பேடிஎம் இருக்கா? வந்தது புதிய அம்சம்.. இனி இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
பேடிஎம் (Paytm) செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற செயலிகளைப் போல் இந்த பேடிஎம் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த பேடிஎம் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. தற்போது கூட இந்த பேடிஎம் செயலியில் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய அம்சம் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
அதாவது இந்தியாவில் முக்கிய நகரங்கள் முதல் உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். அதுவும் யுபிஐ (UPI) செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, மளிகை கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக யுபிஐ செயலிகள் மூனம் விரைவாக பணம் அனுப்ப முடியும் என்பதால் தான் தற்போது அதிக மக்கள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேடிஎம் செயலியில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேடிஎம் பயனர்கள் இனி Excel வடிவத்தில் அனைத்து பரிவர்த்தனைகளுக்கான அறிக்கையையும் பதிவிறக்கம் செய்யும் வகையில் புதிய அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இந்த புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு யுபிஐ கட்டணங்களின் மாத அறிக்கையைப் பெற முடியும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் Bank Statement போன்று இனி யூபிஐ மூலம் செய்யும் கட்டணங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் டவுன்லோட் செய்து எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பேடிஎம் கொண்டுவந்துள்ள இந்த புதிய அம்சத்தின் நோக்கம் என்னவென்றால், யுபிஐ பயனர்கள் தாங்கள் செய்யும் அனைத்து வரவு, செலவுகளைக் கண்காணிக்கவும், தேவையில்லாத செலவுகளையும் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் எனவும், பயனர்கள் இதற்காக எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த புதிய அம்சத்தின் உதவியுடன் பேடிஎம் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட தேதி அல்லது முழு நிதியாண்டுக்கான அறிக்கையை பிடிஎப் (PDF) மற்றும் Excel வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது Paytm UPI அறிக்கையைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.
Paytm UPI அறிக்கையைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்
வழிமுறை-1: முதலில் பேடிஎம் செயலியை திறக்கவும். அடுத்து இருப்பு மற்றும் வரலாறு (Balance & History) பகுதிக்குச் செல்லவும்.
வழிமுறை-2: அதன்பின்பு payment history கீழே டவுன்லோடு ஆப்ஷன் தெரியும், அதை கிளிக் செய்யவும்.
வழிமுறை-3: அடுத்து நீங்கள் அறிக்கையைப் பதிவிறக்க விரும்பும் தேதியைக் கிளிக் செய்யவும். அதன்பின்னர் எக்செல் (Excel) வடிவமைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான் உங்கள் UPI கட்டண அறிக்கை எக்செல் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
குறிப்பாக பேடிஎம் கொண்டுவந்துள்ள இந்த புதிய அம்சம் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் பேடிஎம் செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த பேடிஎம் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது, அதேசமயம் சுலபமாகவும் இதைப் பயன்படுத்த முடிகிறது. எனவே தான் இந்த பேடிஎம் செயலியை இந்தியா முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications








