Home
News

எமெர்ஜென்சிக்கு இலவச டேட்டா.. Jio மற்றும் Airtel பயனர்களுக்கு மட்டுமே.. எப்படி சில நொடியில் வாங்குவது?

மொபைல் டேட்டா (Mobile data) என்பது இன்று மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சிறிது நேரம் டேட்டா இல்லையென்றால் கூட, நமது நிலைமை திண்டாட்டமாகிடும் நிலைமைக்கு இப்போது நாம் மாற்றப்பட்டுவிட்டோம். ஒரு காலத்தில் வாய்ஸ் கால் நன்மை நம்மை ஆண்டுகொண்டிருந்தது.

இந்த ஆளுமை இப்போது மொபைல் டேட்டா பக்கம் மாறிவிட்டது. காரணம் மக்கள் இப்பொது அதிக டேட்டா நன்மையை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் மெசேஜ் (WhatsApp Message), வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் கால் (WhatsApp calls), வீடியோ கால் அழைப்பு (Video call), இன்ஸ்டாகிராம் (Instagram), யூடியூப் (YouTube), ஆன்லைன் பேங்கிங் (Online Bnaking) என்று பல சேவைகளுக்கு டேட்டாவின் தேவை இப்போது மிக முக்கியமாகிவிட்டது.

எமெர்ஜென்சிக்கு இலவச டேட்டா.. Jio மற்றும் Airtel பயனர்களுக்கு மட்டுமே

எமெர்ஜென்சிக்கு இலவச டேட்டா வேண்டுமா? ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் என்ன செய்ய வேண்டும் (Do you need emergency data? jio and airtel data loan)?

சமீபத்தில் நோக்கியா (Nokia) நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, சராசரி மனிதருக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 25GB 4G டேட்டா தேவைப்படுகிறது என்று கணக்கெடுப்பு சொல்கிறது. என்னதான் மக்கள் பார்த்துப்பார்த்து டேட்டா நன்மையை பயன்படுத்தி வந்தாலும், பெரும்பாலான நேரத்தில் டேட்டா ஒரு நாள் நிறைவடைவதற்குள் முடிந்துவிடுகிறது. இதற்கு தினசரி டேட்டா வரம்பு தான் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

தினசரி டேட்டா முடிந்துவிட்டால் என்ன செய்வது? திடீரென நமக்கு டேட்டா தேவைப்பட்டால் என்ன செய்வது? அவசரத்திற்காக காசு கொடுத்து டேட்டா வாங்க வேண்டுமா? என்றே நம் மனம் நினைக்கும். இலவசமாக டேட்டா கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று சிலர் நினைக்கலாம். இந்த சிந்தனைக்கு ஏற்ற பலனை இப்போது ஜியோ (Jio) நிறுவனம் மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனம் வழங்குகிறது.

எந்தவித கட்டணமும் இல்லாமல் ஜியோ உங்களுக்கு 6ஜிபி வரையிலான டேட்டா வழங்குகிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் இந்த டேட்டா உங்களுக்கு கிடைக்கும். ஏர்டெல் நிறுவனம் உங்கள் அவசரத்திற்கு ஏற்ப 1ஜிபி வரையிலான டேட்டாவை கடனாக வழங்குகிறது. ஆம், இது உங்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் கிடைக்கிறது என்றாலும், நீங்கள் கடனாக பெற்ற டேட்டாவை மீண்டும் திருப்பிவழங்க வேண்டும்.

எமெர்ஜென்சிக்கு இலவச டேட்டா.. Jio மற்றும் Airtel பயனர்களுக்கு மட்டுமே

இலவசமாக டேட்டா லோன் பெறுவது எப்படி? (How to get free data loan):

ஜியோ நிறுவனத்திடம் இருந்து எப்படி இலவசமாக டேட்டாவை பெறுவது? அல்லது கடனாக பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இந்த இலவச டேட்டாவை பெறுவதற்கு, உங்களிடம் மை ஜியோ ஆப்ஸ் (MyJio Apps) இருக்க வேண்டும்.
- MyJio Apps திறந்துகொள்ளுங்கள்.
- Play&Win என்ற விருப்பத்தை செலெக்ட் செய்யுங்கள்.
- காண்பிக்கப்படும் சலுகைகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யுங்கள்.
- கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.
- சலுகைக்கு ஏற்ற டேட்டா (6GB வரை) உங்களுக்கு வரவு வைக்கப்படும்.

ஐர்தேல் பயனர்கள் எப்படி டேட்டாவை கடனாக பெறுவது?
- 1 ஜிபி டேட்டா கடனைப் பெற
- பயனர் '52141' ஐ அழைக்கலாம்.
- அல்லது '*567*3#' டயல் செய்யலாம்.

குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு நெட்வொர்க்கில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். 1 ஜிபி டேட்டா இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. புதிய டேட்டா பேக் மூலம் உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்யும்போது, ​​அதில் இருந்து 1 ஜிபியை ஏர்டெல் கழிக்கும். நிலுவையில் உள்ள கடனைச் செலுத்தும் முன் உங்களால் கூடுதல் டேட்டா கடனைப் பெற முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to get free data loan from Jio and Airtel prepaid users check immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X