டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!
இன்னும் இரண்டு மாதங்களில் கேரளா, அசாம்,மேற்கு வங்காளம்,புதுச்சேரி மற்றம் தமிழகம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே துவங்கி விட்டது. இந்நிலையில் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்வுள்ளது தேர்தல் கமிஷன்.

குறிப்பாக இந்த கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பணிகள் தற்போது மின்னணு முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சுங்கச்சாவடிகள், விமான நிலையம் போன்ற பல நுழைவு இடங்களில் டிஜிட்டல் முறையிலான ஆவணங்களே தற்போது பயன்படுத்தப்படுகிறது. எனவே இதைப்போல வாக்குச்சாவடிகளிலும் டிஜிட்டல் முறையிலான மின்னணு வாக்களர் அடையான அட்டையை வாக்காளர்கள் பயன்படுத்துவதற்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது. அதன்படி இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பிடிஎஃப் பார்மேட்டில் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில், வாக்காளர் பட்டியில் இடம் பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கும் இது கிடைக்கும். அவர்கள் தங்களது செல்போன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும்.

அதேபோல் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்று உள்ள, செல்போன் எண்ணை பதிவு செய்த பழைய வாடிக்கையாளர்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த மின்னணு அட்டையில் வாக்காளர்களின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம்பெற்றிருக்கும். பின்பு கியூ ஆர் கோடு பயன்பாட்டை கொண்டதாக இந்த அடையாள அட்டை இருக்கும். எனவே இதை செல்போனில் பதிவிறக்கம் செய்து எளிமையாக சேமித்துக்கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?
மின்னணு அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ என்கிற வலைத்தளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். மேலும் இந்த இணயதளத்தில் லாகின் செய்த பின்பு, E- EPIC என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதேபோல் இதை காலை 11.14 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








