Home
News

கூகுள் பே இருக்கா? இனி எளிதாக கடன் பெற விண்ணபிக்கலாம்.. இதோ வழிமுறைகள்.. விட்றாதீங்க..

இந்தியாவில் போன்பே (PhonePe) , பேடிஎம் (Paytm) செயலிகளை விட கூகுள் பே (Google Pay) செயலியை அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இதில் அவ்வப்போது புதிய அம்சங்கள் மற்றும் புதிய சேவைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த கூகுள் பே செயலிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் ரிவார்ட் (Reward) கேஸ்பேக் (cashback) போன்ற சலுகைகளை அவ்வப்போது வழங்குகிறது கூகுள் பே செயலி. குறிப்பாக இது போன்ற சலுகைகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. எனவே தான் போன்பே, பேடிஎம் செயலிகளை விட கூகுள் பே செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த கூகுள் பே செயலியில் லோன் வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

கூகுள் பே இருக்கா? இனி எளிதாக கடன் பெற விண்ணபிக்கலாம்..  இதோ வழிமுறைகள

அதாவது அவசரக்கால தேவைகளுக்குக் கூகுள் பே செயலி மூலம் எளிதாகக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதுவும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 9 லட்சம் வரை இதில் கடன் வாங்கலாம். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்குக் கடன்களை வழங்கப் பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது கூகுள் பே. இதன் மூலமாகக் கடன் பெறலாம்.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் கூகுள் பே நேரடியாகக் கடன்களை வழங்காது. எனவே இதனால் வாடிக்கையாளர்கள் கடன் பெறும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரி இப்போது கடன் பெறுவது எப்படி? இதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது கடன்பெற விருப்பம் உள்ள பயனர்கள் தங்களது மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் கடன் (get loan) என்ற விருப்பம் இருக்கும். அதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, வருமானம் போன்ற அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன்பின்னர் கடன் விண்ணப்பத்தில் அடையாளச் சான்று, வருமானச் சான்று, வங்கி கணக்கு உள்ளிட்டவை கேட்கப்படும். இதன் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அடுத்து அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்பு கடன் ஒப்புதல் மற்றும் கடன் தொகையின் ரசீது பற்றிய விவரம் கிடைக்கும்.

கூகுள் பே இருக்கா? இனி எளிதாக கடன் பெற விண்ணபிக்கலாம்..  இதோ வழிமுறைகள

முன்பு கூறியபடி குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முல் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம். அதுவும் மாதாந்திர தவணை ரூ.1000 முதல் துவங்குகிறது. கடன் பெறும் தொகையைப் பொறுத்து தவணை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மொபைல் போன் ஆப் மூலம் கடன் வாங்குவதற்கு இதுபோல பல வழிகள் உள்ளன. குறிப்பாக கடன் வழங்கும் நிறையச் செயலிகள் (ஆப்) இருந்தாலும் நாம் கடன் பெறுவதற்கு முன்பு அந்த செயலி தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின்பு தான் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மொபைல் போன்களில் கடன் பெறும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to get loan on Google Pay app: Here are the simple steps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X