Home
News

பான் கார்டு தொலைந்துவிட்டதா? ஆன்லைனில் டூப்ளிகேட் கார்டுக்கு அப்ளை செய்வது எப்படி? இதோ வழிமுறைகள்..

இந்தியாவில் ஆதார் கார்டு (aadhaar card) போன்று பான் கார்டும் (pan card) மிகவும் முக்கியமானது. குறிப்பாக இந்த பான் கார்டு ஆனது வெறும் அடையாள அட்டை என மட்டுமல்லாது வங்கி சேவை, வருமான வரி, வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்திற்கும் தேவைப்படுகிறது.

குறிப்பாக நிதி நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், பல அரசு திட்டங்களில் நன்மைகள் பெறவும் பான் கார்டு தேவையாகிறது. அதாவது சேமிப்புத் திட்டங்கள், அரசின் நலத் திட்ட உதவிகள் போன்றவற்றைப் பெறவும் இது முக்கியமான ஆவணமாகும். இந்த பான் கார்டில் நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், தந்தை பெயர், முகவரி, புகைப்படம் போன்ற அனைத்து முக்கிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

பான் கார்டு தொலைந்துவிட்டதா? டூப்ளிகேட் கார்டு.. அப்ளை செய்வது எப்படி?

இப்படி அனைத்து விஷயங்களுக்கும் பயன்படும் உங்கள் பான் கார்டு தொலைந்து விட்டால் அதனை எப்படி மீண்டும் திரும்பப் பெறுவது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம். அதாவது இதற்காக வருமான வரித்துறை தனி இணையதளத்தை இயக்கி வருகிறது.

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
முதலில் https://onlineservices.proteantech.in/paam/ReprintEPan.html என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லுங்கள்.

அடுத்து உங்கள் விவரங்களை உள்ளிடவும். அதாவது பான் எண், ஆதார் எண் (Aadhaar Number), பிறந்த மாதம் மற்றும் வருடத்தை உள்ளிட வேண்டும். இதனைத் தொடர்ந்து கீழே இருக்கக்கூடிய பாக்ஸை டிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும்.

அதன்பின்பு உங்கள் ஆதார் (aadhaar) கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Verify செய்யவும். இவ்வாறு சப்மிட் செய்யப்பட்ட பிறகு பான் கார்டினை பெற கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருப்பவர்கள் 50 ரூபாயும், வெளிநாடுகளில் இருப்பவர்கள் 959 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

அதுவும் டெபிட் கார்டு, யுபிஐ அல்லது கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் வாயிலாகப் பணம் செலுத்தலாம். அதைத் தொடர்ந்து உங்களுக்கான ஒரு அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப் கிடைக்கும். அந்த 15 இலக்க கொண்ட அக்னாலேஜ்மென்ட் நம்பர் மூலம் உங்கள் PAN கார்டு நிலையை ஆன்லைனில் Track செய்யலாம்.

இதனைத் தொடர்ந்து இதனை அடுத்து 15 லிருந்து 20 நாட்களுக்குள் டூப்ளிகேட் பான் கார்டு நீங்கள் பதிவு செய்த முகவரிக்கு கொரியர் முறையில் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.

ஈ பான் (EPAN) கார்டு

ஒருவேளை உங்ளுகக்கு ஈ பான் (EPAN) கார்டு வேண்டும் என்றால் https://www.onlineservices.proteantech.in/paam/requestAndDownloadEPAN.html என்ற
இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பான் நம்பர் மற்றும் ஆதார் நம்பர் உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பின்பு உங்களுடைய பிறந்த மாதம் மற்றும் வருடத்தை உள்ளிட வேண்டும்.

பான் கார்டு தொலைந்துவிட்டதா? டூப்ளிகேட் கார்டு.. அப்ளை செய்வது எப்படி?

இதனை தொடர்ந்து கீழே இருக்கக்கூடிய பாக்ஸை டிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும். உங்களின் பான் கார்டினை பிடிஎஃப் (PDF) முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு
ஒருவேளை உங்களது பான் கார்டு தொலைந்து இருந்தால் பாதுகாப்பு நோக்கில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சிஎஸ்ஆர் அல்லது எப்ஐஆர் பதிவு செய்துவைப்பது நல்லது. இது எதிர்காலத்தில் எந்தவொரு தவறான பயன்பாட்டையும் தவிர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to get duplicate PAN card online if you have lost your PAN card: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X