கூகுள் பே, போன் பே இருக்கா.. இனி உங்களுக்குத் தெரியாமல் பணம் போகாது.. AutoPay-வை ஆஃப் செய்யும் வழிமுறைகள்!
நாட்டில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ (upi) செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்ப முடிகிறது. அதேபோல் மின்சார பில், தண்ணீர் பில், கேஸ் சிலிண்டர், மொபைல் ரீசார்ஜ் அல்லது OTT தளங்கள் சந்தா என அனைத்திற்கும் இந்த யுபிஐ மூலம் பணம் செலுத்த முடிகிறது.
அதேபோல் இந்த யுபிஐ செயலிகளில் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்தும் சிரமத்தைத் தவிர்ப்பதற்கு யுபிஐ ஆட்டோபே (AutoPay) எனும் ஒரு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இது திட்டமிட்ட தேதியில் தானாகவே பணத்தைப் பிடித்தம் செய்யும். குறிப்பாக இந்த அம்சம் எளிதாகவும் வசதியாகவும் தோன்றினாலும், சில முக்கிய நேரங்களில் இந்த அம்சமே ஒரு பிரச்சனையாக மாறிவிடும்.

மக்கள் சில செயலிகளின் இலவச சோதனையைப் பயன்படுத்தும்போது ஆட்டோபே வசதியை அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆன் செய்துவிடுகிறார்கள். அதன்பின்பு அவர்கள் அந்த சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள். ஆனால் இந்த ஆட்டோ பே வசதியை ஆஃப் செய்ய மறந்துவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்குத் தெரியாமலேயே ஒவ்வொரு மாதமும் பணம் தொடர்ந்து பிடித்தம் செய்யப்படும்.
அதேசமயம் நீங்கள் பயன்படுத்தும் செயலியை டெலீட் செய்தாலும் இந்த ஆட்டோ பே வசதி நின்றுவிடாது. அந்த சேவைக்கான ஆட்டோ பே கட்டளையை நீங்கள் ரத்து செய்யாத வரை பணம் தொடர்ந்து பிடித்தம் செய்யப்படும். ஆகவே தேவையற்ற சந்தாக்கள் ஏதேனும் செயலில் உள்ளதாக என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்.
அதேபோல் இந்த ஆட்டோபே வசதியை நாம் எப்படி ஆஃப் செய்வது என்ற கேள்வி பலரிடம் உள்ளது. அது மிகவும் சுலபம் தான். அனைத்து முக்கியமான யுபிஐ செயலிகளிலும் அதை ஆஃப் செய்வதற்கு எளிதான வழிகள் உள்ளது. இப்போது அதற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.
கூகுள் பே (Google Pay)
நீங்கள் போனில் கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி வந்தால், அந்த செயலியில் உள்ள You பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் AutoPay திறந்து செயலில் உள்ள சேவைகளைக் காண 'லைவ்' (Live) பகுதிக்குச் செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து எந்த சேவையில் இருந்து பணம் கழிக்கப்படுகிறதோ அந்த சேவையைத் தேர்ந்தெடுத்து தானியங்கு செலுத்துதலை ரத்துசெய் (Cancel AutoPay) என்பதை கிளிக் செய்து உங்கள் யுபிஐ பின் நம்பரை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.

பேடிஎம் (Paytm)
உங்கள் போனில் பேடிஎம் செயலி இருந்தால் இந்த ஆட்டோபே வசதியை எளிதாக ஆஃப் செய்யலாம். அதாவது பேடிஎம் செயலியில் ப்ரொபைல் (Profile) பகுதிக்கு சென்று யுபிஐ செட்டிங்ஸ் ஆப்சனை (UPI Settings) திறக்க வேண்டும். அதன்பின்பு Automatic Payments அல்லது Payment Management விருப்பத்திற்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் நிறுத்த விரும்பும் பேமெண்ட் சேவையைத் தேர்ந்தெடுத்து அதை ரத்து செய்யலாம்.
போன்பே (PhonePe)
நீங்கள் போன்பே செயலி பயன்படுத்தினால் அதில் ப்ரொபைல் (Profile) பகுதிக்குச் செல்லவும். அடுத்து அங்கே பணம் செலுத்துதல் மேலாண்மை (Payment Management) அல்லது தானியங்கு செலுத்துதல் (AutoPay) விருப்பத்தைப் பார்க்க முடியும். இப்போது அந்த செயலியில் உள்ள அனைத்து தானியங்கு பணம் செலுத்தும் சேவைகளையும் காண்பிக்கும். அதில் நீங்கள் நீக்க விரும்பும் சேவையை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் நீங்கள் அதை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யலாம் அல்லது முழுமையாகவும் நீக்க முடியும்.


Click it and Unblock the Notifications








