Home
News

Instagram ரீல்ஸ் வீடியோவை இப்படி ஈஸியா டவுன்லோடு செய்யலாமா? அடடா இது தெரியாம போச்சே!

இந்த மொபைல் போனை எவன் கண்டுபுடுச்சானோ.. அவன் மட்டும் என் கையில கிடைச்சான் அவ்வளவு தான்.. மொத அந்த போனை ஓரமா வச்சுட்டு சொன்ன வேலைய பாரு என்று அக்கம் பக்கம் வீடுகளிலும், நம்முடைய வீட்டிலும் இத்தகைய டயலாக்கள் ஒலிக்க கேட்டிருப்போம்.

ஸ்மார்ட்போன்களுக்குள் நாம் ஆழ்ந்து முங்கிவிட்டதற்கு இன்ஸ்டாகிராம் (Instagram) ஒரு முக்கிய காரணமாகும். அதிலும் ரீல்ஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, நம்முடைய தலைகள் மொபைலை விட்டு வெளியில் வருவதே இல்லை. எந்நேரமும் மொபைலிற்குள் நமது கவனத்தை புதைத்துவிடுகிறோம். இப்படி நாள் முழுக்க போர் அடிக்காமல் ரீல்ஸ் (Instagram Reels) பார்ப்பதை ஒரு முழுநேர பொழுதுபோக்காகவே சிலர் பின்பற்றி வருகின்றனர்.

Instagram ரீல்ஸ் வீடியோவை இப்படி ஈஸியா டவுன்லோடு செய்யலாமா?

அவர்களை குறை சொல்லியும் பயனில்லை. காரணம், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அவ்வளவு சுவரைசியமானதாக இருக்கிறது. அணைத்து வகையான பயனர்களை கவரும் விதத்தில், பல கோடி வீடியோகள் இன்ஸ்டாகிராமில் தினம்-தினம் நிறைந்து வருகிறது. இப்படி நாம் பார்க்கும் பல ரீல்ஸ்களில், சில வீடியோக்களை நாம் அதிகம் விரும்பியிருப்போம். அந்த வீடியோக்களை டவுன்லோட் செய்ய ஆசைப்பட்டிருப்போம். ஆனால், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை டவுன்லோட் (Instagram Reels Video Download) செய்ய அனுமதிப்பதில்லை.

இதற்கு பதிலாக, இன்ஸ்டாகிராம் அந்த வீடியோவை உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் சேவ் செய்துகொள்ள மட்டும் அனுமதிக்கிறது. இருப்பினும், சில இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை நீங்கள் டவுன்லோட் செய்ய ஆசைப்பட்டால், அதற்கும் ஒரு வழி உள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வதென்று தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். வாருங்கள் நேரடியாக விஷயத்திற்கு செல்லலாம். முதலில், இன்ஸ்டாகிராம் இல் ரீல்ஸ் வீடியோக்களை எப்படி சேவ் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை எப்படி சேவ் செய்வது?
உங்கள் மொபைலில் Instagram சென்று Reels என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் சேவ் செய்ய விரும்பும் ரீல்ஸ் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
மூன்று-புள்ளி ஐகானைத் தட்டிய பிறகு 'Save' என்பதைக் கிளிக் செய்யவும்.
ரீல்ஸ் சேவ் செய்யப்படும்.
சேவ் செய்த ரீல்ஸ்களைப் பார்க்க, நீங்கள் இன்ஸ்டாகிராம் மெயின் பக்கத்திற்குத் திரும்ப வேண்டும்.

Instagram ரீல்ஸ் வீடியோவை இப்படி ஈஸியா டவுன்லோடு செய்யலாமா?

அடுத்து, உங்கள் ப்ரொஃபைல் ஐகானைத் தட்டவும்.
மூன்று வரி ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
செட்டிங்ஸ் மெனுவிலிருந்து Account என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் சேவ் செய்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பார்க்க வீடியோவை கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான்.. இப்படி தான் உங்களுக்கு பிடித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை சேவ் செய்து, மீண்டும் பார்க்க வேண்டும்.

சரி, இப்போது எப்படி உங்களுக்கு பிடித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை டவுன்லோட் செய்து பார்க்கலாம் என்பதை பார்ட்டி தெரிந்துகொள்ளலாம் வாங்க. குறிப்பிடத்தக்க வகையில், பல்வேறு மூன்றாம் தரப்பு தளங்கள் மற்றும் பயன்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் Instagram ரீல்ஸ்களை நீங்கள் டவுன்லோட் செய்யலாம். இதை செய்ய கீழே உள்ள செயல்முறைகளை பின்பற்றவும்.

Instagram ரீல்ஸ் வீடியோவை இப்படி ஈஸியா டவுன்லோடு செய்யலாமா?

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளான iGram, Ingrammer, Clipbox மற்றும் OBS Studio போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்த குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று, நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் Instagram Reels வீடியோவின் URL ஐ Copy செய்துகொள்ளுங்கள்.
காப்பி செய்யப்பட்ட URL-ஐ இந்த iGram, Ingrammer, Clipbox தளங்களில் தரப்படும் டவுன்லோட் பாரில் பேஸ்ட் செய்யவும்.

அடுத்து, பக்கத்தின் கீழே சென்று "Download.mp4" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ டவுன்லோடு செய்யப்படும்.
ஆஃப்லைனில் இருக்கும் போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இனி டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை கண்டு மகிழலாம்.
இதற்கான மொபைல் ஆப்ஸ்களை நீங்கள் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
அல்லது வெப் பிரௌசர்களில் இந்த இணையதள பக்கங்களை ஓபன் செய்து நேரடியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதே அம்சத்தை பயன்படுத்தி உங்களால் இன்ஸ்டாகிராம் போஸ்ட், இன்ஸ்டாகிராம் போட்டோஸ் போன்றவற்றையும் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்பது கூடுதல் டிப்ஸ் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How To Download Instagram Reels Video Easily Using Third Party Mobile Apps and Website Directly
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X