கேட்கும் அனைவருக்கும் நியாபகம் இருக்கும்: பிஎஸ்என்எல் பேன்ஸி எண் வாங்குவது எப்படி?
பேன்ஸி நம்பர் மீது ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் பேன்ஸி விஐபி எண்களை ஆன்லைன் மூலம் பெறுவதற்கானா வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

நம்பர் பேன்சியாக இருக்க வேண்டும்
பொதுவாக ஒருவர் தங்களிடம் போன் நம்பர் கேட்கும்போது அதை எப்படி இருந்தாலும் முடிந்தளவு எளிதாக்கி சொல்லுவோம். அதுவே நம்பர் பேன்சி நம்பராக இருந்தால் அதை சொல்லும்போதே ஒரு கெத்தோடு அழகாக சொல்வோம். நம்பர் கேட்பவர் ஆஹா., நம்பர் நல்லா இருக்கே என கூறும்போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி.

பேன்ஸி நம்பர் அல்லது ஆடம்பர நம்பர்
பேன்ஸி நம்பர் அல்லது ஆடம்பர நம்பர் மீது ஈர்ப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும்போது வாடிக்கையாளர்கள் நம்பரை எளிதாக மனப்பாடும் செய்து கொள்வதற்காக மட்டுமே பேன்ஸி நம்பர் தேவை அதிகமாக இருந்தது. இப்போது வணிகம் மட்டுமின்றி பேன்ஸி நம்பர் என்பது தனிநபர்களிடமும் அதிகரித்துள்ளது.

பிஎஸ்என்எல் நெட்வொர்க் பேன்ஸி எண்
பேன்ஸி நம்பர் தேவை இருக்கும் வாடிக்கையாளர்கள் அதை எவ்வாறு பெறுவது என சந்தேகம் இருக்கலாம். பிஎஸ்என்எல் தற்போது அனைத்து பகுதிகளிலும் தங்களது சேவையை விரிவுப்படுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நெட்வொர்க் பேன்ஸி எண்ணை எப்படி ஆன்லைன் மூலம் வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

தொடர்ச்சியாக உச்சரிக்கும் படியான எண்
பேன்ஸி நம்பரை பலரும் பல வகையில் வாங்க முயற்சிப்பார்கள், பூஜ்ஜியம் அதிகமாக வரும் எண், தொடர்ச்சியாக உச்சரிக்கும் படியான எண், தங்களது பிறந்தநாள் தேதி தங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்தாள் தேதி ஆகியவைகள் இடம்பெற வேண்டும் என நினைப்பார்கள். ஒருவருக்கு நம்பரை கூறும்போது முதல்தடவையே அவர்கள் தங்களது நம்பரை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

ஆடம்பர எண் பெறுவதற்கான வழிமுறைகள்
பிஎஸ்என்எல் ஆடம்பர எண்ணை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். ஆரம்பத்தில் https://cymn.bsnl.co.in/ என்ற இணையதளத்தை திறந்து பார்வையிட வேண்டும். தங்களது இருப்பிடம் அல்லது சேவைகளை பெற விரும்பும் மாநிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பட்டியலில் பல்வேறு எண்கள் காட்டப்படும். இதில் இரண்டு கூடுதல் தேர்வும் காட்டப்படும் ஒன்று தேர்வு எண், இரண்டாவது ஆடம்பர எண் விருப்பம் ஆகியவை காட்டப்படும்

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யனும்
குறிப்பிட்ட எண்ணை தேர்ந்தெடுத்தபின் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு பின்எண் பெறுவதற்கு மொபைல் எண் பதிவிட வேண்டும். பின் வாடிக்கையாளர் பராமரிப்பு அல்லது சேவை கிளையை தொடர்பு கொண்ட பிறகு பயனர்கள் பேன்ஸி எண்களுக்கான பணத்தை செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும்
பிஎஸ்என்எல் பேன்ஸி எண் தேர்வுக்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இதில் பயனர்கள் குறிப்பிட்ட ஒரு எண்ணை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பயனர்கள் பேன்ஸி எண்களுக்கான பணத்தை செலுத்த வேண்டும். பின் ஏழு இலக்கு பின் கிடைக்கும். இந்த பின் நான்கு நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த வழிமுறைகள்படி வாடிக்கையாளர்கள் ஆடம்பர எண்கள், பேன்ஸி எண்களை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications