BSNL ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து 4% தள்ளுபடியை பெறுவது எப்படி?
நாட்டில் 3 ஜி சேவைகளை வழங்கும் ஒரே ஆபரேட்டர் நிறுவனமாக பி.எஸ்.என்.எல். மட்டுமே செயல்படுகிறது. ஆனால் இன்னும், இந்த ஆபரேட்டர் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு மிகவும் பிரபலமானது, இப்போது பி.எஸ்.என்.எல். அதன் பயனர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
பி.எஸ்.என்.எல். டெலிகாம் ஆபரேட்டர் இப்போது அதன் ஒரு சலுகையாக அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்குத் தள்ளுபடியை வழங்கும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. மைபிஎஸ்என்எல் பயன்பாட்டில் உள்ள அனைத்து பயனர்களுக்கும், மற்றவர்களின் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்வதற்கும் நிறுவனம் நான்கு சதவீத தள்ளுபடியை வழங்கும் என்று அறிவித்துள்ளது. இது ஒரு விளம்பர சலுகை சலுகை என்றும், இது செப்டம்பர் 30, 2020 வரை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

MyBSNL பயன்பாட்டில் புதிய சலுகை
இந்த பி.எஸ்.என்.எல். சலுகை ஒரு வட்டத்திற்கு மட்டுமே தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த சேவையை ஒரே வட்டத்தில், அதாவது கர்நாடகாவில் மட்டுமே தற்பொழுது வழங்கி வருகிறது. இந்த சலுகை MyBSNL பயன்பாட்டில் புதிய பயனர்களுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 4 சதவீத சலுகை கிடைக்கும்.

மற்ற நிறுவனங்கள் வழங்கும் 4 முதல் 6 சதவீதம் வரை தள்ளுபடி
இதே போன்ற சலுகையை ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. பிரீபெய்ட் பயனர்களுக்கு பிரத்தியேக பயன்பாடுகளிலிருந்து மற்ற எண்களை ரீசார்ஜ் செய்யும் பொழுது 4 முதல் 6 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதையே பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது பின்பற்றியுள்ளது. அதேபோல், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது 6 பைசா கேஷ்பேக் சலுகையை நீட்டிக்கிறது என்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

6 பைசா கேஷ்பேக் சலுகை
பி.எஸ்.என்.எல். தனது 6 பைசா கேஷ்பேக் சலுகையை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இந்த சலுகை அனைத்து பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் பயனர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. COVID-19 காரணமாக மக்கள் இன்னும் வீட்டில் இருப்பதால் இது நிறுவனத்தின் ஒரு நல்ல நடவடிக்கையாகத் தெரிகிறது. இருப்பினும், பிஎஸ்என்எல் லேண்ட்லைன், எஃப்டிடிஎச் மற்றும் பிராட்பேண்ட் பயனர்களுக்கும் இந்த சேவைகள் கிடைக்கின்றன.

சலுகையை எப்படி பெறுவது ?
இந்த சேவைகளைப் பெற, நீங்கள் "6PAISA" உடன் "ACT", தொலைபேசி எண் மற்றும் STD குறியீட்டை 094478053334 க்கு அனுப்ப வேண்டும். கூடுதலாக, நீங்கள் நிறுவனத்தின் கட்டணமில்லா எண் ஆன 18005991900 ஐ தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications