கலக்கல் வீடியோக்களை டவுலோட் செய்க: இதோ டிப்ஸ்!

By Super
|

கலக்கல் வீடியோக்களை டவுலோட் செய்க: இதோ டிப்ஸ்!
இன்று எந்த ஒரு விஷயமும் காட்டு தீ போல் பரவ வேண்டும் என்றால் அது வீடியோவால் சாத்தயம் என்று அடித்து கூறலாம். அப்படி பார்க்கும் வீடியோக்களை, ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று தோன்றும். எப்படி யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது? 'எப்படி' என்ற

கேள்விக்கு இந்த தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் விடை காணலாம்.

வீடியோக்களை டவுன்லோட் செய்ய முதலில் டியூப்மேட் என்ற அப்ளிக்கேஷனை ஆன்ட்ராய்டு மார்கெட் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும். அல்லது டியூப்மேட்.நெட் என்ற வலைத்தளத்தின் மூலமும் எளிதாக டவுன்லோட் வசதியினை பெறலாம்.

டியூப்மேட் அப்ளிக்கேஷனை ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்யத பின்னர், மெனு ஆப்ஷனை அழுத்த வேண்டும்.

எப்போதும் போல மெனு ஆப்ஷனை அழுத்தினால் வரும், செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் வசதியை க்ளிக் செய்வதன் மூலம் பல ஆப்ஷன்கள் புதிய விண்டோவில் திறக்கப்படும். அதில் அன்னோன் சோர்ஸ் ஆப்ஷனை ஒரு ட்டிக் அடித்து தேர்வு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நாம் முன்னமே இன்ஸ்டால் செய்து வைத்திருந்த டியூப்மேட் அப்ளிக்கேஷனை க்ளிக் செய்து, அதில் எந்த வீடியோவினை டவுன்லோட் செய்ய போகிறோம் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.

அப்படி வீடியோவினை தேர்வு செய்த பின், வீடியோவை பார்க்க மற்றும் வீடியோவினை டவுன்லோட் செய்க என்று இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இந்த இரண்டு ஆப்ஷனில் வீடியோ டவுன்லோட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து எளிதாக வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம்.

சில வீடியோக்கள் பார்த்தவுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும். அப்படி பகிர்ந்து கொள்ள முதலில் டியூப்மேட் அப்ளிக்கேஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்பது அவசியம்.

வீடியோவினை டவுன்லோடு செய்ய இன்னும் ஒரு சிறந்த வழியும் உள்ளது. அதாவது மொபைல் பிரவுசர் மூலம் டவுன்லோடு செய்வது. எந்த ஒரு ப்ளாட்ஃபார்ம் அல்லது இயங்குதளமாக இருப்பினும் அதற்கு என்று பிரத்தியேகமான மொபைல் பிரவுசர் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த மொபைல் பிரவுசரை பயன்படுத்தி அதில் யூடியூப் வீடியோவினை தேட (சர்ச்) வேண்டும். இப்படி வீடியோவினை தேடி, தேர்வு செய்த பின்னர் அதை டவுன்லோட் செய்யலாம். அப்படி டவுன்லோட் செய்யும் முன் ஒரு விஷயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த வீடியோவினை டவுன்லோட் செய்கிறோமோ அந்த லிங்கில் பிடபில்யூஎன் (pwn) என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும். உதாரணத்திற்கு http://www.youtube.com/ என்ற லிங்க் இருக்கிறது என்றால், இதில் pwn என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் (http://www.pwnyoutube.com/).

இப்படி பிடபில்யூஎன் என்ற வார்த்தையை லிங்கில் சேர்த்த பிறகு, என்ட்டர் பட்டனை அழுத்த வேண்டும். இதன் பின், டவுன்லோட் ஹை குவாலிட்டி எம்பி4 வீடியோ என்ற மெசேஜிற்கு, ஓகே என்று க்ளிக் செய்ய வேண்டும். பிறகு டவுன்லோட் ஆக ஆரம்பித்துவிடும். இப்படி டவுன்லோட் செய்த பின்னர், நமது ஆன்ட்ராய்டு மொபைலில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோ மைக்ரோஎஸ்டி கார்டில் சேவ் செய்யப்பட்டுவிடும்.

இதில் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பிடபிள்யூஎன் வார்த்தை லிங்க்கில் சேர்க்க வேண்டும் என்பது தான். இந்த கோடு வார்த்தை, மொபைல் பிரவுசருக்கு தகுந்த வகையில் வேறுபடும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X