Instagram டெலீட் ஆகாமல் Threads கணக்கை எப்படி டெலீட் செய்வது? இதோ ஈஸி டிப்ஸ்.. இனி பயணம் வேண்டாம்..
மெட்டா நிறுவனம் (Meta) இறுதியாக இன்ஸ்டாகிராம் (Instagram) தலத்திலிருந்து த்ரெட் (Threads) ஆப்ஸ் கணக்குகளை தனித்தனியாக பிரிப்பதாகத் தெரிகிறது. அதாவது பயனர்கள் இப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைலை நீக்காமல் த்ரெட்ஸ் கணக்கை நீக்க முடியும். சரி, இதை எப்படி செய்வது?
மெட்டா நிறுவனத்திற்கு (Meta) நேரடி போட்டியாளர் ஆனா எக்ஸ் (X) என்று அழைக்கப்படும் டிவிட்டர் (Twitter) தளத்தின் பயனர்களை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சேவை தான் த்ரெட்ஸ் (Threads). பல மேம்படுத்தல்களை தொடர்ந்து இந்த தளம் பல புதிய அம்சங்களைப் பெற்று வருகிறது. இப்போது, இன்ஸ்டாகிராமிற்கான அணுகலை இழக்காமல் பயனர்கள் தங்கள் த்ரெட்ஸ் ப்ரோஃபைலை நீக்க அனுமதிக்கும் என்று சமீபத்திய தகவல் குறிப்பிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் தளத்தின் தலைவரான ஆடம் மொசெரியின் (Adam) கூற்றுப்படி, இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து, இனி பயனர்கள் அவர்கள் விரும்பிய நேரத்தில் த்ரெட்ஸ் ப்ரோபைலை நீக்க முடியும் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. இதேபோல், உங்கள் த்ரெட்ஸ் ப்ரொபைல் கணக்கை நீங்கள் நீக்க விரும்பினால், உங்கள் மொபைலில் த்ரெட்ஸ் ஆப்ஸை (Threads Apps) ஓபன் செய்து, கீழ் வலதுபுறத்தில் உள்ள ப்ரொபைல் பட்டனை பிரஸ் செய்யவும்.
த்ரெட்ஸ் கணக்கை எப்படி இன்ஸ்டாகிராம்மை இழக்காமல் டெலீட் செய்வது?
டிஸ்பிளேவின் மேல் வலதுபுறத்தில் தோன்றும் இரண்டு வரிகள் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் பத்ரெட்ஸ் ஆப்ஸ் செட்டிக்ஸ் அமைப்பிற்கு செல்லவும். இப்போது, 'அக்கௌன்ட் (Account)' என்பதை கிளிக் செய்யவும். டெலீட் ப்ரொஃபைல் அல்லது டீஆக்டிவ் ப்ரொஃபைல் (Deactive Profile) என்ற புதிய விருப்பத்தை கிளிக் செய்தால், உங்கள் த்ரெட்ஸ் அக்கௌன்ட் இல் உள்ள தகவல்கள் அணைத்தும் ஆர்கைவ் (Archive) செய்யப்படும்.
அதேபோல், டெலீட் ப்ரொஃபைல் என்ற அம்சத்தை கிளிக் செய்தால், உங்கள் த்ரெட்ஸ் கணக்குடன் இணைக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கைப் பாதிக்காமல் உங்கள் த்ரெட்ஸ் கணக்கை நீக்க அனுமதிக்கிறது. த்ரெட்ஸில் ஒரு கணக்கை நீக்குவதற்கான புதிய விருப்பம் இப்போது வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அம்சம் இப்போது எல்லோருக்கும் உடனடியாக கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
எப்படி த்ரெட்ஸ் கணக்கை டெலீட் செய்வது?
காரணம், இது ஒவ்வொரு வட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய அப்டேட் உடனடியாக அனைவருக்கும் கிடைக்காது என்று மொசெரி கூறுகிறார். இந்த ஆப்ஸை சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்க முயற்சித்தோம், ஆனால் அது எங்களுக்குக் காட்டப்படவில்லை. ஒருவேளை இன்னும் இந்தியாவிற்குள் இது களமிறக்கப்படவில்லை போல் தெரிகிறது.
இதுவரை, மெட்டா த்ரெட்ஸ் கணக்கை பயனரின் இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைத்துள்ளது. இன்ஸ்டாகிராமின் அதே நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தி பயனர்கள் X போட்டியாளருடன் உள்நுழைய இது அனுமதித்தாலும், தங்கள் த்ரெட்ஸ் கணக்கை நீக்கிய பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கையும் இழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எக்ஸ் தளத்தின் (X) போட்டியாளர் மற்றொரு பயனர் கோரிய அம்சத்தைப் பெறுகிறார். இது பயனர்கள் தங்கள் த்ரெட் இடுகைகளை Facebook மற்றும் Instagram போன்ற மெட்டாவுக்குச் சொந்தமான பிற தளங்களில் காட்ட விரும்பினால் கட்டுப்படுத்துவதை எளிதாக அனுமதிக்கிறது.
இந்த புதிய விருப்பம் 'பிற பயன்பாடுகளில் இடுகைகளைப் பரிந்துரைத்தல்' (Suggesting posts on other apps) என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் ஆப்ஸின் செட்டிங்ஸ் அமைப்புகளில் 'பிரைவசி (Privacy)' என்ற பிரிவின் கீழ் காணலாம். இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள், எந்தவித பயமும் இல்லாமல் த்ரெட்ஸ் கணக்கை டெலீட் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








