Home
News

உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!

மக்களுக்கு இடையூறு இல்லாத, பாதுகாப்பான சாலை பயண அனுபவத்தை தருவதற்காகவும், போக்குவரத்து ஒழுக்கங்களைப் பின்பற்ற வலியுறுத்தும் வகையிலும் பல திருத்தங்களை மோட்டார் வாகன சட்டத்தில் இந்திய அரசு சேர்த்துள்ளது.

அந்த வகையில், நோ பார்க்கிங் (No Parking) இடத்தில் வாகனங்களை நிறுத்துதல், தவறான பாதையில் பயணம் செய்தல், ஹெல்மெட் (Helmet) மற்றும் சீட் பெல்ட் (Seat Belt) அணியாமல் பயணம் செய்தல் மாதிரியான பல காரணங்களுக்கு இப்போது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? உடனே செக் செய்யுங்க.!

உங்கள் வாகனத்தின் மீது உங்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் எவ்வளவு அபராதம் இருக்கிறது?

இப்படிப்பட்ட, சில அபராத சீட்டுகள் வண்டியிலேயே வைக்கப்பட்டு விடும், சில சமயம் வண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்து சென்றுவிடுவார்கள். வாகனத்தைத் திருப்பி தரச் சொல்லும் பொழுது, வாகனத்துடன் கூடவே அபராத சீட்டும் கொடுக்கப்படும். இந்த அபராத சீட்டில் எந்த காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, அபராத தொகை எவ்வளவு, எந்த தேதிக்குள் அபராதம் செலுத்த வேண்டும் போன்ற தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.

பல பேர் இந்த அபராத சீட்டை முக்கியமென்று பொருட்படுத்துவதில்லை. அலட்சியமாக அபராதம் செலுத்தாமல் மறந்துவிடுவார்கள். தெரிந்தோ அல்லது தெரியாமலோ நீங்கள் செய்யும் இந்த விஷயம் தான், உங்களை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லப்போகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அபராத தொகையைச் செலுத்தாமல் காலம் தாமதிப்பதன் மூலம், அந்த தொகை வரிசையாக, ஒன்றின் பின் ஒன்று சேர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படியே போனால், ஒரு நாள் காவல்துறை உங்கள் வாகனத்தை முற்றிலுமாக பறிமுதல் செய்யக்கூட நேரலாம். ஆகையால், உங்கள் வாகனத்தின் பெயரில் எத்தனை பெனால்டி உள்ளது அல்லது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அடிக்கடி கண்காணிப்பது அவசியம். இப்போது பல நகரங்களில், சிக்னலில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிக்னல் ஜம்பிங், செய்வோருக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.

உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? உடனே செக் செய்யுங்க.!

இது நேரடியாக உங்களுக்கு தெரியாமல், உங்கள் வாகனத்தின் மீது விதிக்கப்படுவதால், எத்தனை அபராதங்கள் உங்கள் வாகனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்வது அவசியமாகிறது. இதன் நீங்கள் ஆன்லைன் இல் செக் செய்துகொள்ளலாம்.

உங்கள் வாகனம் மீதான அபராத விபரங்களை எப்படி ஆன்லைனில் செக் செய்வது?

உங்கள் வாகனத்தின் மீது எத்தனை அபராதங்கள் உள்ளன என்பதனை தெரிந்து கொள்ள
- முதலில் இந்திய அரசின் https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற பரிவாகன் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- அதில் அபராதம் விபரங்களை தெரிந்துகொள்ள மூன்று தகவல்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
- உங்களது அபராதச் சீட்டு விபரம், வாகன எண் அல்லது ஓட்டுநர் உரிமம் என்ற மூன்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- உங்களிடம் சலான் இருந்தால், அந்த சலான் எண்ணை செலுத்தி, கேப்சா கோடு விபரத்தை டைப் செய்து லாகின் செய்யலாம்.
- சலான் இல்லாத பட்சத்தில் உங்கள் வாகன எண் அல்லது ஓட்டுநர் உரிமத்தின் எண்னை உபயோகிக்கலாம்.
- வாகன எண் என்பதனை தேர்வு செய்யும் பொழுது அதில் உங்களது வாகனத்தின் எண் மற்றும் அதன் சேஸிஸ் (Chassis) அல்லது இஞ்ஜின் (Engine) எண் ஆகியவற்றை டைப் செய்து, கேப்சாவை டைப் செய்யவும்.
- பிறகு கெட் டீடைல் (Get details) என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

டிரைவிங் லைசென்ஸ் எண் வைத்து எப்படி அபராத விபரங்களை பார்ப்பது?

- உங்கள் ஓட்டுனர் உரிம எண்ணை செலுத்திக் கொடுக்கப்பட்டுள்ள கேப்சாவை டைப் செய்து அதன் மூலமும் உள்நுழையலாம்.
- இந்த இணையதளத்தில் என்ன என்ன அபராதங்கள் என்று தெரிந்து கொள்வதை தாண்டி, அவற்றின் ஸ்டேட்டஸ் (Status) என்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
- அந்த அபராதத்தை நீங்கள் செலுத்தி விட்டீர்களா? இல்லையா? எங்கே எந்த முறையைப் பயன்படுத்திச் செலுத்தப்பட்டது போன்ற விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
- இந்த இணையதளத்தில் தகவல்களை தெரிந்து கொள்வது மட்டுமின்றி ஆன்லைனில் அபராதத்தைச் செலுத்தவும் முடியும்.
- அதற்கு பரிவாகன் இணையதளத்தின் மேலே உள்ள பே ஆன்லைன் (Pay Online) என்ற தேர்வினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- ஆன்லைன் முறைகளான நெட் பேங்கிங் (Net Banking), யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை, கிரெடிட் கார்டு (Credit card), டெபிட் கார்டு (Debit card) போன்ற அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி அபராத தொகையை செலுத்தலாம்.

இப்படி உங்கள் 2 சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் என்று எந்த வாகனமாக இருந்தாலும், அதன் மீது எவ்வளவு பெனால்டி உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
how to find penalty and fine amounts on vehicle in Tamilnadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X