Just In
- 10 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 10 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 11 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 11 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..
Storage space running out: உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மந்தமானதாக இருக்கிறதா? அல்லது மெதுவாக இயங்குகிறதா? இல்லையென்றால் அடிக்கடி ஹேங் ஆகிறதா? அப்போ, உங்களுக்கும் இந்த சிக்கல் வந்துடுச்சுனு அர்த்தம். அதாங்க, நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஸ்டோரேஜ் பற்றாக்குறை சிக்கல். உங்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை உற்றுக்கவனித்தால் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டது என்று நோட்டிபிகேஷன் கண்ணில் தென்படும். இந்த சிக்கல் வந்துவிட்டால் வாட்ஸ்அப் மெசேஜ்ஜில் வரும் புதிய இமேஜ் அல்லது வீடியோவை கூட நம்மால் டவுன்லோட் செய்து பார்க்க முடியாது.

ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் சந்திக்கும் ஸ்டோரேஜ் சிக்கல்
இந்த அனுபவம், உங்களின் ஸ்மார்ட்போன் நிலையையும், உங்களின் ஸ்மார்ட்போன் அனுபவத்தையும் மோசமாகிவிடும். ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் ஒரு நேரத்தில் இந்த ஸ்டோரேஜ் சிக்கல் கட்டாயம் சந்தித்தாக வேண்டும். என்ன தான் 512 ஜிபி வரை எஸ்டி கார்டு ஸ்டோரேஜ் கிடைத்தாலும் கூட, அந்த 512 ஜிபி ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிறையும் போது, அவர்களுக்கும் இதே சிக்கல் தான் தோன்றும். சிலர் கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் அவ்வப்போது பேக்கப் எடுத்து வைத்து நேர்த்தியாக இந்த சிக்கலை தவிர்த்துவிடுவார்கள். இன்னும் சிலர் டீப் கிளீன் செய்து இந்த சிக்கலிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்.

டீப் கிளீனிங் செய்தால் ஸ்டோரேஜ் சிக்கல் சரியாகிவிடுமா?
டீப் கிளீனிங்கா? அப்படி என்றால் என்ன? உங்கள் ஸ்மார்ட்போனில் தேவையில்லாமல் ஸ்டோரேஜை அடைத்துக்கொண்டிருக்கும் ஃபைல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் அல்லது தரவுகள் என்று எதுவாக இருந்தாலும் அவற்றில் தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு தேவையற்றது என்று நீங்கள் கருதும் பைல்களை நீக்கி உங்கள் ஸ்டோரேஜ் இடத்தை மீண்டும் பெறுவது தான் டீப் கிளீனிங் முறை.

டீப் கிளீனிங் மூலம் சரி செய்வதற்கான 8 சிறந்த முறைகள் இது தான்
உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை மீண்டும் மீட்டெடுத்துப் பயன்படுத்துவதற்கு, டீப் கிளீனிங் மூலம் சரி செய்வதற்கு சுமார் 8 முறைகள் உள்ளது. இந்த 8 முறைகள் என்ன-என்ன செய்யும் என்பதை விரைவாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இந்த முறைகளைச் செய்வதற்கு முன்பு உங்களின் தரவுகள் பேக்கப் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறை சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். இதைச் செய்ய Settings > Backup & reset > Back up my data கிளிக் செய்யுங்கள்.

1. பெரிய சைஸ் பைல்கள் இருக்கும் இடத்தை கண்டறிவது
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் எங்கு அதிகமாக ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியுங்கள். லேப்டாப் போல, ஸ்மார்ட்போன்களும் சேமிப்பிற்காக ஒரு திட-நிலை இயக்ககத்தைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்த இயக்ககத்தை அதிகமாக்குவது செயல்திறனைக் குறைக்கும் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகிறது. Settings > Storage கிளிக் செய்து ஸ்டோரேஜ் ஆக்கிரமிப்பு இடங்களைக் கண்டறியுங்கள்.

பாதுகாப்பான ஆப்லைன் மற்றும் ஆன்லைன் பேக்கப் செய்வது எப்படி?
பெரும்பாலும் அனைவரின் போனிலும், போட்டோஸ் தான் பெரியளவு இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும். போட்டோக்களை எளிதாக நாம் டெலீட் செய்ய முடியாது. ஆகையால் இவற்றை ஒன்று கிளவுட் ஸ்டோரேஜில் பேக்கப் செய்யுங்கள் அல்லது USB மூலம் உங்கள் கணினி அல்லது லேப்டாப்பில் பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள். USB பேக்கப் என்பது பாரம்பரியமான மற்றும் பாதுகாப்பான ஆப்லைன் வயர்டு பேக்கப் முறை என்பதை மறக்காதீர்கள்.

2. பிரீ அப் ஸ்பேஸ் ஈஸிலி (Free up space)
டவுன்லோட்ஸ், அடிக்கடி பயன்படுத்தப்படும் பயன்பாடுகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலீட் செய்வதற்கான மிகவும் எளிமையான ஒரே வழி இந்த 'பிரீ அப் ஸ்பேஸ் ஈஸிலி' மட்டும் தான். Settings > Storage சென்று Free up space கிளிக் செய்யுங்கள். உங்களுக்குத் தேவையற்ற தரவுகள் என்ற அடிப்படையில், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத தரவுகள் இங்குக் காண்பிக்கப்படும், இதில் உங்களுக்குத் தேவையற்ற தரவுகளை ஈஸி டெலீட் செய்யுங்கள்.
1 கிலோ மாம்பழம் 2.70 லட்சமா? உலகளவில் டிரெண்டிங்கான இந்த மாம்பழத்தில் அப்படி என்ன ருசி இருக்கு?

3. எந்த ஆப்ஸ் அல்லது செயல்பாடு அதிக ஸ்டோரேஜ் இடத்தை அடைக்கிறது?
கேம்கள், மியூசிக் ஆப்ஸ், மூவீஸ் அல்லது டிவி ஆப்ஸ் எவ்வளவு இடத்தை எடுத்துக்கொள்கின்றன என்பதையும் கண்டறிய Settings > Apps and notifications > Show all apps கிளிக் செய்யுங்கள். நீங்கள் அதிகம் பயன்படுத்தாத ஆப்ஸ்களை டெலீட் செய்வதன் மூலம் பெரியளவில் ஸ்டோரேஜை மீட்டெடுக்கலாம். அதிகம் பயன்படுத்தாத ஆப்ஸ்களை கண்டறிய Play Store > top-left menu > My apps & games கிளிக் செய்து, Last used விருப்பத்தை தேர்வு செய்து டெலீட் செய்யுங்கள்.

4. மியூசிக் மற்றும் பாட்காஸ்ட் அதிகம் பயன்படுத்தினால் கூட ஸ்டோரேஜ் சிக்கல் வருமா?
மியூசிக் மற்றும் பாட்காஸ்ட் பயன்பாடுகள் உங்களின் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜில் எவ்வளவு இடத்தை நிரப்பியுள்ளது என்று தெரிந்துகொள்ள Play Music > Settings > Downloading > Manage downloads கிளிக் செய்யுங்கள். அதேபோல், மியூசிக் மற்றும் பாட்காஸ்ட்டில் உள்ள பைல்களை டெலீட் செய்ய Music Library > Songs and manually delete song by song (or podcast episode) என்பதை தேர்வு செய்து டெலீட் செய்யுங்கள்.

5. போட்டோக்களை எப்படி தேர்ந்தெடுத்து டெலீட் செய்வது?
ஸ்கிரீன் ஷாட்கள், வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் மற்றும் உங்கள் பல்வேறு பயன்பாடுகளில் உருவாக்கப்பட்ட பிற படக் கோப்புகள் அனைத்தையும் போல்டராக டெலீட் செய்வது உங்கள் நேரத்தையும் ஸ்டோரேஜையும் சேமிக்கும். போல்டர்களை செக் செய்து தேவையானதை மட்டும் வேறு இடத்தில் காப்பி செய்து, மற்ற போல்டரை டெலீட் செய்து சேமிப்பு இடத்தை பெருக்குங்கள்.

6. இந்த விஷயம் பற்றி தெரியமா போச்சே.. ஆப்லைன் மேப்ஸ் மூலம் சிக்கல்
கூகிள் மேப்ஸின் ஆஃப்லைன் மேப்ஸ் அம்சம் ஒரு சிறந்த அம்சமாகும். நீங்கள் சேமித்து வைத்திருக்கும் ஆஃப்லைன் மேப்ஸ் பெரியளவில் இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் கூட தேவையில்லை என்று உணர்ந்தால் அதையும் டெலீட் செய்யுங்கள். ஆஃப்லைன் மேப்ஸ்களை நீக்க Google Maps ஓபன் செய்து இடது மேல் மூலையில் உள்ள menu கிளிக் செய்து delete offline maps கிளிக் செய்யுங்கள்.
ஓ.. செவ்வாயில் இருந்து பார்த்தா நம்ம பூமியும் நிலவும் இப்படி தான் இருக்குமா? நாசா வெளியிட்ட படம்..

7. உங்கள் போனின் வேகத்தை அதிகரிக்க ஆப்ஸ் கேச் (Apps cache) அல்லது ஆப்ஸ் டேட்டாவை நீக்குங்கள்
ஆப்ஸ் கேச்-கள் பெரும்பாலான ஸ்டோரேஜ் இடங்களை நிரப்பி இருக்கின்றன, இவற்றை டெலீட் செய்வது நிச்சயமாக பெரியளவு ஸ்டோரேஜை மீட்டெடுக்க உதவும், Settings > Storage > Other apps கிளிக் செய்து அதிக சேமிப்பு இடம்பிடித்துள்ள ஆப்ஸை கிளிக் செய்து, Clear cache கிளிக் செய்து கேச் டெலீட் செய்யலாம். ஆண்ட்ராய்டு 7 பயனர்களைத் தவிர்த்து மற்ற பயனர்கள் ஒவ்வொரு ஆப்ஸாக தேர்வு செய்து தான் இதை டேப்லெட் செய்யமுடியும்.

8. டேட்டா பேக்கப் செய்த பின் ஒரு அழுத்து.. பேக்டரி ரீசெட்
உங்கள் ஸ்மார்ட்போனை மொத்தமாக டீப் கிளீனிங் செய்வதற்கான சிறப்பான வழி இந்த பேக்டரி ரீசெட் மட்டும் தான். இது உங்கள் போனை நீங்கள் வாங்கிய நேரத்தில் எப்படி இருந்ததோ அப்படியே புத்தம் புதிது போல எந்த டேட்டா ஜங்குகளும் (junk) இல்லாமல் மாற்றிவிடும். உங்களுக்குத் தேவையான ஆப் தகவலை பேக்கப் எடுத்தபிறகு சுலபமாக எந்த பயணமும் இல்லாமல் பேக்டரி ரீசெட் செய்து, உங்கள் ஸ்மார்ட்போனை முழு வேகத்தில் பயன்படுத்தலாம்.
இப்படி செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேங் ஆவதை நாம் தவிர்க்க முடியும், மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனின் வேகமும், அனுபவமும் சிறப்பாக அமையும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086