Home
News

ரூ.4,00,000 மதிப்பிலான லைப் இன்சூரன்ஸ் திட்டத்துடன் 10 ஜிபி டேட்டா திட்டம் அறிமுகம்.!

மேரா நயா பியூச்சர் போன் என்ற புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் எச்.டி.எப்.சி லைப் இன்சூரன்ஸ் உடன் இணைந்து புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்துள்ளது

மேரா நயா பியூச்சர் போன் என்ற புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் எச்.டி.எப்.சி லைப் இன்சூரன்ஸ் உடன் இணைந்து புதிய திட்டத்தையும் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.597 திட்டத்தின்படி பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா 168 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 300 இலவச எஸ்.எம்.எஸ்களுடன் கிடைக்கிறது. இந்த திட்டம் பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, உ.பி., குஜராத், மகாராஷ்டிரா ஹரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

10 ஜிபி டேட்டா 112 நாட்கள் வேலிடிட்டி

10 ஜிபி டேட்டா 112 நாட்கள் வேலிடிட்டி

அதேபோல் மற்ற இடங்களில் ரூ.597 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டாவை 112 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்துள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 300 இலவச எஸ்.எம்.எஸ்களுடன் இந்த திட்டம் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.4,00,000 மதிப்பிலான லைப் இன்சூரன்ஸ்

ரூ.4,00,000 மதிப்பிலான லைப் இன்சூரன்ஸ்

எச்.டி.எப்.சி வங்கியுடன் இணைந்து, எச்.டி.எப்.சி லைப் இன்சூரன்ஸ் உடன் கூடிய புதிய ப்ரீபெய்ட் திட்டத்தையும் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனருக்கு ரூ.4,00,000 மதிப்பிலான லைப் இன்சூரன்ஸ் உடன் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படுகிறது.

மை ஏர்டெல் ஆப் செயலி

மை ஏர்டெல் ஆப் செயலி

மை ஏர்டெல் ஆப் செயலியை பயனப்டுத்தி, லைப் இன்சூரன்ஸிற்கான செயல்முறைகள் பதிவு செய்யவேண்டும். இந்த காப்பீடு 18 வைத்து முதல் 54 வயதுடையோர்களுக்கு மட்டுமே பொருந்தும். காப்பீடு தொடர்பான அனைத்து செயல்முறைகளை டிஜிட்டல் முறையில் நடைபெறும். கூடுதல் விபரங்களுக்கு மை ஏர்டெல் ஆப் செயலியை பயன்படுத்தித் தெரிந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
how to get 10gb data for 168 days through airtel s latest plan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X