Home
News

ஆதார் அட்டையை WhatsApp மூலம் டவுன்லோட் செய்வது எப்படி? இதோ வழிமுறைகள்..

இந்தியா முழுவதும் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு நபரின் முக்கிய விவரங்கள், முகவரி பயோமெட்ரிக் என அனைத்தும் ஆதார் அட்டையில் இருக்கும். குறிப்பாக அரசு மற்றும் தனியார் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு ஆதார் (aadhaar) கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது.

அதேபோல் ஆதார் அட்டையை பெற ஒருவர் ஆதார் மையங்களுக்குத் தான் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இனி அந்த சிரமம் இருக்காது. அதாவது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஆதார் அட்டையை WhatsApp மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?

அதாவது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) ஆதார் அட்டையை எளிமையாகப் பெறுவதற்குத் தான் இந்த செயல்முறையை அறிமுகம் செய்துள்ளது. எனவே குடிமக்கள் இப்போது தங்களது வாடஸ்அப் (WhatsApp) செயலி மூலம் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு சிறப்பு எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சேவைக்காக அரசாங்கம் MyGov Helpdesk சாட்போட்-ஐ அறிமுகம் செய்தது. இந்த சாட்போட் டிஜிலாக்கர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஜிலாக்கரில் இருந்து ஆதார் மற்றும் பிற ஆவணங்களைப் பாதுகாப்பாக பெறலாம். இதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை, உங்களது ஆவணங்கள் முற்றிலும் பாதுகாப்பாகவே இருக்கும்.

வாட்ஸ்அப் மூலம் ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி?
முதலில் உங்களது போனில் MyGov Helpdesk எண்ணான +91-9013151515-ஐ சேமிக்க வேண்டும்.

அடுத்து வாட்ஸ்அப் செயலியை திறந்து, இந்த எண்ணுக்கு "Hi" அல்லது "Namaste" என்று மெசேஜ் அனுப்பவும்.

அதன்பின்னர் பல அரசு சேவைகளின் பட்டியல் தோன்றும், அதில் "Digital Aadhaar Download" என்ற விருப்பம் இருக்கும், அதை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது உங்களது ஆதார் எண்ணை உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும். பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும் அதை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.

சரிபார்ப்பு முடிந்ததும். உங்களது ஆதார் அட்டை பிடிஎப் வடிவத்தில் உங்கள் வாட்ஸ்அப் சாட்டில் கிடைக்கும்.

உங்கள் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யப்பட்டதும், அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம், யாருக்காவது அனுப்பலாம் அல்லது பிரிண்ட் கூட எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக யுஐடிஏஐ (UIDAI) இணையதளத்தில் மீண்டும் மீண்டும் உள்நுழைந்து கேப்ட்சாக்களை நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது.

ஆதார் அட்டையை WhatsApp மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?

அதேபோல் ஆதார் ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையில் திருத்தங்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டண அமைப்பு அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதுவும் ஆதார் மையங்களில் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் இ-மெயில் போன்ற விவரங்களை மாற்றுவதற்கான கட்டணம், முன்னர் இருந்த ரூ. 50-ல் இருந்து ரூ. 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் பயோமெட்ரிக் தரவுகளைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 100-ல் இருந்து ரூ. 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என யூஐடிஏஐ அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to download Aadhaar card via WhatsApp? Here are the instructions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X