ரயிலில் இருந்து போன் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!
ரயிலில் பயணம் செய்யும் போது என்னதான் அனைவருக்கும் ஜன்னல் சீட்டில் அமர வேண்டும், கதவு அருகில் நின்று இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் பயணத்தின் போது இயற்கையை அனுபவிப்பது குறைந்து ஸ்மார்ட் போன்களில் வீடியோக்கள் பார்ப்பது, திரைப்படங்கள் பார்ப்பது என்று ஊர் போய் சேரும்வரை பொழுதை கழிக்கின்றனர்.
அப்படி ஜன்னல் அருகிலோ, கதவு அருகிலோ ஸ்மார்ட் போனை பயன்படுத்தும்போது கை தவறி கீழே விழ வாய்ப்பு அதிகம். அப்படி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த போன் திரும்ப கிடைத்ததாக சரித்திரமே இல்லை என்றே கூறலாம். ஆனால், இனிமேல் அந்த நிலைமை வராது. ரயில் பயணத்தின்போது தவறுதலாக கீழே விழுந்த போனை எப்படி திரும்பப்பெறுவது என்பதை பற்றிதான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப்போகிறோம்.

ரயில் பயணத்தின் போது மொபைல் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
போன் கை தவறி கீழே விழ நேர்ந்தால் முதலில் பதட்டப் படுவதை தவிர்க்கவேண்டும். அனைவரையும் பதட்டப்படுத்துவது, ரயிலின் செயினை பிடித்து இழுத்து அனைவரின் நேரத்தையும் வீணடிப்பது என்று பயனில்லாத காரியங்களை செய்யக்கூடாது. இதை செய்ய கூடாது என்பது தான் முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்தியா முக்கிய விஷயமாகும்.
கீழே விழுந்த போனையே பார்த்துக்கொண்டிருக்காமல், போன் விழுந்த இடத்தின் அடையாளத்தை கண்டறிய வேண்டும். கடைசியாக ரயில் கடந்த ரயில் நிலையம் என்ன என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். கம்பங்கள் அதிகமாக இருக்கும் பகுதியை ரயில் கடக்கும் சமயத்தில் போன் கீழே விழுந்திருந்தால், எந்த கம்பத்தின் அருகில் விழுந்தது என்பதை பார்த்துக்கொள்வது நல்லது.
தண்டவாளம் செல்லும் வழியில் இருக்கும் ஒவ்வொரு மின் கம்பத்திற்கும் பிரத்தியேகமான எண் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்த எண் கம்பத்தின் மேல் எழுதப்பட்டிருக்கும். எனவே போன் விழுந்த இடத்தின் அருகில் இருக்கும் கம்பத்தின் எண்ணை கவனிக்க வேண்டும். இந்த தகவலை பயன்படுத்தி காவல்துறையினர் சுலபமாக கீழே விழுந்த போனை கண்டறிந்து சொல்ல முடியும்.

தண்டவாளத்தில் தவறி விழுந்த போனை எப்படி மீண்டும் மீட்டெடுப்பது? எது சரியான வழி.!
தண்டவாளம் போன்ற விட்டவெளியில் விழுந்த போனை கண்டறிவதை விட மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இருக்கும் பகுதிகளில் போன் விழுந்திருந்தால் அவற்றை மீட்பது எளிது. போதுவாக அடர்ந்த மரங்கள் செடிகள் காடுகள் இருக்கும் இடங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து இருக்கும் என்பதால் கீழே விழுந்த போனானது விழுந்த இடத்திலேயே பாதுகாப்பாக இருக்கும்.
உங்களது போன் கீழே விழுந்தவுடன் அருகில் இருப்பவர்களிடம் போனை வாங்கி ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்திய ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி எண் "182". ரயில்வே பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கும்போது உங்கள் போனின் மாடல், ப்ராண்ட் பெயர், எந்த இடத்தில் இருந்தது என்பதற்கான அடையாளங்கள், மின்கம்பத்தின் எண், போன் கீழே விழுந்த நேரம், அருகில் இருக்கும் ரயில் நிலையம் போன்ற மற்ற குறிப்புகளை தெளிவாக கூற வேண்டும்.
போனை எளிதாக கண்டுபிடிக்க இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும்.கீழே விழுந்த போன் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், காவல்துறையினர் அதனை அருகில் இருக்கும் காவல்நிலையத்திடம் ஒப்படைத்துவிட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கும். பின்னர் அந்த ரயில்நிலைய நிர்வாகத்திடம் உங்களது விபரங்கள் கூறி உங்களது போனை பெற்றுக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








