Home
News

இப்பவே PF பணத்தை எடுக்கப் போறீங்களா? இந்த ஆப் இருந்தா சுலபமாக எடுக்கலாம்..

EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக உள்ளது. அனைத்து தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் பிஎஃப் பணம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு மாதம் வாங்கும் சம்பளத்தில் இருந்து ஒரு சிறிய தொகை தனியாக சேமிப்படுகிறது.

அதே அளவு பங்களிப்பு நிறுவனத்தாலும் வழங்கப்படுகிறது. இதுதவிர பிஎஃப் பணத்துக்கு வட்டி வருமானமும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவசர காலங்களில் பெரிய அளவில் பண நெருக்கடி ஏற்படும் போதும் இந்த பிஎஃப் பணம் மிகப் பெரிய உதவியாக இருக்கிறது. அதேசமயம் நீங்கள் பிஎஃப் உறுப்பினராக இருந்து உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விருப்பம் இருந்தால் அதற்கு நீங்கள் பிஎஃப் அலுவலகத்திற்கு சென்று அலைய வேண்டியதில்லை.

இப்பவே PF பணத்தை எடுக்கப் போறீங்களா?  இந்த ஆப் இருந்தா எடுக்கலாம்..

அதாவது ஒரு ஆப் போதும் பிஎஃப் பணத்தை சுலபமான எடுக்கலாம். அதாவது மத்திய அரசின் உமாங் செயலி மூலம் உங்கள் பிஎஃப் பணத்தை நீங்கள் சுலபமாக எடுக்கலாம். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் வசதிக்காக உமாங் செயலியை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் மக்கள் பணத்தை எடுக்கலாம். பின்பு அட்வான்ஸ் தொகை மற்றும் ஓய்வூதிய உரிமைகளையும் ஆன்லைனில் நிர்வகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக உமாங் செயலியை தங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து வீட்டில் உட்கார்ந்து கொண்டே பிஎஃப் தொடர்பான பல பணிகளை முடிக்க முடியும். சரி இப்போது உமாங் செயலியை பயன்படுத்தி பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வழிமுறை-1: முதலில் உமாங் செயலியை (Umang App) கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அடுத்து அந்த செயலியை திறந்து உங்கள் ஆதார் எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

வழிமுறை-2: அந்த செயலியில் உள்நுழைந்த பிறகு பட்டியலில் இருக்கும் EPFO சேவையைத் தேர்வு செய்யவும். அதன்பின்பு Rise Claim எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வழிமுறை-3: அதன்பின்பு உங்கள் UAN எண்ணையும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபி நம்பரையும் உள்ளிடவும். அடுத்து நீங்கள் விரும்பும் வகையைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்னர் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

வழிமுறை-4: அவ்வளவுதான் உடனே உங்களது கோரிக்கைக்கான ஒப்புகை எண்ணைப் பெறுவீர்கள். இந்த எண்ணின் உதவியுடன் உங்கள் உரிமைக்கோரல் நிலையை நீங்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

இப்பவே PF பணத்தை எடுக்கப் போறீங்களா?  இந்த ஆப் இருந்தா எடுக்கலாம்..

அதேபோல் உமாங் செயலி மூலம் பிஎஃப் பேலன்ஸை எவ்வளவு இருக்கிறது என்று எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். அதாவது உங்கள் ஸ்மார்ட்போனில் உமாங் செயலியை திறந்து ஈபிஎஃப் எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Employee Centric Services என்ற பிரிவுக்கு சென்று View Passbook என்பதை தேர்வு செய்யவும்.

அதன்பின் உங்கள் UAN நம்பரை என்டர் செய்யவும். அடுத்து உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த ஒடிபி-ஐ என்டர் செய்தால், உங்கள் பேலன்ஸ் விவரங்கள் திரையில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to easily withdraw PF amount online using Umang app: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X