10 நிமிடத்தில் வீடு தேடி வரும் BSNL 4G சிம் கார்டு.. எப்படி ஆன்லைனில் ஆர்டர் செய்வது? எவ்வளவு கட்டணம்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்பொது அசுரர் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றத்திற்கு பிறகு, மக்கள் விரும்பும் ஒரு நெட்வொர்க்காக பிஎஸ்என்எல் மாறியுள்ளது. இதற்கு பிஎஸ்என்எல் வழங்கும் விலை குறைவான திட்டங்களே ஒரு முக்கியம் காரணமாகும். புதிய வாடிக்கையாளர்களை இன்னும் அதிகமாக ஈர்க்கும் வகையில், இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் புதிய BSNL 4G சிம் கார்டுகளை (SIM card) நேரடியாக வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
ஆம், நீங்கள் வீட்டில் இருந்தபடியே அல்லது இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமென்றாலும், இனி உங்களால் புதிய பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளை (BSNL 4G SIM Card) வாங்க முடியும் என்கிறது BSNL. அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள சில முக்கிய நகரங்களில், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் புதிய பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளை ஆர்டர் செய்தால், அடுத்த 10 நிமிடத்திற்குள் அவர்களின் வீடு தேடி வந்து சிம் கார்டுகள் டெலிவரி செய்யப்படும் என்றும் BSNL அறிவித்துள்ளது.

10 நிமிடத்தில் வீடு தேடி வரும் BSNL 4G சிம் கார்டு.. எப்படி?
இந்த அறிவிப்பை கேட்டு மக்கள் பலர் சந்தோஷத்தில் உள்ளனர். இன்னும் சிலர் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. குறிப்பாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பை கேட்டு, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் இப்போது கடுப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வளர்ந்து வருகிறது.
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள புதிய முறையை பின்பற்றி இப்போது பொதுமக்கள் ஆன்லைன் மூலம் சிம் கார்டை ஆர்டர் செய்ய முடியும். ஆர்டர் செய்த சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்களில் BSNL 4G சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். இதன் மூலம் மக்கள் இனி நீண்ட வரிசையில், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. சரி, எப்படி ஆன்லைனில் சிம் கார்ட் ஆர்டர் செய்வதென்று பார்க்கலாம்.
எப்படி BSNL 4G SIM கார்டை ஆன்லைனில் ஆர்டர் செய்வது?
- https://prune.co.in என்ற இணையத்தள பக்கத்திற்கு செலவும்.
- உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் என்று எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- Buy Sim Card என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் நாடு மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க் ஆபரேட்டரை தேர்வு செய்யவும்.
- காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து BSNL கிளிக் செய்யவும்.
- அடுத்தபடியாக FRC திட்டத்தை தேர்வு செய்யவும்.
- உங்கள் பெயர், மொபைல் எண், முகவரி ஆகிய விபரங்களை உள்ளிடவும்.
- பெரும் OTP விபரங்களை வலைப்பக்கத்தில் உள்ளிடவும்.
- ஆர்டர் செய்த சில நிமிடங்களில் BSNL 4G சிம் கார்டு உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.
இந்த செயல்முறையை பின்பற்றி உங்கள் வீட்டில் இருந்தபடியே புதிய BSNL சிம் கார்டை நீங்கள் பெற முடியும். இந்த புதிய பிஎஸ்என்எல் டூர் டெலிவரி சிம் கார்டு அம்சம் இந்தியாவின் பல இடங்களில் அணுக கிடைக்கிறது. இன்னும் சில இடங்களில் அணுக கிடைக்காமலும் இருக்கிறது. நீங்கள் ட்ரை செய்து பார்த்து உங்கள் ஏரியாவில் இது பயன்படுத்த கிடைக்கிறதா இல்லையா என்று கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications