Home
News

உங்களுக்கென்று தனியாக எப்படி ஒரு வாட்ஸ்அப் சேனலை உருவாக்குவது? ஈஸி டிப்ஸ்.. உடனே ட்ரை செய்யுங்க..

வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் இப்போது யூஸ் பண்ண துடிக்கும் அல்லது ஆசைப்படும் ஒரு அம்சமாக, வாட்ஸ்அப் சேனல் அம்சம் (WhatsApp Channel Feature) உருவாகியுள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டில் எப்படி உங்களுக்கான ஒரு சொந்த சேனலை உருவாக்குவது என்ற விபரத்தை தான் பார்க்கவிருக்கிறோம்.

WhatsApp இன் சமீபத்திய அப்டேட் மூலம் வாட்ஸ்அப் சேனல்ஸ் (WhatsApp) என்ற அம்சம் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் பயன்படுத்த கிடைக்கிறது. வாட்ஸ்அப் சேனல்கள் பயனர்கள் தங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் தனிநபர்களையும் நிறுவனங்களையும் பின்தொடர அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கென்று தனியாக எப்படி ஒரு வாட்ஸ்அப் சேனலை உருவாக்குவது?

ஒரு தனிப்பட்ட வாட்ஸ்அப் சேனலை பின்தொடர்பவர்களிடமிருந்து புதுப்பிப்புகளை தனிப்பட்ட முறையில் பெறுவதற்கு வசதியாக உள்ளது. வாட்ஸ்அப் சேனல்கள் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாக செயல்படுகின்றன. இதில் நிர்வாகிகள் உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் போல்ஸ் போன்ற வாக்கெடுப்புகளை அனுப்ப அனுமதிக்கிறது.

பயனர்கள் தங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களுடன் சீரமைக்கப்பட்ட சேனல்களைக் கண்டறிய உதவும் சர்ச் சேனல் அம்சத்தையும் WhatsApp உருவாக்கியுள்ளது. வாட்ஸ்அப் சேனல்களுக்கான அழைப்பிதழ்களை அரட்டைகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பலாம். சுவாரஸ்யமாக, வாட்ஸ்அப் சேனல் நிர்வாகியின் ஃபோன் எண் அல்லது ப்ரோஃபைல் புகைப்பட விபரங்களை பின்தொடர்பவர்களிடமிருந்து மறைக்கிறது.

அதேபோல், இந்த வாட்ஸ்அப் சேனல் அம்சம், பின்தொடர்வது பயனர்களின் தொலைபேசி எண்களை நிர்வாகிகளுக்கோ அல்லது பிற பின்தொடர்பவர்களுக்கோ வெளிப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் சேனல் நிர்வாகிகள் தங்கள் சேனலை யார் பின்தொடரலாம் மற்றும் கோப்பகத்தில் அதைக் கண்டறிய முடியுமா என்பதையும் கூடக் கட்டுப்படுத்தலாம்.

இருப்பினும், அதிக பார்வையாளர்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட சேனல்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது எப்படி உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து உங்களுக்கு சொந்தமான வாட்ஸ்அப் சேனலை உருவாக்குவது என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். இந்த புதிய வாட்ஸ்அப் சேனல் அம்சத்தை பயன்படுத்த, உங்கள் வாட்ஸ்அப் ஆப்ஸ் புதிய அப்டேட் உடன் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கு பிறகு, நீங்கள் பின்தொடர விஷயங்கள் இதோ..
1. உங்கள் சாதனத்தில் WhatsApp பயன்பாட்டைத் திறக்கவும்.
2. அப்டேட் (Update) டேப் பக்கத்திற்கு செல்லவும்.
3. இப்போது வாட்ஸ்அப் சேனல்கள் பகுதியைப் பார்வையிடவும்.
4. பிறகு, இந்த வாட்ஸ்அப் சேனல் பக்கத்தில் காண்பிக்கப்படும் பிளஸ் ஐகானைக் '+' கிளிக் செய்யவும்.
5. வாட்ஸ்அப் சேனல் உருவாக்கும் செயல்முறையைத் தொடங்க தாயாருங்கள்.

உங்களுக்கென்று தனியாக எப்படி ஒரு வாட்ஸ்அப் சேனலை உருவாக்குவது?

6. இப்போது "சேனலை உருவாக்கு" (Create channel) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
7. உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு சொந்தமான பக்கத்தில் காண்பிக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
8. நீங்கள் உருவாக்க விரும்பும் சேனலுக்கான பெயர், விளக்கம் மற்றும் ப்ரோபைல் படத்தை வழங்கவும்.
9. அணைத்து தகவலையும் நிரப்பிய பிறகு, "சேனலை உருவாக்கு" என்பதைத் தட்டவும்.
10. அவ்வளவு தான், இப்போது நீங்கள் உருவாக்க விரும்பிய வாட்ஸ்அப் சேனல் உங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்த செயல்முறையை பின்பற்றி புதிதாக ஒரு வாட்ஸ்அப் சேனலை உங்களால் உருவாக்க முடியும். வாட்ஸ்அப் அதன் மெயின் ஹோம் பேஜ் பக்கத்தில் புதிய மாற்றங்களை மாற்றம் செய்துள்ளது. இதற்கு முன்பு, வாட்ஸ்அப் மெயின் பக்கத்தில் சாட்ஸ் (Chats), ஸ்டேட்டஸ் (Status) மற்றும் கால்ஸ் (Calls) என்று 3 பிரிவுகளை கொண்டிருந்தது. ஆனால், புதிய அப்டேட்டிற்கு பிறகு இதில் வாட்ஸ்அப் நிறுவனம் சாட்ஸ் (Chats), அப்டேட் (Update) மற்றும் கால்ஸ் (Calls) என்று சிறிய மாற்றத்தை மாற்றம் செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to create WhatsApp channel with easy steps with new Update 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X