ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா? அப்போ உடனே இதைச் செய்யுங்கள்.. நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..

|

இன்றைய காலகட்டத்தில் நம்முடன் எப்போதும் தொடர்பிலேயே அருகிலேயே இருக்கும் மிக முக்கியமான ஒரு பொருளாக நமது ஸ்மார்ட்போன்கள் மாறியுள்ளது. இப்படிப் பட்ட மிக முக்கியமான பொருள் நம்முடைய கவனக்குறைவால் சில நேரங்களில் தொலைந்து போவதற்கும், இவற்றை இழப்பதற்கும் பல சந்தர்ப்பங்கள் பலருக்கும் உருவாக்கி இருக்கும். நம்மில் சிலர் நமது வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களை வைத்த இடம் தெரியாமல் தேடி அலைந்திருப்போம், இதனால் வீட்டில் உள்ளவர்களின் நம்பரில் இருந்து நமது எண்ணிற்கு டயல் செய்து போன் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்போம்.

ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா? அப்போ உடனே 'இதைச்' செய்யுங்கள்..

ஆனால், நமது போன் நமக்குத் தெரியாமல் ​​துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் நாம் வெளியே இருக்கும் போது தொலைந்துவிட்டாலோ அல்லது நமது அலட்சியம் காரணமாகத் தொலைந்துவிட்டாலோ என்ன செய்வது? நமது ஸ்மார்ட்போனை எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படித் தொலைந்த அல்லது திருடப்பட்ட போனில் உள்ள நமது தனிநபர் தகவல் மற்றும் ஒட்டுமொத்த டேட்டாக்களை நொடியில் டெலீட் செய்வது? இந்த அனைத்து கேள்விகளுக்குமான பதில் இந்த பதிவில் உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் இதை தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் உதவியை இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, உங்கள் Android ஸ்மார்ட்போன் தொலைவிலிருந்து கண்டுபிடிப்பதற்கும், அதை லாக் செய்வதற்கும், தேவைப்பட்டால் உங்கள் போனில் உள்ள எல்லா தரவையும் அழிக்கவும் ஒரு எளிய வழி உள்ளது. இந்த அனைத்து சேவையும் உங்களுக்கு ஒரே இடத்தில் Google வழங்குகிறது. நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை இழந்தால், Find My Device அம்சம் உங்களின் தொலைந்த சாதனத்தைக் கண்டுபிடிக்க அனுமதிக்கிறது, லாக் செய்ய அனுமதிக்கிறது மற்றும் உங்கள் போனில் உள்ள டேட்டாக்களை முற்றிலுமாக அழிக்க உதவுகிறது.

ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா? அப்போ உடனே 'இதைச்' செய்யுங்கள்..

அதேபோல், தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, தொலைந்து போன ஸ்மார்ட்போன் லாக் ஸ்கிரீன் இல் ஒரு செய்தியைக் காண்பிக்க அனுமதிக்கிறது. இதில் உங்கள் தொலைப்பேசியை வேறு யாரும் கண்டுபிடித்தால் அவர்களை ஒரு மொபைல் எண்ணிற்கு அழைக்கும்படி நீங்கள் செட் செய்யலாம். அதேபோல், லாக் செய்த போனை யாரும் அணுக முடியாது, இருப்பினும் தேவை என்றால் போனில் உள்ள டேட்டாவை முற்றிலுமாக அழிக்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள அம்சத்தைச் சரியாகப் பயன்படுத்த நீங்கள் சில முன் நிபந்தனைகளை உங்கள் ஸ்மார்ட்போனில் செய்திருக்க வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் உங்கள் கையில் இருக்கும் போது அதை ஆன் செய்து, உங்களின் Google கணக்குடன் லாகின் செய்திருக்க வேண்டும். பின்னர் பயனரின் மொபைல் டேட்டா அல்லது வைஃபை எப்போதும் ஆனில் இருக்க வேண்டும். அவை Google Play இல் காணப்பட வேண்டும், உங்கள் போனில் லொகேஷன் அமைப்பை இயக்கியிருக்க வேண்டும். கூடுதலாக நீங்கள் Find My Device அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா? அப்போ உடனே 'இதைச்' செய்யுங்கள்..

இந்த முன் தேவைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்திருந்தால், கீழே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றி உங்களின் தொலைந்த ஸ்மார்ட்போனை தேடி கண்டுபிடிக்க முடியும்.

  • முதலில் நீங்கள் android.com/find என்ற தளம் மூலமாக உங்கள் Google கணக்கில் லாகின் செய்ய வேண்டும்.
  • பின்னர் உங்கள் கூகிள் அக்கௌன்ட்டில் உள்ள உங்கள் சாதனத்தை அடையாளம் கண்டு, உங்கள் போனின் மாடலை தேர்வு செய்யுங்கள்.
  • ஒரே கூகிள் கணக்கில் பல ஸ்மார்ட்போன்கள் இணைக்கப்பட்டு இருந்தால், தொலைந்துபோன போனின் மாடலை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
  • இது உங்கள் போனின் பேட்டரி ஆயுள் குறித்த விவரங்களையும், ஆன்லைனில் கடைசியாக எப்போது இருந்தது என்பதையும் காண்பிக்கும்.
  • கூகிள் ஒரே நேரத்தில் போனின் தோராயமான இருப்பிடத்தை வரைபடத்தில் காண்பிக்கும். உங்கள் ஸ்மார்ட்போனின் சரியான லொகேஷனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கடைசியாக போன் அறியப்பட்ட இருப்பிடத்தை இது காண்பிக்கும்.
ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா? அப்போ உடனே 'இதைச்' செய்யுங்கள்..
  • நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே தொலைந்த போனின் லொகேஷன் அமைந்திருந்தால், அந்த இடம் உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அந்த இருப்பிடத்திற்குச் சென்று, பிளே சவுண்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் போனை ஐந்து நிமிடங்கள் இடைவிடாது ரிங் செய்ய செய்யலாம். இது உங்கள் போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் வேலை செய்யும்.
  • நீங்கள் டிஸ்பிளேவை லாக் செய்ய விரும்பினால், பாதுகாப்பான சாதன விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இது உங்கள் போனை லாக் செய்யும், உங்கள் Google கணக்கிலிருந்து வெளியேறவும் அனுமதிக்கும்.
  • உங்கள் போனில் ஸ்கிரீன் லாக், பேட்டர்ன் லாக் என்று எதுவும் நீங்கள் அமைந்திருக்கவில்லை என்றால், இந்த அம்சத்தின் மூலம் போன் தொலைந்த பிறகும் கூட நீங்கள் லாக் அம்சத்தை ஆன் செய்யலாம்.
  • Erase Device அம்சம் உங்கள் போனில் உள்ள எல்லா தரவையும் நிரந்தரமாக நீக்குகிறது.
  • உங்கள் போனில் உள்ள டேட்டாவை அழித்த பிறகு, Find My Device இயங்காது.
  • உங்கள் போன் ஆஃப்லைனில் இருந்தால், அடுத்ததாக ஆன்லைனில் வரும்போது போனி உள்ள டேட்டா அனைத்தும் ஆட்டோமேட்டிக்காக அழிந்துவிடும்.
  • இது மற்றவர் உங்கள் போனில் உள்ள எந்தவொரு தரவையும் அணுகாமல் தடுக்கிறது.
ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா? அப்போ உடனே 'இதைச்' செய்யுங்கள்..

இந்த எளிமையான முறையை ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்வது நிச்சயமாகப் பயனளிக்கும். உங்கள் போனில் உள்ள அனைத்து தரவுகளையும் மற்றவர் அணுகாமல் நொடியில் டெலீட் செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது. இந்த அம்சம் பற்றித் தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் இதைத் தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
How to Find Your Lost Android Smartphone and Erase All Data Remotely With Googles Find My Device Setting : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X