இணையத்திலிருந்து உங்களது தகவல்களை அழிக்க ஒரே வழி- இதுதான்.! எப்படி?
இணையத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல்களை டெலிட் செய்துவிட்டால் அது ஒருபோதும் திரும்பி வராது என்று போர்ச்.காம் பாதுகாப்பு நிபுணர் ராபர்ட் சிசிலியானோ அவர்கள் கூறுகின்றார். ஒருமுறை மின்னஞ்சல்களை டெலிட் செய்துவிட்டால் அவ்வளவுதான்.

ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்
ஷேம் நேஷன் என்பவர் இதுகுறித்து கூறியபோது இணையத்தில் ஒரு விஷயத்தை டெலிட் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். டெலிட் செய்தபின்ன நீங்கள் எவ்வளவு யோசித்தாலும் பயனில்லை. மனிதவளத் துறைகள் மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலகங்கள், மாணவர்கள் உள்பட பலர் இதனை மனதில் நினைவில் கொள்ள வேண்டும்

முழு டிஜிட்டல் விபரங்களை அழிக்கலாம்
ஆனால் அதே நேரத்தில் உங்களுடைய பழைய டேட்டாக்கள் மூலம் நீங்கள் விரும்பத்தகாத நிகழ்வுகளை சந்தித்து இருந்தால் அல்லது இழப்பை சந்தித்து இருந்தால் ஆன்லைனில் நீங்கள் பொருள் வாங்கிய விபரங்கள் திருடப்பட்டு இருந்தால் இதுபோன்ற மோசமான அனுபவங்களை உங்களுக்கு இருந்தால், உங்கள் முழு டிஜிட்டல் விபரங்களை அழிக்கலாம். அதற்கு நீங்கள் ஒருசில படிப்படியான விஷயங்களை செய்ய வேண்டும்.

நீங்கள் ஆன்லைனில் தேடிய மற்றும் பரிமாற்றம் செய்த அனைத்தையும் அறிந்து கொள்வதிலும், கூகிள் மற்றும் பேஸ்புக் கணக்குகளை முடிக்க விரும்பினாலும், சைபர் கிரைம் தொடர்பான மோசமான அனுபவங்கள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக நீங்கள் சில அத்தியாவசிய உதவிக்குறிப்புகளை நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும்.

லாப நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவார்கள்
கிரெடிட் கார்டு ஏஜென்சிகளை பொருத்தவரை லாப நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவார்கள். நம்முடைய தனிப்பட்ட தகவல்களை எடுக்க மாட்டார்கள் என்று உத்தரவாதம் கொடுத்தாலும் அதனை முழுமையாக நம்ப முடியாது என பர்ட்டி அட்வைசர் குழுமத்தின் முதன்மை ஆலோசகர் அர்மண்ட் தெரிவித்துள்ளார்.

பழைய மின்னஞ்சல்
"பழைய மின்னஞ்சல் கணக்குகளை நீக்குவதற்கு முதலில் உங்களுடைய மின்னஞ்சலின் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டு தேவைப்படும். இருப்பினும், எல்லோரும் தங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டை பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்தால் நினைவில் வைத்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. எனவே நீங்கள் உங்கள் மின்னஞ்சல் சேவை வழங்குநரை அணுகி அதனை பெற்று கொள்ளலாம். எம்.எஸ்.என் மற்றும் யாஹூ போன்ற சில மின்னஞ்சல் சேவை வழங்குநர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தாவிட்டால் தானாகவே மின்னஞ்சல் கணக்குகளை நீக்கி விடுவார்கள் என ஜெஃப் ரோமெரோ, ஆக்டிவ் டிஜிட்டலின் இணை நிறுவனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களுக்கு ஒரு புதையல் ஆகும்
உங்கள் மின்னஞ்சல் முகவரி இருக்கும்போது ஒரு ஹேக்கர் செய்யக்கூடிய ஆபத்தான விஷயங்கள் என்னென்ன என்பதை கவனிக்க வேண்டும். மின்னஞ்சல் கணக்குகளில் உள்ள முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களுக்கு ஒரு புதையல் ஆகும். மேலும் அவை பயனர்களின் பாஸ்வேர்டை மீட்டமைக்க ஹேக்கர்களுக்கு வாய்ப்பையும் வழங்கக்கூடும். எனவே நம்முடைய மின்னஞ்சல் சேவைகளுக்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதோடு மேலதிக தகவல்களை அணுகுவதற்கான திறனையும் அளிக்கக்கூடும் என ஜோ ஓ ரெய்லி, புரோ பிரிவசி.காமில் துணை ஆசிரியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலவச செயலி
நாம் இலவச செயலிகளை பெரும்பாலும் விரும்புகிறோம், ஆனால் இந்த செயலிகளை டவுன்லோடு செய்யும்போது நாம் வழங்கும் சில அனுமதிகள் அவர்களுக்கு சாதகமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆன்லைன் பரிமாற்றங்கள் மற்றும் பரிமாற்றத்தில் இருக்கும் தகவல்கள் மற்ற நிறுவனங்களுக்கு விற்கப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேக்லர் தெரிவித்துள்ளார்.

பிரேவ் பிரெளசரை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்படுகிறது
உங்களுடைய பழைய மின்னஞ்சல் கணக்குகளை நீக்கிய பின், நீங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக செயல்பட விரும்பினால் பிரேவ் என்ற பிரெளசரை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த பிரெளசர் ஓரளவு பாதுகாப்பானது என கேவனி எஸ்சிஓ சொல்யூஷன்ஸின் இணை நிறுவனர் மற்றும் செயல்பாட்டு இயக்குனர் அலெக்ஸாண்டர் கெஹோ என்பவர் தெரிவித்துள்ளார்.

ஒருசில ஆண்டுகளாக நீங்கள் டவுன்லோடு செய்த செயலிகளை பயன்படுத்தவில்லை என்றால் அதனை கண்டறிய இதனை தொடருங்கள்
1. நீங்கள் பொதுவாகப் பயன்படுத்தும் பயனர் பெயர்களை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக ஏதாவது ஒன்றில் லாகின் ஆகிவிடும் என்பதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
2. உங்கள் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். எனவே நீங்கள் சேமித்த லாகின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை சரிபார்க்கவும்.
3. உங்கள் தகவலை சேமிக்க குரோம், ஃபயர்பாக்ஸ் மற்றும் எக்ஸ்பிளோர் ஆகிய அனைத்தும் உதவுகின்றன.
4 நீங்கள் உங்களுடைய தகவல்களை மறந்துவிட்டதால், அவர்களிடம் இருப்பதாக அர்த்தமல்ல. இவற்றைக் கண்டுபிடிக்க உங்கள் அமைப்புகளை நீங்கள் சரிபார்க்கலாம்.

ஆன்லைன் பில் பரிமாற்றம்
அங்கீகரிக்கப்படாத தனிப்பட்ட நபர்களை தடுப்பதற்கான ஒரே வழி என்னவெனில் ஆன்லைனில் தோன்றும் அனைத்திலும் லாகின் செய்ய கூடாது. உங்களுக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்திவிட்டு மற்றவைகளை தவிர்த்துவிடுங்கள். இ-காமர்ஸில் பங்கேற்பது மற்றும் ஆன்லைன் பில் பரிமாற்றம் செய்வது போன்ற நவீன வசதிகளை மட்டும் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்
அனைத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட விவரங்களையும் நிரந்தரமாக அகற்ற நீங்கள் அந்த கணக்கில் இருந்து நிரந்தரமாக வெளியேறி விடவேண்டும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் டிக்டோக் போன்ற அனைத்து முக்கிய நெட்வொர்க்குகளும் கணக்கு நீக்கப்பட்டவுடன் உங்கள் தகவல்களை அழிக்கக் கோருகின்றன. இது உண்மையா என்று தெரியாது என்றாலும் இதனை செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்

அதேபோல் நீங்கள் பயன்படுத்தும் பிரெளசரில் உள்ள அனைத்து குக்கீகளையும் தற்காலிக சேமிப்பையும் நீக்கிவிடுங்கள். இதனால் பிரெளசர் மூலம் டிராக் செய்வதில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications