தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் எவ்வாறு புகார் தெரிவிப்பது?

By Karthikeyan
|
தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் எவ்வாறு புகார் தெரிவிப்பது?

தொலைத் தொடர்பு சேவையை நடத்தி வரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் எம்என்பி (மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி) விண்ணப்பங்களை நிராகரித்தால் அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று புதிதாக வந்திருக்கும் தொலைத் தொடர்பு விதிகள் (டிஆர்எஐ) கூறுகின்றன.

அதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளை சரியான இடத்தில் புகார் செய்ய வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் எடுத்து செல்ல வேண்டும். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எம்என்பி விண்ணப்பங்களை நிராகரித்தால் அதை எவ்வாறு புகார் செய்வது.

முதலில் சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்தின் டோல் பிரீ எண்ணிற்கு அழைத்து புகாரை பதிவு செய்ய வேண்டும். உடனே டெல்கோவிலிருந்து, நாம் புகார் செய்த நேரம், எண், மற்றும் தேதி ஆகிய குறிப்புகள் அடங்கிய எஸ்எம்எஸ் நமக்கு வரும். அவ்வாறு எஸ்எம்எஸ் வரவில்லை என்றாலும் கஸ்டமர் கேர் நபரிடம் பேசும் போதே அவர் புகார் எண்ணைத் தருவார் அதைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எப்போது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்பதையும் அவர் தெரிவிப்பார். அதையும் நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்த பிறகும் நமக்கு திருப்தி இல்லை என்றால் அல்லது அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால் ரிடெசஸல்க்கான உயர் அப்பலட் அதிகாரிகளை அனுகலாம். அவர்களின் தொடர்பு எண்கள் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வெப்சைட்டில் இருக்கும். அல்லது சிம் கார்டு வாங்கும் போது தரப்படும் சிறிய புத்தகத்தில் அவர்களின் தொடர்பு எண்கள் இருக்கும்.

அப்பலட் அதிகாரிகளிடம் நமது புகார்களைத் தெரிவிக்கும் போது, குறைகளை சரி செய்யக்கூடிய குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை அவர்கள் நமக்கு தருவார்கள். அவற்றை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேற்சொன்ன ஆலோசனைகளை கடைபிடித்தால் நமது குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

அவ்வாறு நிவர்த்தி செய்யப்படாத பட்சத்தில் நாம் இந்திய தொலைத் தொடர்பு துறையை அணுகலாம். அல்லது நீதிமன்றத்தை (டிஒடி)அணுகலாம். அதாவது ஒரு மனுவை எழுதி DoT, Facilitation Counter, Sanchar Bhawan, 20,Ashoka Road, New Delhi-110001 என்ற முகவரிக்கோ அல்லது Public Grievances Cell, Deptt. Of Telecom, Room No. 518, Sanchar Bhawan,20,Ashoka Road, New Delhi 110001 முகவரிக்கோ அனுப்பலாம்.

அல்லது 011- 23357777 என்ற எண்ணுக்கு பேக்ஸ் செய்யலாம். அல்லது 011- 23356666 என்ற எண்ணுக்கு அழைத்து நமது புகாரைத் தெரிவிக்கலாம். மேலும் www.pgportal.gov.in என்ற இணைய தளத்திற்குள் சென்று புகார் தெரிவிக்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X