உங்கள் PAN கார்டில் இந்த சிக்கல் இருக்கிறதா.. கண்டுபிடிப்பது எப்படி? எவ்வாறு சரி செய்வது?
இந்தியாவில் ஆதார் கார்டை (aadhaar card) போலவே பான் கார்டும் (PAN Card) மிகவும் அவசியம் ஆகும். அதாவது அரசாங்க சலுகைகளை பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பான் கார்டு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. குறிப்பாக அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த பான் கார்டு திடீரென்று செயலிழந்தால் நீங்கள் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒருவேளை உங்கள் பான் கார்டு செயலிழந்துவிட்டால் வங்கிப் பரிவர்த்தனைகள், வருமான வரித் தாக்கல் மற்றும் பல நிதி சார்ந்த பணிகளை செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். குறிப்பாக பான் கார்டு செயலிழக்க அல்லது முடக்கப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இந்த செயலற்ற பான் கார்டை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் மீண்டும் பான் கார்டை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

முதலி பான் செயல்படாமல் இருப்பதற்கான காரணங்களைப் பார்க்கலாம். அதாவது பான் கார்டு மற்றும் ஆதார் இணைக்காமல் போனால் பான் கார்டு செயல்படாது. அடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருந்தாலும் பான் கார்டு செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
செயலற்ற பான் கார்டை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்:
வழிமுறை-1: முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/. என்ற வருமான வரித் துறை இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
வழிமுறை-2: அடுத்து அந்த இணையதளத்தில் Quick Links எனும் பிரிவில் உள்ள Verify PAN Status எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-3: அதன்பின்பு பான் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபி நம்பரை உள்ளிடவும். அடுத்து Validate என்பதை கிளிக் செய்து, பான் கார்டு செயலில் உள்ளதா அல்லது செயலற்றதா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
அதாவது பான் கார்டு செயலில் இருந்தால் PAN is Active and details are as per PAN என்பதைத் திரையில் பார்ப்பீர்கள். ஒருவேளை செயலற்ற நிலையில் இருந்தாலும் அதை நீங்கள் திரையில் பார்க்கலாம்.
செயலிழந்த பான் கார்டை எவ்வாறு செயல்படுத்துவது?
அதாவது செயலிழந்த பான் கார்டை செயல்படுத்த வருமான வரித் துறைக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக மதிப்பீட்டு அதிகாரிக்கு Assessment Officer (AO) ஒரு கடிதம் எழுத வேண்டும். மேலும் வருமான வரித் துறைக்கு ஆதரவாக ஒரு இழப்பீட்டு பத்திரத்தை நிரப்ப வேண்டும்.

அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளாக செயலிழக்கச் செய்யப்பட்ட பான் நம்பரை பயன்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ரிட்டன்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து ஆவணங்களை பிராந்திய வருமான வரித் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்பு பான் கார்டு மீண்டும் இயக்கப்படுவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. குறிப்பாக வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் கார்டை (Aadhaar Card) பான் கார்டுடன் (pan card) இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு உங்கள் பான் செயல் இழக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








