Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

|

அனைத்தும் வெளிப்படையாக இருக்கும் இந்த காலகட்டத்தில், பர்சனல் என்று எதையும் வைத்துகொள்ளவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. சாதாரணமாக இணையதளத்தில் ஏதாவது நாம் தேடினால் அடுத்த நிமிடம் அது சார்ந்த நபர்களிடம் இருந்து நமக்கு 'Unknown Number' அழைப்பு வந்து விடும். நம்முடைய மொபைல் எண் எங்கே எப்படி அவர்கள் கைக்கு சேர்கிறது என்று பலமுறை நாம் யோசித்திருப்போம். ஆனாலும், அதை சில நிமிடங்களில் மறந்துவிட்டு, நம் வேலையை செய்ய துவங்கிவிடுவோம்.

தெரியாத எண்ணில் இருந்து Unknown Number அழைப்பு வந்தால் என்ன செய்வது?

தெரியாத எண்ணில் இருந்து Unknown Number அழைப்பு வந்தால் என்ன செய்வது?

தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் நம்மில் பலர் அதனை தவிர்த்து விடுவோம். இதனால், சில நேரங்களில் நல்ல வாய்ப்புகள் கை நழுவி போய் இருக்கலாம். இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு என்று யோசித்து தொழில்நுட்ப ஆராய்ச்சியார்கள் நமக்கு கொடுத்த அம்சம் தான் ரிவர்ஸ் போன் நம்பர் லுக் அப் டூல் (reverse phone number lookup tool). இதன் மூலம் உங்களை அழைப்பவரின் பெயர் மற்றும் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

Unknown Number விபரங்களை பெயர் உடன் இலவசமாக கண்டறிய முடியுமா?

Unknown Number விபரங்களை பெயர் உடன் இலவசமாக கண்டறிய முடியுமா?

சில ஆப்கள் அழைப்பு வரும்போதே இந்த தகவல்களை உங்கள் டிஸ்பிளேவில் பாப் அப் செய்து காட்டிவிடுகின்றன. இதன் மூலம் வரும் அழைப்பு எண் Unknown Number ஆக இருந்தால் கூட, காண்டாக்ட் விபரம் காட்டப்படுவதால், அந்த அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று உடனடியாகவே நீங்கள் முடிவு செய்துவிடலாம். அழைப்பவரின் பெயர் மற்றும் விபரங்கள் மட்டுமில்லாமல் அது ஸ்பேம் கால்-ஆ என்றும் நமக்கு இவை சுட்டிக்காட்டிவிடுகின்றன. அப்படி தற்போது பயன்பாட்டில் இருக்கும் சில இலவச ஆப்களை பற்றி தான் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

1. ட்ரூ காலர் ஆப்ஸ் (True Caller)

1. ட்ரூ காலர் ஆப்ஸ் (True Caller)

இந்த ட்ரூ காலர் நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஆப்பாகும். நம்மில் பலர் இதனை ஏற்கெனவே பயன்படுத்திருக்க வாய்ப்பு அதிகம். இந்த ஆப் பெரிய தகவல் தளத்தை கொண்டிருப்பதால் அழைப்பவரின் பெயருடன் சேர்த்து அது ஸ்பேம் கால்-ஆ, மோசடி கால்-ஆ அல்லது ரோபோ கால்-ஆ என்று அணைத்து வகையிலும் பிரித்து நமக்கு காட்டிவிடும். மேலும் அழைப்பவரின் பெயரை டிஸ்பிளேவில் பாப் அப் செய்கிறது என்பதால் வாய்ப்பை தவறவிடும் நிலைமையும் உங்களுக்கு வராது.

Unknown Number மற்றும் Spam அழைப்பை எடுக்கலாமா? வேண்டாமா?

Unknown Number மற்றும் Spam அழைப்பை எடுக்கலாமா? வேண்டாமா?

வரும் அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று உடனடியாக உங்களால் முடிவு எடுக்க முடியும். அதிகமாக அழைப்புகளை கையாளுபவர்களுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆப்-பில் மட்டும் இல்லாமல் ட்ரூ காலரை இணையதளத்திலும் பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என்பது சிறப்பான விஷயமாகும். ஆனால், இந்த ஆப்ஸின் கூடுதல் அம்சங்களை பயன்படுத்த நீங்கள் Pro வெர்ஷனை கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

2. ஹியா ஆப்ஸ் (Hiya)

2. ஹியா ஆப்ஸ் (Hiya)

இதற்கு முன்னர் வைட் பேஐஸ் என்றழைக்கப்பட்ட ஹியா ஆப்ஸ் இல் கால் மற்றும் எஸ்எம்எஸ் இரண்டையும் கண்காணிக்கும் வசதி உள்ளது. மேலும், வரும் அழைப்பு மோசடி கால் ஆகவோ அல்லது ஸ்பேம் கால் ஆகவோ இருந்தால், அதுவே ஆட்டோ டீக்லைன் செய்து தவிர்த்துவிடும். இது இந்த ஆப்ஸ் இன் சிறப்பம்சம் என்றும் கூறலாம். ட்ரூ காலரைப் போல் இதுவும் அழைப்பு வரும்போதே டிஸ்பிளேவில் அழைப்பவரின் விபரங்களை காட்டிவிடும். இதுவும் பெரிய தகவல் தளத்தில் இருந்து விபரங்களை சேகரித்து நமக்கு கொடுக்கின்றது.

3. ஷோ காலர் ஆப்ஸ் (Showcaller)

3. ஷோ காலர் ஆப்ஸ் (Showcaller)

மற்ற ஆப்களைப் போல ஷோ காலரும் ஒரு ரிவர்ஸ் போன் நம்பர் லுக் அப் டூல் ஆப்ஸ் ஆகும். மேலே கூறப்பட்ட ஆப்ஸ்கள் போலவே, இதுவும் தகவல் தளத்தின் உதவியுடன் அழைப்பவரின் பெயர் விபரம், வரும் அழைப்பு ஸ்பேம் கால்-ஆ, மோசடி கால்-ஆ அல்லது ரோபோ கால்-ஆ என்று உடனடியாக டிஸ்பிளேவில் நமக்கு காட்டிவிடும். இது கால் ரெகார்டிங் வசதி உடன் வருகிறது. நீங்கள் அழைப்பில் இணைந்தவுடன் தாமாகவே அழைப்பை பதிவு செய்ய ஆரம்பித்துவிடும். இந்த ஆப் தற்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் தான் கிடைக்கிறது.

SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!

4. கால் ஆப் (CallApp)

4. கால் ஆப் (CallApp)

இதுவும் ரிவர்ஸ் போன் நம்பர் லுக் அப் டூல் ஆப்ஸின் பல வசதிகளை கொண்டுள்ளது. ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்தல், இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால்களை தானாக ரெகார்ட் செய்தல் போன்ற வசதிகளை ஆதரிக்கிறது. இந்த ஆப்ஸ் இன் தனித்துவமான அம்சமாக இதனை வியர்-ஓஎஸ் வாட்ச்களிலும் பயன்படுத்த அனுமதிக்கிறது. உங்கள் ஸ்மார்ட் வாட்சில் இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். எனவே ஒவ்வொரு முறையும் அழைப்பு வரும்போதும் அழைக்கும் எண்ணை பார்க்க நீங்கள் போனை எடுக்க வேண்டியதில்லை.

5. ஃப்ரீ-லுக்அப்.நெட் (Free-lookup.net)

5. ஃப்ரீ-லுக்அப்.நெட் (Free-lookup.net)

இது ஆப் போல் இல்லாமல் இணையதளத்தில் பயன்படுத்தப்படும் ரிவர்ஸ் போன் நம்பர் லுக் அப் டூல் ஆகும். https://free-lookup.net என்ற இணையதள முகவரிக்கு சென்று, கண்ட்ரி கோட்டு (Country Code) உடன் போன் நம்பரை உள்ளீடு செய்தால், அந்த நம்பரின் உரிமையாளர் பெயர் மற்றும் ஆப்ரேட்டர் நெட்ஒர்க் பெயர் இரண்டையும் நமக்கு காண்பித்துவிடும். இது இணையதளம் என்பதால் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் இரண்டிலும் பயன்படுத்த முடியும்.

இந்த முறைகளை பின்பற்றி இனி உங்களுக்கு வரும் Unkown Number கால்ஸ் விபரங்களை நொடியில் அறிந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Find Unknown Number Calling Details Online For Free

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X