ஆதார் நம்பர் இருக்கா அது போதும்.. திடீர் தேவைக்கு.. டக்குனு ஒரு இன்ஸ்டன்ட் PAN கார்டை உருவாக்குவது எப்படி?
தற்போது இந்தியா முழுவதும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். குறிப்பாக வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் கார்டு, பான் கார்டு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆதார் அடையாள அட்டை எப்படி ஒரு தனி நபரின் அடையாளங்களை உறுதிப்படக் காண்பிக்கும் முக்கிய ஆவணமாகச் செயல்படுகிறதோ, அதேபோல், ஒரு தனி நபர் தொடர்பான நிதி அடையாளங்களைக் கண்டறிய பான் அட்டை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆதார் எண் எப்படி தனிப்பட்டதோ, அதேபோல் பான் எண் விபரமும் ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டது.

குறிப்பாக பான் அட்டை இந்தியாவில் பல்வேறு தளங்களில் சரியான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு PAN மிகவும் முக்கியமானது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பதைக் கட்டாயமாக்கியது.
அந்த வகையில் புதிதாக பான் கார்டு வாங்க நினைப்பவர்கள் அல்லது அவசர தேவைக்கு பான் கார்டு தேவைப்படுபவர்கள் ஆதார் நம்பரை வைத்து ஆன்லைன் மூலம் இ-பான் கார்டு விண்ணப்பித்துப் பெறலாம். மேலும் இப்போது இ-பான் கார்டை உடனடியாக பெறுவது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.
வழிமுறை-1: முதலில் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கமான https://www.incometax.gov.in/iec/foportal செல்ல வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து அந்த இணையதளப் பக்கத்தில் Instant e-PAN என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு New e-PAN ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
வழிமுறை-3: இப்போது நீங்கள் ஒரு புதிய இ-பான் பக்கத்தைப் பெறுவீர்கள், இங்கு உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, நான் உறுதிப்படுத்துகிறேன் (I confirm) என்பதைத் தேர்வுசெய்து, தொடரவும் (Continue) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-4: அடுத்து உங்கள் ஆதார் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பப்படும். பின்பு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க ஓ.டி.பி-ஐ உள்ளிட்டு, UIDAI உடன் ஆதார் விவரங்களைச் சரிபார்க்கத் தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
வழிமுறை-5: அதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட உடன் I Accept கிளிக் செய்து continue கொடுக்கவும். அவ்வளவு தான் ஒப்புகை எண்ணுடன் (Acknowledgement Number) செய்தி காட்டப்படும். உங்களது e-PAN தயார்.
அதேபோல் e-PAN ஆனதுPDF வடிவில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படுகிறது, இதற்கு கட்டணமும் இல்லை. குறிப்பிடத்தக்க வகையில், இ-பான் என்பது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பான் கார்டு ஆகும், இது ஆதாரின் e-KYC தரவின் அடிப்படையில் மின்னணு வடிவத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் நீங்கள் பான் கார்டுக்கு அப்ளை செய்து நீண்ட நாட்கள் காத்திருக்கும் வேளையில் உடனடி தேவைகளுக்கு இ-பான் (e-PAN) உதவும். அதன்மூலம் நீங்கள் உங்கள் வரிச் சேவைகள், வங்கியில் லோனுக்கு அப்ளை செய்தல் என பல வேளைகளை எளிமையாக முடிக்கலாம்.
இதுதவிர அரசாங்க சலுகைகளைப் பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பான் கார்டு கண்டிப்பாக தேவைப்படுகிறது. மேலும் நீங்கள் வங்கிக் கணக்கு தொடங்க விரும்பினாலும் அல்லது வேறு வேலை செய்ய விரும்பினாலும் பான் கார்டு கண்டிப்பாக தேவைப்படும். குறிப்பாக இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல வருமான வரி, பண மோசடிகளை கண்டறிதல் போன்ற பல விஷயங்களுக்கு பயன்படுகிறது.


Click it and Unblock the Notifications