10 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் PAN கார்டு.. ஆதார் போதும்.. பெறுவது எப்படி? இதோ வழிமுறைகள்..
இந்தியாவில் ஆதார் அட்டை (Aadhaar card) போலவே பான் அட்டையும் (PAN card) ஒரு முக்கிய அரசு ஆவணமாகக் கருதப்படுகிறது. அதாவது பல முக்கிய சேவைகளைப் பெறுவதற்கு பான் கார்டு தான் தேவைப்படுகிறது. அதுவும் ஆதார் அட்டையில் உள்ள ஆதார் எண் எப்படி உங்களின் அடையாள விபரங்களை வெளிப்படுத்துகிறதோ, அதேபோல் பான் அட்டை உங்களின் நிதி வரலாற்றைக் காண்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்தல், வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு கட்டாயமாகும். ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இல்லை, ஆனால் எதாவது முக்கிய விஷயங்களுக்குத் தேவைப்பட்டால் 10 நிமிடங்களில் பான் கார்டை பெறமுடியும். சரி இப்போது இ-பான் கார்டை பெறுவது எப்படி என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இ-பான் கார்டை உடனடியாக பெறுவதற்கான எளிய வழிகள்
வழிமுறை-1: முதலில் நீங்கள் வருமான வரித் துறையின் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து இந்த இ-ஃபைலிங் போர்டல் ஹோம் பேஜில் கிளிக் செய்து, "Instant e-PAN" என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்களின் 12 இலக்க ஆதார் நம்பரை என்டர் செய்து, "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
வழிமுறை-3: அதன்பிறகு OTP சரிபார்ப்பு பக்கத்தில், "நான் ஒப்புதல் விதிமுறைகளைப் படித்துவிட்டேன், மேலும் தொடர ஒப்புக்கொள்கிறேன்" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின் "Continue" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-4: அடுத்து ஒடிபி சரிபார்ப்பு பக்கத்தில், ஆதார் (Aadhaar) அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க ஒடிபி-ஐ என்டர் செய்யவும். இப்போது ஆதார் விவரங்களைச் சரிபார்க்கவும். அதாவது திரையில் உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் உள்ளிட்ட ஆதார் விவரங்களைச் சரிபார்க்கவும். அனைத்து விவரங்களும் துல்லியமாக இருப்பதைச் சரிபார்த்த பின்பு Continue என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை-5: அதன்பின்பு உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதை செய்யலாம். இந்த சரிபார்ப்புக்குப் பிறகு ஒரு acknowledgment number உருவாக்கப்படும்.
வழிமுறை-6: அவ்வளவு தான் உங்கள் e-PAN உருவாக்கப்பட்டு உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மின்னஞ்சல் முகவரி கொடுக்காதவர்கள் இந்த e-filing போர்ட்டலில் இருந்து உடனே டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த e-PAN வழக்கமான PAN அட்டையைப் போன்றது. உங்களுக்குத் தேவைப்படும் முக்கிய இடங்களில் நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். அதுவும் e-PAN-ஐ பிரிண்ட் அவுட் எடுத்து லேமினேஷன் செய்தும் வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பான் கார்டைத் தவறாகப் பயன்படுத்துவதும், 2 பான் கார்டு பெறுவதும் மிகப் பெரிய குற்றமாகும். இதற்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். எனவே தெரியாமல் கூட போலி அல்லது ஒன்றுக்கும் மேற்பட பான் கார்டுகளை வைத்திருக்காதீர்கள். இப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால், அதை உடனடியாக சமர்ப்பிப்பு செய்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications








