வல்லவனுக்கு வல்லவன்: வாட்ஸ்அப்-க்கு எதிராக சிக்னல் சேவை- இதை பயன்படுத்துங்க எலான் மஸ்க்கே சொல்லிட்டாரு!
சிக்னல் பயன்பாட்டை பயன்படுத்தும்படி உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து சிக்னல் பயன்பாடு பிரபலமடைந்து வருகிறது. சிக்னல் பயன்பாட்டின் முழு விவரங்களை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை
வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்து அறிவித்துள்ளது. அதோடு அனைத்து பயனர்களும் இந்த தனியுரமை கொள்கை புதுப்பித்தலை கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் அப்படி செய்ய தவறும் பட்சத்தில் கணக்கு அழிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

சிக்னல் பயன்பாட்டை தேர்ந்தெடுக்கும் பயனர்கள்
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கையை புதுப்பித்ததன் காரணமாக பல பயனர்கள் சிக்னல் பயன்பாட்டுக்கு மாறுவதாக கூறப்படுகிறது. சிக்னல் பயன்பாடு என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

குறைகள் தீர்க்கப்பட்ட சிக்னல் பயன்பாடு
சிக்னல் பயன்பாட்டை முறையாக கையாள முடியவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஏணைய பயனர்கள் பயன்பாட்டில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் சிக்னல் பயன்பாட்டில் உள்ள அனைத்து குறைபாடுகளும் தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐபோன், ஐபாட், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் அணுகல்
சிக்னல் 2014 முதல் பயன்பாட்டில் உள்ளது. தனியுரிமையை மையமாகக் கொண்ட செய்தி பரிமாற்ற பயன்பாடாகும். சிக்னல் பயன்பாட்டின் டேக்லைனானது ‘Say Hello to Privacy'(தனியுரிமைக்கு வணக்கம் சொல்லுங்கள்) என்பதாகும். சிக்னல் செய்தி பகிரல் பயன்பாடானது ஐபோன், ஐபாட், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் உள்ளிட்டவைகளுக்கு அணுக கிடைக்கிறது. இந்த பயன்பாடானது சிக்னல் பவுண்டேஷன் மற்றும் சிக்னல் மெசேஞ்சர் எல்எல்சி உருவாக்கியுள்ளது. இந்த பயன்பாடான லாப நோக்கமற்று உருவாக்கப்பட்டதாகும். சிக்னல் மெசஞ்சரின் தலைமை நிர்வாக அதிகாரி மோக்ஸி மார்லின்ஸ்பைக் ஆவார்.

சிக்னல் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது
சிக்னல் ஃபவுண்டேஷனை மோக்ஸி மார்லின்ஸ்பைக் மற்றும் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். முற்றிலும் இலவச பயன்பாடான சிக்னல் மூலம் பயனர்கள் செய்திகளை பகிரவும், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், நண்பர்களுடன் புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்களை பகிரவும் அனுமதிக்கிறது. சிக்னல் செயலியில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் வீடியோ அழைப்பு அம்சம் கொண்டுவரப்பட்டது. 150 பயனர்கள் வரை வீடியோ குழு அழைப்புகளை இதில் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தனியுரிமை பாதுகாப்பு அம்சங்கள்
சிக்னலில் உள்ள சில தனியுரிமை அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த பயன்பாட்டில் ரிலே அழைப்பு அம்சம் இருக்கிறது இதன்மூலம் ஐபி முகவரியை வெளிப்படுத்தாமல் சிக்னல் சேவையகம் மூலமாகவே அழைப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கிறது. மேலும் பல பிரத்தேயகா பாதுகாப்பு அம்சங்கள் இந்த செயலியில் உள்ளது.

எலான் மஸ்க் பரிந்துரைத்த பயன்பாடு
இதையடுத்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மில்லியன் ஃபாலோவர்கள் கொண்ட தனது டுவிட்டர் கணக்கில் Use Signal(சிக்னலை பயன்படுத்துங்கள்) என அழைப்பு விடுத்துள்ளார். எலான் மஸ்க் டுவிட் மூலம் ஏராளமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications