Just In
- 1 hr ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 14 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 15 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
- 15 hrs ago
பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
Don't Miss
- News
தமிழ்நாடு சிறந்த இடம்.. தமிழின் சிறப்பு பலருக்கும் தெரியல.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
- Movies
உண்மையிலேயே இஞ்சி இடுப்பழகி தான்... பிக் பாஸ் பாவனி ரெட்டியால் உறைந்து போன ரசிகாஸ்!
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
உங்க போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? இந்த அறிகுறியில் 1 தெரிஞ்சா கூட அலெர்ட் மக்களே.!
இன்றைய காலகட்டத்தில் நம் அனைவரிடமும் ஒரு ஸ்மார்ட்போன் (smartphone) சாதனம் இருக்கிறது. நம்மை பற்றிய பல பிரைவேட் தகவல்கள் மற்றும் முக்கிய விபரங்கள் அனைத்தும் இப்போது ஸ்மார்ட்போனில் தான் ஸ்டோர் செய்து வைக்கப்படுகிறது. இதனால் தானோ என்னவோ, ஸ்மார்ட்போன்களுக்கான ஆபத்து அதிகரித்துவிட்டது. நீங்களும் ஒரு ஸ்மார்ட்போன் பயனர் என்றால் கட்டாயமாக இந்த பதிவைப் படியுங்கள்.

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து.! உஷார் மக்களே.!
நாளுக்கு நாள், ஸ்மார்ட்போன் மீதான சைபர் தாக்குதல்கள், ஹேக்கிங் தாக்குதல்கள் போன்ற பல மோசடி விஷயங்கள் தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இருப்பினும், பல நேரங்களில் நமக்குத் தெரியாமல் சில தந்திரங்களை ஹேக்கர்கள் பயன்படுத்தி நம் சாதனத்தை ஹேக் செய்துவிடுகிறார்கள்.

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது?
சில அறிகுறிகளை வைத்து உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா என்பதை நாம் எளிமையாக அறிந்துவிடலாம். இந்த அறிகுறிகள் உங்கள் போனிலும் காணப்படுகிறதா என்று உடனே செக் செய்யுங்கள். அப்படி இதில் ஏதேனும் ஒரு விஷயம் உங்கள் போனில் தெரிந்தால் கூட, உடனே அவற்றை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பதையும் இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.

கவனிக்க வேண்டிய முதல் விஷயமே இது தான்.!
நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், ஸ்மார்ட்போன் ஹீட்டிங் சிக்கலாகும். உங்களுடைய போன் வாங்கிய புதிதில் நார்மலாக இருந்துவிட்டு, திடீரென சில காலமாக மட்டும் ஓவர் ஹீட் ஆகிறது என்றால் உஷார் மக்களே. இந்த அறிகுறி தெரிந்தால் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்று பொருள். கேம் அல்லது வீடியோ அழைப்பின் போது போன் சூடாவது இயல்பு, மற்ற நேரங்களில் ஹீட் ஆகினால் கவனம் தேவை.

போனில் பேசும் போது 'இந்த' அறிகுறி தெரிஞ்சா அலெர்ட்.!
அடுத்த அறிகுறி, உங்கள் போனை பயன்படுத்தும் போது அடிக்கடி சில தொந்தரவுகள் ஏற்பட்டால் உடனே உஷாராகிவிடுங்கள். நீங்கள் வாய்ஸ் கால்ஸ் அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏதேனும் இரைச்சல் அல்லது எதிரொலியை கேட்டால் கவனம் தேவை. இந்த அறிகுறி தெரிந்தால், உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனை யாரோ ஒட்டுக்கேட்கிறார் என்று அர்த்தமாகும்.

உங்கள் போனின் வேகம் குறைஞ்சுடுச்சா? அப்போ இது கூட காரணமாக இருக்கலாம்?
உங்கள் போனின் பெர்பார்மென்ஸ் முன்னர் போல் இல்லையென்றால், உடனே நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போன் வழக்கம் போல செயல்படுகிறது என்றால் பிரச்சனை இல்லை. ஆனால், அதுவே உங்களுடைய போன் மெதுவாக வேலை செய்கிறது என்றால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்படுகிறீர்கள்.

இந்த மோசடி வலையில் சிக்கிவிடாதீர்கள்.! கவனமாக இருங்கள்.!
அதிகப்படியான விளம்பரங்களை உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். நீங்கள் போன் பயன்படுத்தும் போது தேவையில்லாத விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், எதோ ஒரு தேவையில்லாத லிங்க் ஐ கிளிக் செய்து விளம்பர மோசடி வலையில் நீங்கள் சிக்கிவிட்டிர்கள் என்பது பொருளாகும்.

இதை ரொம்ப உன்னிப்பா கவனிக்க வேண்டும்.! மறக்காமல் செக் செய்யுங்கள்.!
அடுத்தபடியாக நீங்கள் உன்னித்துக் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமே இது தான். உங்கள் போனில் உள்ள டேட்டா எவ்வளவு வேகமாக வீணாகிறது என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும். உங்கள் போனை நீங்கள் அதிகம் பயன்படுத்தாத போதும், உங்கள் டேட்டா வேகமாக தீர்ந்துவிடுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் போனில் திருட்டுத்தனமான மொபைல் ஆப்ஸ் இருக்கிறதா?
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஸ்மார்ட்போனில் எதுவும் மொபைல் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதை செக் செய்யுங்கள். அப்படி எதுவும் இருந்தால், அவற்றை உடனே டெலீட் செய்துவிடுங்கள். இந்த அறிகுறிகளை உங்கள் போனில் நீங்கள் கண்டால் உடனே அலர்ட் ஆகிவிடுங்கள்.

கை தவறிக்கூட இதை மட்டும் செஞ்சுடாதீங்க.!
அதேபோல், முன்பின் தெரியாத மொபைல் எண்களில் இருந்து மெசேஜ் அல்லது மெயில் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ்களை பெற்றால், கூடுதல் கவனத்துடன் இருப்பது சிறப்பானது. குறிப்பாக, அடையாளம் தெரியாத எண்களில் இருந்து பெறப்படும் லிங்க் ஐ கை தவறிக்கூடத் தொட்டுவிடாதீர்கள். அப்படித் தொடும் பட்சத்தில், உங்கள் போன் சில நொடிகளில் ஹேக் செய்துவிடப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? என்ன செய்தால் ஹேக் செய்யப்பட்ட போனை சரி செய்யலாம்?
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்கள் போனில் இருப்பது போல உணர்ந்தால் உடனே இதைச் சரி செய்துவிடுங்கள். காலம் தாமதிக்காமல், உங்கள் போனில் உள்ள முக்கியமான டேட்டா அனைத்தையும் வேறொரு இடத்தில் Copy செய்துவிட்டு, உங்கள் போனை Factory Reset செய்துவிடுங்கள். Factory Reset செய்யும் போது, உங்கள் போனில் வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ அப்படி புதிதாகிவிடும்.

பாதுகாப்பாக இருக்க அடுத்த முறை மறக்காமல் இதையும் செஞ்சுடுங்க..
உங்கள் போனில் இருக்கும் வைரஸ், மால்வேர், போல்ட்வேர் போன்ற அணைத்து வகையான தீம்பொருள்களும் அதில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும். உங்கள் போனில் இருந்த ஒட்டுமொத்த டேட்டாவும் அளிக்கப்படும் என்பதனால், பேக்கப் எடுத்து வைக்க மறக்காதீர்கள். அடுத்த முறை உங்கள் போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, ஆன்டி வைரஸ் போன்ற பாதுகாப்பு சாப்ட்வேர் ஆப்ஸ்களை பயன்படுத்துங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470