சென்னை: திருமண, துக்க நிகழ்ச்சிகளுக்கு பயணம் செய்ய இ-பாஸ்.! பெறுவது எப்படி?

|

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றுதான், கூறவேண்டும், தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவும் வேகம் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாள்களாக மிக அதிகமான பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. சென்னையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுஅமலில் உள்ளது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய நிகழ்ச்சிகளாக முன்கூட்டியயே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள், எதிர்பாராத மரணம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான
பயணங்கள் மேற்கொள்வது குறித்து ஆணையர் பிராகஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

BSNL ரூ.96 திட்டத்தில் அதிரடி மாற்றம்: நமக்கு லாபமா., நஷ்டமா?BSNL ரூ.96 திட்டத்தில் அதிரடி மாற்றம்: நமக்கு லாபமா., நஷ்டமா?

144தடை உத்தரவு அமலில்

அதன்படி கொரோனா வைரஸ் நோய்தெற்றைத் தடுக்கும் விதத்தில் மாநிலம் முழுவதும் 144தடை உத்தரவு அமலில்உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுடைய சில குறிப்பிட்ட அத்தியாவசிய நிகழ்சிகளான முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்டதிருமணங்கள், எதிர்பாராமல் ஏற்படும் மரணத்திற்கான இறுதிச்சடங்குகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ள அனுமதிச் சீட்ட பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டவந்தது.

Google Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.!Google Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.!

அரசு மாநில இ-பாஸ்

தற்சமயம் தமிழ்நாடு அரசு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே அவரசஅனுமதிச் சீட்டாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

நிலவு வரைபடம் தயார்! உலக உருண்டைக்கு சரியான போட்டி‌நிலவு வரைபடம் தயார்! உலக உருண்டைக்கு சரியான போட்டி‌

இ-பாஸ் கட்டுப்பாட்டு

அதன்படி ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள், அவசர மருத்துவ சிகிச்சை (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்) மற்றும் எதிர்பாராவிதமான மரணம் (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்) அரசு வழிகாட்டுதலின்படி அவசரப் பயண அனுமதிச் சீட்டு(Emergency pass) வழங்கும் அதிகாரம் மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கருந்துளை விழுங்கியும் உயிர்பிழைத்த நட்சத்திரம்!கருந்துளை விழுங்கியும் உயிர்பிழைத்த நட்சத்திரம்!

நேரில் வர வேண்டாம் என

எனவே http://tnepass.tnega.orgஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயண அனுமதிச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவசர அனுமதிச் சீட்டு பெற பெருநகர சென்னைமாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
How to Get ePass to Travel for marriage functions in Chennai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X