YouTube ஷார்ட்ஸ் வீடியோவை இப்படி ஈஸியா டவுன்லோட் செய்யலாமா? சபாஷ் டே! சூப்பர் டிப்ஸ்லே!
YouTube பயன்படுத்தாத நபர்களே இன்று கிடையாதென்று சொல்லலாம். பச்சிளம் குழந்தைகள் முதல் பல்லு போன பெரியவர்கள் வரை அனைவரும் யூடியூப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, இப்போது மக்கள் யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) வீடியோவை அதிகமாகப் பார்வையிடுகிறார்கள். இந்த வீடியோவை டவுன்லோட் செய்வதெப்படி?
யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ என்பது டிக்டோக்கிற்கு போட்டியாக 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சிறிய வீடியோ சேவையாகும். அதன் பின்னர் இந்த அம்சம் பெரும் புகழ் பெற்றது. ஜூன் 2022 நிலவரப்படி, ஷார்ட்ஸிற்கான உள்நுழைந்த பயனர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியனுக்கு மேல் இருப்பதாக யூடியூப் கூறுகிறது. இன்னும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

என்ன தான் இந்த யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ தளம் மிகவும் பிரபலமாக இருந்தாலும், சில அம்சங்கள் இந்த வீடியோ தளத்தில் இல்லை என்பதே உண்மை. குறிப்பாக, பொதுவான யூடியூப் வீடியோக்களை நாம் ரீவைண்ட் மற்றும் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து பார்க்க முடியும். ஆனால், யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவில் அத்தகைய சேவை கிடையாது. அதேபோல், யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவை டவுன்லோட் செய்ய முடியாதென்று பலர் கருதுகின்றனர்.
ஆனால், விஷயம் அப்படி இல்லை. யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவையும் உங்களால் டவுன்லோட் செய்ய முடியும் என்பதே உண்மை. வழக்கமான யூடியூப் வீடியோக்களை நாம் எப்படி டவுன்லோட் செய்ய முடியுமோ அதேபோல், யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவையும் நாம் டவுன்லோட் செய்து சேவ் செய்துகொள்ளலாம். இதை எப்படி செய்வதென்ற தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் YouTube ஆப்ஸை ஓபன் செய்யுங்கள்.
யூடியூப் பட்டியில் இருந்து Shorts வீடியோ வகைக்குச் செல்லவும்.
இப்போது நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் ஷார்ட்ஸ் வீடியோவை முடிவு செய்துகொள்ளுங்கள்.
அந்த வீடியோவின் வலது பக்கத்தில் இருக்கும் 'Share' பட்டனைத் தட்டவும்.
இப்போது 'Copy Link' என்பதைக் கிளிக் செய்யவும்.

அடுத்தபடியாக உங்கள் போனில் உள்ள வெப் பிரௌசரை ஓபன் செய்யவும்.
இப்போது Save-from.net என்ற இணைய பக்கத்திற்குச் செல்லவும்.
இங்கே நீங்கள் Copy செய்த வீடியோ லிங்க்கை Paste செய்ய வேண்டும்.
YouTube Shorts வீடியோ URL-ஐ சரியாக பேஸ்ட் செய்த பிறகு Download பட்டனை அழுத்தவும்.
வீடியோ குவாலிட்டியை தேர்வு செய்து டவுன்லோட் கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான் உங்கள் போனின் Download போல்டரில் வீடியோ சேவ் செய்யப்பட்டிருக்கும்.
இதேபோல், ஷார்ட்ஸ்னூப் (Shortsnoob), 10 டவுன்லோடர் (10downloader) அல்லது சேவ்டியூப் (SaveTube) போன்ற பிற இணையதளங்களையும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ டவுன்லோட் செய்ய நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது கூடுதல் டிப்ஸ். மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைக்கு நெருக்கமான செயல்முறைகளைத் தான் மற்ற தளங்களும் கொண்டுள்ளது என்பதனால், இனி யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவை உங்கள் விருப்பம் போல டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
இதே செயல்முறையை பின்பற்றி, நீங்கள் பொதுவான யூடியூப் வீடியோவையும் டவுன்லோட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் யூடியூப் வீடியோவின் லிங்க்-ஐ Copy செய்து, Save-from.net பக்கம் சென்று Paste செய்து வீடியோவை HD தரத்தில் கூட டவுன்லோட் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








