வாட்ஸ்அப் மூலம் COVID-19 தடுப்பூசி மையத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

|

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் உக்கிர தாண்டம் ஆடி வருகிறது என்ற தான் கூறவேண்டும். மேலும் இந்த கொரோனா வைரஸ்-ஐ கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.

மீண்டும் 2-வது அலை

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல்அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

அலையின்போது கொரோனா

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள்மக்களை எச்சரித்து வருகின்றனர்.

வைரல் வீடியோ: ATM அறையிலிருந்து 'அதை' ஏன்யா திருடான? ரொம்ப சீப்பான திருட்டு.. ஆனா மற்றவருக்கு ஆபத்து..வைரல் வீடியோ: ATM அறையிலிருந்து 'அதை' ஏன்யா திருடான? ரொம்ப சீப்பான திருட்டு.. ஆனா மற்றவருக்கு ஆபத்து..

கொரோனா ஹெல்ப் டெஸ்க்

கொரோனா ஹெல்ப் டெஸ்க்

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் கொரோனா ஹெல்ப் டெஸ்க் (MyGov Corona Helpdesk) மூலம் அருகாமையில் இருக்கும் தடுப்பூசி மையத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: விரைவில் அட்டகாசமாக வரும் ரெட்மி நோட் 10 எஸ்- விலை கம்மிதான்!இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: விரைவில் அட்டகாசமாக வரும் ரெட்மி நோட் 10 எஸ்- விலை கம்மிதான்!

ட்விட்டர் வழியே வந்த தகவலின்படி, ஒருவர் வாட்ஸ்அப் செயலியில் 9013151515 என்ற எண்ணில் Namaste என்று டைப் செய்ய வேண்டும். அதன்பின்பு chatbot ஒரு தானியங்கு பதிலை உருவாக்கும். அதில் உங்களுக்கு அருகில் உள்ள கோவிட் தடுப்பூசி மையத்தைக் கண்டுபிடிக்க உங்களது ஊரின் ஆறு இலக்க பின்(PIN) குறியீட்டை டைப் செய்ய வேண்டும்.

Cowin வலைத்தளத்தின்

அடுத்து உங்களுக்கு அருகாமையில் இருக்கும் தடுப்பூசி மையங்களின் பட்டியலுடன், MyGovIndia chat bot ஆனது Cowin வலைத்தளத்தின் மூலம் கோவிட் -19 தடுப்பூசி பதிவுக்கான இணைப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி பல்வேறு மக்களுக்கு உதவியாக இருக்கும்.

ஹெல்ப் டெஸ்க்

மேலும் இந்த ஹெல்ப் டெஸ்க் ஆனது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி இரண்டையும் ஆதரிக்கிறது. அனைவரும் ஆங்கிலத்தைதான் அதிகளவு பயன்படுத்துவார்கள் என்றாலும், ஒருவர் இதில் ‘இந்தி' அல்லது हिंदी என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம்மொழியை இந்திக்கு மாற்றலாம். குறிப்பாக தடுப்பூசி மையங்களை எளிமையாககண்டுபிடிக்க இந்த வசதி அருமையாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Find COVID-19 Vaccine Center With WhatsApp: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X