"ஆல் தி பெஸ்ட்"- 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

|

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

பத்தாம் வகுப்பு சான்றிதழ்

பத்தாம் வகுப்பு சான்றிதழ்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பத்தாம் வகுப்பு சான்றிதழ்களை ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 11 மணிமுதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://tnresults.nic.in/
http://results.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

பிறந்த தேதி, பதிவெண்

பிறந்த தேதி, பதிவெண்

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளித்தில் தங்களுக்கான பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை பதிவிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து பள்ளி மாணவர்களும் இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களின் பிறந்த தேதி, தேர்வு எண் ஆகியவை அவர்கள் பள்ளிகள் சமர்பித்திருக்கும் உறுதி மொழி படிவத்தில் குறிப்பிட்டிருக்கும் செல்போன் எண்களுக்கு ஆகஸ்ட் 21 முதல் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது.

மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்

மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்

இந்த www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் சான்றிதழை வைத்து 11 ஆம் வகுப்பு அல்லது பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு

பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் ஒன்றாம் தேதிமுதல் 12 ஆம் தேதி வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் வகுப்புகள் செயல்படும் முறை குறித்து அடுத்ததாக 15 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையரங்க பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி

பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி

மேலும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது. கடற்கரையில் கடை வைத்திருப்பவர்கள் தடுப்பூசி போட்டிருப்பதையும் உறுதி செய்யப்பட வேண்டும். உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் பத்து மணி வரை செயல்படலாம், ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

File images

Best Mobiles in India

English summary
How to Download SSLC Marksheets: Tamilnadu 10th Results 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X