இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?

|

உங்ககிட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphone) இருந்தாலும் சரி, அல்லது ஐபோன் (iPhone) இருந்தாலும் சரி, கட்டாயம் ஒரு கட்டத்தில் ஸ்டோரேஜ் சிக்கலை (Storage Problem) சந்திக்க வேண்டியதிருக்கும்.

பெரும்பாலனோர், உங்கள் போன்களில் ஸ்டோரேஜ் இல்லை என்று தெரிவிக்கும் " Your storage is full" என்ற நோட்டிபிகேஷன் செய்தியைப் பார்த்ததும் கடுப்பாகிவிடுவீர்கள். ஆனால், இனி இந்த கவலையே வேண்டாம் என்கிறது Google.

போன் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டதா? இலவசமாக கிளவுட் ஸ்டோரேஜ் வேண்டுமா?

போன் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டதா? இலவசமாக கிளவுட் ஸ்டோரேஜ் வேண்டுமா?

உங்கள் போன் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டது என்ற இந்த நோட்டிபிகேஷனை நிச்சயமாக ஒரு முறையாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள். போன் ஸ்டோரேஜ் நிரம்பியவுடன், நாம் அனைவரும் கிளவுட் ஸ்டோரேஜ் நோக்கி தான் நகர ஆரம்பிப்போம்.

அதிலும் குறிப்பாகப் பெரும்பாலானோர் இலவசமாக கிடைக்கும் கூகிள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜ் (Google drive cloud storage) சேவையை தான் பயன்படுத்த முன்வருவார்கள். இது தான் உண்மை.!

கூகுள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜில் எவ்வளவு இலவச ஸ்டோரேஜ் கிடைக்கிறது?

கூகுள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜில் எவ்வளவு இலவச ஸ்டோரேஜ் கிடைக்கிறது?

ஆனால், இங்கேயும் ஒரு சிக்கல் உள்ளது. கூகிள் டிரைவ் அதன் பயனர்களுக்கு 15GB வரையிலான கிளவுட் ஸ்டோரேஜை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. இந்த இலவச 15ஜிபி ஸ்டோரேஜ் நிரம்பிய பிறகு, உங்களுக்கு ஸ்டோரேஜ் சிக்கல் தோன்றக்கூடும்.

இதற்கு மேல், உங்களுக்குக் கூடுதல் ஸ்டோரேஜ் வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயமாக Google Drive வழங்கும் ஸ்டோரேஜ் திட்டங்களை காசு கொடுத்து வாங்கித் தான் பயன்படுத்த வேண்டும்.

சடனாக விலை குறைந்த Oppo Reno 7 Pro 5G.! சடனாக விலை குறைந்த Oppo Reno 7 Pro 5G.! "இப்படி" செஞ்சா ரூ.13,490-க்கு தட்டி தூக்கலாம்.!

இனி ஸ்டோரேஜ் பற்றிய கவலையே வேண்டாம் - Google

இனி ஸ்டோரேஜ் பற்றிய கவலையே வேண்டாம் - Google

இந்த நிலை தான் இப்போது வரை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், இனி அப்படி இல்லை.!

கூகிள் நிறுவனம் அதன் சேவையை மக்களுக்குப் பயனுள்ளதாய் மாற்ற விரும்பி, அதிக மக்களை கிளவுட் ஸ்டோரேஜ் நோக்கி ஈர்க்கும் விதமாக, இப்போது அதன் இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வரம்பை 1TB ஆக மாற்றியுள்ளது.

ஆம், இனி கூகிள் டிரைவில் கிடைக்கும் இலவச ஸ்டோரேஜ் வசதி வெறும் 15ஜிபி அல்ல - 1டிபி ஆக மாறுகிறது.

1TB இலவச கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

1TB இலவச கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஒவ்வொரு தனித்தனி Google Workspace பயனர் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் இந்த 1TB எக்ஸ்ட்ரா இலவச ஸ்டோரேஜ் விரைவில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச 1TB கிளவுட் ஸ்டோரேஜ் அம்சத்தைப் பெற கூகிள் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்? தனியாக எதுவும் சந்தாவைப் பெற வேண்டுமா? அல்லது இப்போது உங்களுக்கு கிடைக்கும் 15GB கிளவுட் ஸ்டோரேஜை எப்படி 1TB -க்கு மாற்றுவது? என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இலவச 1TB கிளவுட் ஸ்டோரேஜை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இலவச 1TB கிளவுட் ஸ்டோரேஜை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் இந்த இலவச 1TB கிளவுட் ஸ்டோரேஜை பெற நீங்கள் தனியாக எந்தவொரு செயலையும் செய்ய வேண்டியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கூகுள் நிறுவனம் வழங்கவுள்ள இந்த இலவச 1TB கிளவுட் ஸ்டோரேஜ், அந்தந்த தனி நபர் கூகிள் வொர்க்ஸ்பேஸ் கணக்குடன் சரியாய் கொண்டு வந்து சேர்க்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு கணக்குடன் இப்போது வழங்கப்பட்டு வரும் 15GB கிளவுட் ஸ்டோரேஜ் ஆட்டோமேட்டிக்காக 1TB கிளவுட் ஸ்டோரேஜிற்கு மாற்றப்படும்.

1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!

Google எடுத்த திடீர் முடிவால் கிளவுட் ஸ்டோரேஜ் பயனர்கள் குஷி.!

Google எடுத்த திடீர் முடிவால் கிளவுட் ஸ்டோரேஜ் பயனர்கள் குஷி.!

கூகுள் பயனர்கள் அவர்களுடைய வணிகத்தை மேலும் வளர்க்கவும், நிர்வகிக்கவும், பயனர்கள் அதிக ஆவணங்கள், டேட்டாக்கள் மற்றும் டிஜிட்டல் சொத்துகளை அதிகமாக ஸ்டோரேஜ் செய்து வைக்க வேண்டிய நிலை தேவைப்படுகிறது.

இதைக் கூகுள் நிறுவனம் வெளிப்படையாக உணர்ந்து, இப்போது கூகுள் வொர்க்ஸ்பேஸ் பயனர்களுக்குக் கிடைக்கும் இலவச 15ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தை 1டிபி ஸ்டோரேஜ் ஆக மாற்றியுள்ளது என்று நிறுவனம் அதன் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்ட பைல் வகைகளை ஸ்டோர் செய்யலாமா?

100-க்கும் மேற்பட்ட பைல் வகைகளை ஸ்டோர் செய்யலாமா?

இனி உங்கள் போன் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டால் கவலைப்பட வேண்டாம். கூகுள் நிறுவனம் உங்களுக்கு தேவையான ஸ்டோரேஜை இலவசமாக 1டிபி வரை வழங்குகிறது.

இதன் மூலம், உங்களுக்கு தேவையான PDF டாக்குமெண்ட், CAD பைல், போட்டோஸ், வீடியோஸ் என்று 100-க்கும் மேற்பட்ட பைல் வகைகளை இப்போது ஸ்டோரேஜ் செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது. இது உண்மையில் ஒரு சிறந்த அம்சமாகும்.

Google கிளவுட் ஸ்டோரேஜ் பாதுகாப்பானதா? நம்பி யூஸ் செய்யலாமா?

Google கிளவுட் ஸ்டோரேஜ் பாதுகாப்பானதா? நம்பி யூஸ் செய்யலாமா?

தெரியாதவர்களுக்கு, கூகிள் வொர்க்ஸ்பேஸ் என்பது கூகிள் காலெண்டர், கூகிள் டிரைவ் போன்ற அணைத்து கூகிள் அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு அம்சமாகும்.

நீங்கள் சேமிக்கும் பைல் மற்றும் டேட்டாக்களின் பாதுகாப்பு பற்றி பேசுகையில், மால்வேர், ஸ்பேம் மற்றும் ransomware ஆகியவற்றிற்கு எதிராக உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புகளுடன் இது வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போ விட்டா திரும்ப கிடைக்காது.! Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!இப்போ விட்டா திரும்ப கிடைக்காது.! Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!

15ஜிபி இலவச ஸ்டோரேஜில் இருந்து எப்படி 1டிபி ஸ்டோரேஜிற்கு மாறுவது?

15ஜிபி இலவச ஸ்டோரேஜில் இருந்து எப்படி 1டிபி ஸ்டோரேஜிற்கு மாறுவது?

எனவே ஆன்லைன் இருந்து ஒரு ஆவணத்தை ஓபன் செய்வதன் மூலமாக, தற்செயலாக எந்தவொரு மால்வேர் தாக்குதலுக்கும் ஆளாகப் போவதில்லை என்ற நம்பிக்கையுடன் இந்த கிளவுட் ஸ்டோரேஜ் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

இலவசமாக கிடைக்கும் 15ஜிபி ஸ்டோரேஜில் இருந்து எப்படி 1டிபி ஸ்டோரேஜிற்கு மாறுவது? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை!

வெயிட் செஞ்சா தானா கிளவுட் ஸ்டோரேஜ் வரம்பு 1TB -க்கு மாறிடுமா?

வெயிட் செஞ்சா தானா கிளவுட் ஸ்டோரேஜ் வரம்பு 1TB -க்கு மாறிடுமா?

ஒவ்வொரு Google Workspace கணக்கிலும் உள்ள ஸ்டோரேஜ் கிளவுட் டேட்டா வரம்பை 15GB இலிருந்து 1TBக்கு Google தானாகவே மேம்படுத்தும்.

தற்போதைய சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தினாலே போதும் என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணங்கள் ஏதுவுமின்றி பைல்கள், ஆவணங்கள் மற்றும் பிற டாக்குமெண்ட்களைச் சேமிக்க 1TB ஸ்டோரேஜ் அணுகலை விரைவில் பெறுவீர்கள்.

Google Drive ஸ்டோரேஜ் சந்தா கட்டணம் எவ்வளவு?

Google Drive ஸ்டோரேஜ் சந்தா கட்டணம் எவ்வளவு?

Google Storage சேவைக்கான கட்டணத்தைப் பற்றிப் பேசுகையில், கூகுள் நிறுவனம் இப்போது 3 Google Drive கிளவுட் ஸ்டோரேஜ் திட்டங்களை வெவ்வேறு ஸ்டோரேஜ் உடன் - வெவ்வேறு கட்டணங்களில் வழங்கி வருகிறது.

கூகுள் நிறுவனம் இப்போது அதன் பயனர்களுக்கு 100ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தை ரூ.130 என்ற மாதாந்திர கட்டணத்துடன் வழங்குகிறது.

அதேபோல், 200ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தை ரூ.210 என்ற மாதாந்திர கட்டணத்துடன் வழங்குகிறது.

2TB ஸ்டோரேஜை ரூ. 650 என்ற மாதாந்திர கட்டணத்துடன் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
How To Get An Upgrade From 15GB Google Cloud Storage To 1TB For Free

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X