர்டர் சலுகைகளையும் பெறலாம்.

உடன் நத்திங் போன் 1-ஐ வாங்குவதற்கான வெயிட் லிஸ்டில் உள்ளவர்கள் தங்கள் ஸ்டேட்டஸ்-ஐ பார்க்க முடியும் மற்றும் வரிசையில் மேலே செல்ல மற்றவர்களைப் பரிந்துரைக்கவும் முடியும்.

போனை வாங்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.2000 கழிக்கப்படுமா?

போனை வாங்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.2000 கழிக்கப்படுமா?

ஆம்! ப்ரீ-ஆர்டர் பாஸை பெற்ற வாடிக்கையாளர்கள், ஜூலை 12 ஆம் தேதி (இந்திய நேரப்படி) இரவு 9 மணிக்கு நத்திங் போன் 1-ஐ வாங்குவதற்கான ஸ்லாட்-ஐ பெறுவார்கள். அந்த நேரத்தில், பாஸிற்காக நீங்கள் செலவழித்த ரூ.2,000 என்கிற வைப்புத்தொகை ஸ்மார்ட்போனின் இறுதி விலையில் இருந்து கழிக்கப்படும்.

இதெல்லாம் ஒருபக்கம் நத்திங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!

நத்திங் போன் 1-இல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

நத்திங் போன் 1-இல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு வெளிப்டுத்தப்பட்டது மற்றும் அது மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியப் பொருட்களால் ஆனது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான Nothing OS கொண்டு இயங்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

லீக்ஸ் தகவல்களை பொறுத்தவரை, நத்திங் போன் 1 ஆனது ஸ்னாப்டிராகன் 778G+ எஸ்ஓசி உடனாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை பேக் செய்யலாம்.

மேலும் இதன் கேமரா செட்டப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilisation - OIS) இடம்பெறலாம் என்றும், இது டூயல் ரியர் கேமராக்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தவிர இது 4,500mAh அல்லது 5,000mAh பேட்டரியுடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்கவும் வாய்ப்புள்ளது.

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நத்திங் போன் 1 ஆனது இந்தியாவில் ரூ.40,000 முதல் ரூ.50,000 க்குள் என்கிற புள்ளியில் ஏதாவொரு இடத்தில் அமரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Here is How to get Nothing Phone 1 Pre Order Pass in India How much it cost Check the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X